Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

Pages

    No pages created yet
    No bookmarks

    Highest Rating

        Wall

          This wall is empty

          • டாடா மோட்டார் நிறுவனம் இவி- வாகனங்களை புதிய பவர் டிரெயின் டெக்னாலஜியுடன் வெளியிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. புதிய ஜிப்டிரான்-கள் டாடா நிறுவனத்தின் எதிர்கால வாகனங்களில் பயன்படுத்தப்பட உள்ளது. முதல் இரண்டு மாடல் எலக்ட்ரிக் வாகனங்கள் அல்ட்ரோஸ், நெக்ஸன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

            டாடா நிறுவனம் தனது ஜிப்டிரான் பவர்டிரெய்ன் டெக்னாலஜியுடன் கூடிய முதல் எலக்ட்ரிக் வாகனங்களை வரும் 2020-ம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளது. அதை தொடர்ந்து அடுத்தட அறிமுகம் வரும் 2021-ம் ஆண்டில் இருக்கும் என்று தெரிகிறது. ஜிப்டிரான் பவர்டிரெய்ன் டெக்னாலஜிகளில், லித்தியம் இயான் செல்களை பயன்படுத்துகிறது. இந்த பேட்டரி செல், ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்டால் குறைந்தபட்சமாக 250 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும்.

            டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார இயக்கம் வர்த்தகம் மற்றும் கார்ப்பரேட் வியூகத்தின் தலைவர் ஷைலேஷ் சந்திரா பேசுகையில், ஜிப்டிரான் பவர்டிரெயின் டெக்னாலஜி எங்கள் நிறுவனத்தின் அனைத்து புதிய கார்களிலும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த டெக்னாலஜி, அல்ட்ரோஸ், நெக்ஸன் வாகனங்களில் பயன்படுத்தப்பட உள்ளது என்றார்.

            இதில் உள்ள பேட்டரி பேக்-களில் கூடுதலாக லிக்யூட் கூல்டு மற்றும் சாலிட் IP67 வகைகளுடன் பேக் செய்யப்பட்டுள்ளது. இவை வெளிப்புற பரப்பில் அதிக உறுதியை கொடுப்பதுடன், முக்கியமான எலக்ட்ரிக்கல் உபகரணங்களையும் பாதுகாக்கும். இதுமட்டுமின்றி இந்த கார்களில் பேட்டரி மேலாண்மை சிஸ்டம்களுடன் அதிக நாட்கள் அதாவது எட்டு ஆண்டுகள் வரை நீடிக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

            பவர்டிரெயின்களை பொறுத்தவரை, இதில் நிரந்தரமான கந்த தன்மை கொண்ட ஏசி மோட்டார்களுடன் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் கொண்டதாக இருக்கும். மேலும் இந்த பவர் டிரெயின்கள் அதற்கென்று ஒதுக்கப்பட்ட கூலிங் சர்க்கியூட்களுடன், வெப்பமான கால நிலையிலும், தொடர்ச்சியான திறன்களை அளிக்கும் வகையில் இருக்கும்.

            Source: https://www.autonews360.com/tamil/news/cars/tata-nexon-ev-and-altroz-ev-to-be-launched-with-the-ziptron-powertrain-technology/

          • அறிவியலின் பரிணாம வளர்ச்சியின் காரணமாக வாகனங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. ஆனால் அது காலப் போக்கில் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்புகளை தந்து சுவாசிக்கும் காற்றையும் மாசு மிகுந்ததாக மாற்றியது. மாசடைந்த சமூகத்திலிருந்து நம்மை மீட்டெடுக்க மற்றொரு அறிவியல் கண்டுபிடிப்பான பேட்டரி வாகனங்கள் தான் உகந்ததாம் அதனைத் தமிழகத்தில் நடைமுறைப் படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.

            அதி வேகத்தில் தமிழக அரசு

            தமிழகத்தைப் பொருத்தவரை மின் வாகனங்களைக் காண்பதே அரிது, ஆனால் வியக்க வைக்கும் வகையில் தமிழக அரசு பல திட்டத்தைத் தமிழகத்தில் அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது சமீபத்தில் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள், மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனங்களைப் பார்வையிட்டனர். தமிழகத்தில் மின்சார வாகனங்கள் அதிகரிக்கத் திட்டங்கள் வகுக்கப்படும் என்ற அறிவிப்பும் அதன் பின்னர் வெளியாகியது, இதனால் 1.30 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதே புதிய அப்டேட். தமிழகத்தில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு, வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை 100 சதவீதம் வரிவிலக்கு வழங்கப்படும் எனவும். இருசக்கர வாகனம், கார் மற்றும் பஸ் என்று அனைத்து வகையான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இது பொருந்தும் என்ற அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

            சில தினங்களுக்கு முன்னர், இது குறித்துப் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பின் போது கூறியது ” தலைநகர்களில் விரைவில் 200 பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.காற்று மாசு என்ற பிரச்சனை இல்லாமல் செய்ய முடியும் எனவும் அவர் கூறினார். ஒரு பேருந்தின் விலை 2 கோடி எனப்படுகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து 50 சதவீத மானியத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார். இந்த பேருந்துகள் தொடர்ச்சியாக 60 கிமீ வரை தான் பயணிக்க முடியும். பேட்டரி பேருந்துகள் அறிமுகப்படுத்தப் பட்டால் ஆங்காங்கே சார்ஜிங் நிலையங்களும் வைக்கப்படும். தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு சமூக ஆர்வலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது போலப் பொதுமக்களும் பேட்டரி வாகனங்கள் வாங்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

            ஜிஸ்டி குறைப்பு

            சமூகத்தின் நலத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகிறது. மேலும் அதனை ஊக்குவிக்கும் வகையில் ஜிஸ்டி வரியைக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 18 சதவீதமாக இருந்த மின்சார வாகனத்திற்கான ஜிஸ்டி வரியை 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதுபோல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இன்னும் ஏராளமான சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டிலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏராளமான சலுகைகளை வாரி வழங்கியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

            இலக்கு நிர்ணயித்துள்ள மத்திய அரசு

            இது குறித்துப் பேசிய நீதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் ”2030க்குள் இந்தியா முழுதும் மின்சார வாகனங்கள் ஓட இப்போதிலிருந்தே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உற்பத்தி நிறுவனங்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2025ஆம் மார்ச் 31க்கு பின்னர் 150 சிசிக்குக் குறைவான இருசக்கர வாகனங்கள் மின்சார மயமாக மாற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தற்போதே ஆட்டோ மொபைல் நிறுவனம் வர்த்தக ரீதியாக பின்னடைவைச் சந்தித்து வருகிறது. எதிர்காலத்தில் பெருவாரியான மக்கள் மின்சார வாகனங்களின் மீது ஆர்வம் காட்டினால் தற்போது பெட்ரோல், டிசல் வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பெரு வீழ்ச்சியைச் சந்திக்கும். இதனால் பல லட்சம் பேர் வேலையிழக்க நேரிடும் எனவும் கூறப்படுகிறது.

            மின் வாகனங்களை அறிமுகப்படுத்தும் போதே, அதிகளவில், சார்ஜிங் மையங் களையும், அரசு அமைக்க வேண்டும் அப்போது தான், மின் வாகனங்கள் மீது மக்களுக்கு ஆர்வம் ஏற்படும். மேலும் இதனை ஊக்கப்படுத்தும் விதமாக மின்சார வாகனங்கள் வாங்குபவருக்கு மானியம் வழங்கினால், இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

            Source: https://www.autonews360.com/tamil/news/cars/tamil-nadu-ev-policy-seeks-to-attract-rs-50-000-cr-create-150-000-jobs/

          • டாடா மோட்டார் நிறுவனம் தனது அடுத்த எலக்ட்ரிக் வாகனங்களை வரும் 2020ம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒன்றாகும். தற்போது, இந்த நிறுவனம் புதிய இ.வி.-களுக்கான பவர்டிரெயின் தொழில்நுட்பத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த புதிய இ.வி. பவர்டிரெயின் தொழில்நுட்ப ஜிப்டிரான் என்று அழைக்கப்படுவதுடன், தங்கள் நிறுவனம் தயாரிக்க உள்ள எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்பட உள்ளது என்றும் டாடா மோட்டார் தெரிவித்துள்ளது.

            முதல் எலக்ட்ரிக் கார்கள் புதிய பவர்டிரெயின் டெக்னாலஜிகளுடன் இந்தியாவில் வரும் 2020-ம் நிதியாண்டின் ஆண்டின் நான்காம் காலாண்டில் அறிமுகம் செய்ய உள்ளது.

            இந்த வாகன அறிமுக விழாவில் பேசிய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டி., குன்டர் புட்செக், எங்கள் நிறுவன தயாரிப்புகளில் ஜிப்டிரான் டெக்னாலஜியை அறிமுகம் செய்வதில் மிகவும் பெருமை கொள்கிறோம். இந்த தொழில்நுட்பம் எங்கள் தொழிற்சாலைகளில் குளோபல் இன்ஜினியரிங் நெட்வொர்க் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத்தின் வருங்கால தயாரிப்புகளில் இந்த டெக்னாலஜி பயன்படுத்தப்படுவதால், இந்த ஓட்டும் வாடிக்கையாளர்கள் திரிலிங் அனுபவத்தை பெறுவார்கள் என்றார்.

            தொடர்ந்து பேசிய அவர், இந்த வாகனம் ஒரு மில்லியன் கிலோ மீட்டர் கடுமையாக சோதனைகளுக்கு பின்னர் ஜிப்டிரான் டெக்னாலஜி உண்மையில் சிறந்தது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இது நவீனமாக இருப்பதுடன், நீண்ட நாட்கள் உழைக்க கூடியதாகவும் இருக்கிறது. இந்த டெக்னாலஜியுடன் புதிய வகையிலான இமொபைலிட்டி அலை இந்தியாவில் வீசும். மேலும் அரசின் நோக்கத்திற்கு ஏற்ப எலக்ட்ரிக் வாகனங்களை விரைவாக மக்கள் ஏற்று கொள்ளவும் வழி வகை செய்யும் என்றார்.

            புதிய பெயரிடப்படாத எலக்ட்ரிக் கார்களில் ஜிப்டிரான் டெக்னாலஜி பயன்படுத்தப்படுவதுடன், விரைவில் வெளியாக உள்ள எலக்ட்ரிக் வாகனங்கள், அதாவது, டிகோர் இ.வி மற்றும் நெக்ஸன் இ.வி.மற்றும் நெக்ஸன் இ.வி.களிலும் இந்த டெக்னாலஜி பயன்படுத்தப்பட உள்ளது. இவை அதிநவீன லித்தியம் இயான் பேட்டரிகளில் இருந்து ஆற்றலை பெறும். மேலும் இவை ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும்.

            இதில் உள்ள பேட்டரி பேக்-களில் கூடுதலாக லிக்யூட் கூல்டு மற்றும் சாலிட் IP67 வகைகளுடன் பேக் செய்யப்பட்டுள்ளது. இவை வெளிப்புற பரப்பில் அதிக உறுதியை கொடுப்பதுடன், முக்கியமான எலக்ட்ரிக்கல் உபகரணங்களையும் பாதுகாக்கும். இதுமட்டுமின்றி இந்த கார்களில் பேட்டரி மேலாண்மை சிஸ்டம்களுடன் அதிக நாட்கள் அதாவது எட்டு ஆண்டுகள் வரை நீடிக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

            பவர்டிரெயின்களை பொறுத்தவரை, இதில் நிரந்தரமான கந்த தன்மை கொண்ட ஏசி மோட்டார்களுடன் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் கொண்டதாக இருக்கும். மேலும் இந்த பவர் டிரெயின்கள் அதற்கென்று ஒதுக்கப்பட்ட கூலிங் சர்க்கியூட்களுடன், வெப்பமான கால நிலையிலும், தொடர்ச்சியான திறன்களை அளிக்கும் வகையில் இருக்கும்.

            Source: https://www.autonews360.com/tamil/news/cars/tata-motors-reveals-new-ev-powertrain-technology-ziptron/

          • இந்தியாவில் ஆட்டோமொபைல் தயாரிப்புகள் அனைத்தையும் விரும்பவர்களை மகிழ்விக்கும் வகையில் ஆறு அற்புதமான கார்கள் அறிமுகமாக உள்ளது. இந்த ஆறு கார்களின் அறிமுகம் ஆட்டோமொபைல் துறையின் மறுமலர்ச்சிக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோமொபைல் துறை மந்த தன்மை இருந்து வரும் நிலையில், ஆறு புதிய கார்கள் தீபாவளியை ஒட்டி பெரியளவில் அறிமுகமாக உள்ளது. இந்த நேரத்தில் இந்த கார்கள் அறிமுகமாக உள்ள செய்தி ஆட்டோமொபைல் துறைக்கு பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.

            மாருதி சுசூகி எஸ்-பிரஸ்ஸோ

            கடந்த 2018ம் ஆண்டில் மாருதி சுசூகி எஸ்-பிரஸ்ஸோ கார்கள், பியூச்சர் எஸ் கான்செப்ட்களால் கவரப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஹார்ட்டெக் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாருதி சுசூகி எஸ்-பிரஸ்ஸோ எஸ்யூவி-களின் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த கார்கள் பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட பெட்ரோல் இன்ஜின்களுடன் நான்கு வகைகளில் கிடைக்கிறது. இந்த கார்கள் ஏஎம்டி-களுடன் கிடைக்கிறது.

            ஹூண்டாய் எலன்ட்ரா ஃபேஸ்லிஃப்ட்

            ஹூண்டாய் எலன்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் கார்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட காராகும். புதிய காஸ்காடிங் கிரில்களுடன் ஆங்குலர் ஹெட்லேம்ப்களுடன் ரீமாடல் செய்யப்பட்டதுடன், ஆர்ப்பாட்டமான லுக் கொண்டதாக வெளி வர உள்ளது. மற்ற மாற்றங்கள், டெயில்லேம்ப்கள் மற்றும் பம்பர்களை உள்ளடக்கியதாக இருக்கும். 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்களுடன் 6 ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். டார்க் கன்வெர்ட்டர்களில் கூடுதலாக இணைக்கப்பட்டிருக்கும். ஆனாலும், இந்த கார்களில் டீசல் இன்ஜின்கள் வகைகள் வெளியாக உள்ளது.

            மாருதி சுசூகி எக்ஸ்எல்5

            மாருதி சுசூகி எக்ஸ்எல்6 வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, மாருதி சுசூகி எக்ஸ்எல்5 அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது பிரிமியம் வெர்சன் மாருதி வேகன் ஆர் போன்று இருக்கும். இந்த காரின் ஸ்பை புகைப்படங்களின் படி, இதில் 15 இன்ச் அலாய் வீல் மாருதி சுசூகி இக்னிஸ்களில் இருந்து பெறப்பட்டதாக இருக்கும். மேலும், இதில் சில காஸ்மெடிக் மாற்றங்களுடன் இருந்தாலும், இன்ஜின் ஆப்சன்கள் ஒரே மாதிரியாக இருக்கும்.

            ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட்

            ரெனால்ட் க்விட் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட வெர்சன்களுடன் ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட்-களை வெளியிட்டுள்ளது. க்விட் இவி(கேஇசட்-இ)சீனா வெர்சனால் கவரப்பட்டுள்ளது. ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட்களில் புதிய ஹெட்லேம்ப்கள் மற்றும் கிரில்களுடன் இருக்கும். கட்டமைப்பு மாற்றங்களாக, பாதுகாப்பு BNVSAP விதிகளுக்கு உட்பட்டு இருக்கும். மேலும் இதில் பிஎஸ்6 விதிக்கு உட்பட்ட இன்ஜின்களும் கிடைக்கிறது.

            டாடா அல்ட்ரோஸ்

            ஹூண்டாய் எலைட் ஐ 20கள் அறிமுகம் செய்யப்பட்ட உடன் உடனடியாக டாடா அல்ட்ரோஸ்-கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹாரியர் போன்று, டீசல் இன்ஜின் ஆப்சன்களுடன் மட்டுமே கிடைக்கிறது. டாடா அல்ட்ரோஸ்-களின் கேபின்களில் கூடுதலாக டாடா ஹாரியர்களால் கவரப்பட்ட ஹைபிரிட் டிஜிட்டல்-அனலாக் டாஷ்போர்டு மற்றும் ஃப்ளோட்டிங் டைப் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் இதில் இடம் பெற்றிருக்கும்.

            டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட்

            டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட்கள் மற்றொரு ரீமாடல்களுடன் அறிமுகமாக உள்ள காராக இருக்கும். இந்த வாகனங்களில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர்களுடன் புதிய ஹெட்லேம்கள் மற்றும் ரீடிசைன் கிரில்களுடன் இருக்கும். இதில் உள்ள பம்பர்களிலும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்டுள்ளது.

            Source: https://www.autonews360.com/tamil/news/cars/6-cars-launching-before-diwali-2019-maruti-s-presso-kwid-facelift-to-tata-altroz/

          • டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம், புதிய டி.வி.எஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன்களை எல்இடி டிஆர்எல் மற்றும் ஹெட்லேம்ப்களுடன் அறிமுகம் செய்துள்ளது. டி.வி.எஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன்-களில் வெளிச்சமிக்க லைட்களுடன் புதிய பாடி கிராப்பிஸ் மற்றும் மூன்று டோன் கலர் காம்பினேஷனில் கிடைக்கிறது.

            டி.வி.எஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன்-களின் விலை 62 ஆயிரத்து 995 ரூபாய் விலையில் கிடைக்கிறது. இது டிஸ்க் பிரேக்களுடன் இந்தாண்டின் முற்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்ட டி.வி.எஸ் என்டார்க் 125-களை விட 3 ஆயிரம் ரூபாய் அதிக விலை கொண்டதாக இருக்கும். டிவிஎஸ் நிறுவனம் டிரம் பிரேக் வகைகளுடன் கூடிய டி.வி.எஸ் என்டார்க் 125 பைக்களையும் இந்தாண்டின் முற்பகுதியில் அறிமுகம் செய்ததது. இந்த ஸ்கூட்டர்களின் விலை 58 ஆயிரத்து 252 ரூபாயாகும்.

            புதிய டி.வி.எஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன்-கள் மூன்று வகைகளில் கிடைக்கிறது. அதாவது, டிரம் பிரேக், டிஸ்க் பிரேக் மற்றும் புதிய ரேஸ் எடிசன்களில் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு வாய்ப்புகளுடன் கூடிய கிளாஸ் மற்றும் மேட் கலர் ஆப்சன்களிலும் கிடைக்கிறது.

            டி.வி.எஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன்-கள் டிஸ்க் பிரேக் மாடலை விட 3,000 ரூபாய் அதிக விலை கொண்டதாக இருக்கும்.
            புதிய எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல் மற்றும் இந்த பிரிவில் அதிக வெளிச்சம் கொண்ட ஸ்கூட்டராகவும் இருந்து வருகிறது. புதிய டி.வி.எஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன்கள் தற்போது கவர்ந்திழுக்கும் மூன்று டோன் கலர் காம்பினேஷன்களில் கிடைக்கிறது. அதாவது, மேட் பிளாக், மெட்டாலிக் பிளாக் மற்றும் மெட்டாலிக் ரேட் கலரில் கிடைக்கிறது. புதிய டி.வி.எஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன்-கள் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின், விற்பனை இந்த விழாகால சீசனில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

            டி.வி.எஸ் என்டார்க் 125-கள் தற்போது மூன்று வகைகளில் கிடைக்கிறது
            இதுகுறித்து, டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் பயணிகள் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் கார்ப்பரேட் பிராண்ட், துணைத் தலைவர் (சந்தைப்படுத்தல்) அனிருத்த ஹல்தார் பேசுகையில், டி.வி.எஸ் என்டார்க் 125 அறிமுகம் செய்யப்பட்டது முதல், இதுவரை வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்பு, சமூக இணைய தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி, டிவிஎஸ் ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் வசதிகளுடன் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டர்களின் திறன், டி.வி.எஸ் என்டார்க் 125 சிறந்த அனுபவத்தை கொடுக்கும் வகையில் இருக்கும் என்றார்.

            டி.வி.எஸ் என்டார்க் 125-கள் ப்ளூடூத் கனெக்டிவிட்டிகளுடன் கூடிய முதல் ஸ்கூட்டராக வெளியாகியுள்ளது
            தொடர்ந்து பேசிய அவர், டிவிஎஸ் நிறுவன ஸ்கூட்டர்கள் ஆடம்பர பைக் விரும்பிகளுக்காக 37 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வருகிறது. டி.வி.எஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன்-களும், இதே போல கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று வரை 4 லட்சம் இளைஞர்களின் நம்பிக்கை காரணமாகவே என்டார்க்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டி.வி.எஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன்-களுக்கான ப்ரீ புக்கிங் குறிப்பிட்ட நகரங்களிலும், ஆன்லைனிலும் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

            மெக்கனிக்கல் ரீதியாக பார்க்கும் போது, டி.வி.எஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன்-களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும் இவை, 124.79 cc, சிங்கிள் சிலிண்டர், நான்கு ஸ்டிரோக், மூன்று வால்வ், ஏர்-கூல்டு, SOHC இன்ஜின்களுடன், 9.25 bhp ஆற்றலில் 7,500 rpm-லும், 10.5 பீக் டார்க்கில் 5,500 rpm-லும் இயங்கும். டி.வி.எஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன்கள், ப்ளூடூத் கனெக்டிவிட்டிகளுடன் கூடிய முதல் ஸ்கூட்டராக வெளியாகியுள்ளது. மேலும் டி.வி.எஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன்-கள் சிறப்பாக ரேஸ்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும். டி.வி.எஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து வலுவான வாடிக்கையாளர்கள் ஆதரவுடன் வெளியாகியுள்ளது.

            Source: https://www.autonews360.com/tamil/news/bikes/tvs-ntorq-125-race-edition-launched-at-rs-62-995/

          • கடந்த செப்டம்பர் 1 முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
            அதன்படி சாலை விதிகளை மீறுவோர்க்கு கடும் தண்டனை மற்றும் அபராத தொகை விதிக்கப்படுவது போன்ற சட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தாலும் அதனை பின்பற்றுவதை தவிர வேறு வழியில்லை.

            அபராதத்தை குறைத்த சில மாநிலங்கள்

            மத்திய அரசு இதனை அறிமுகப்படுத்திய தினத்திலிருந்தே மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதை அறிந்து கொண்ட சில மாநிலங்கள் அபராத தொகையை குறைத்து கொண்டது. பாஜக ஆளும் குஜராத், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், கேரளம், கர்நாடாக உள்ளிட்ட மாநிலங்கள் உச்சபட்ச அபராதத் தொகையை குறைக்கும் வகையில் ஆலோசனை செய்து வருகின்றன.

            போக்குவரத்துறை அமைச்சர் தகவல்

            இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்ற வகையில் அபராதத் தொகையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

            1 லட்சம் அபராதாம்

            டெல்லி உட்பட ஒடிசா, ஹரியானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை எந்த மாற்றமுமின்றி அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர்க்கு அதிகளவில் அபராதம் விதிக்கப்படுவதால் மக்கள் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர். ஆம் ஒடிசாவை சார்ந்த பெண் ஒருவருக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதே பேசு பொருளாக உள்ளது.

            முறையாக பதிவு செய்யாததால் தான் அபராதம்

            புபனேஸ்வர் சேர்ந்த பெண் தனது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை சமீபத்தில் வாங்கியிருக்கிறார். அதை முறையாக பதிவு செய்யாமலும், பதிவு எண் பெறாமலும் பயன்படுத்தி வந்துள்ளார். வழக்கம் போல சாலையில் ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றுள்ளார் அங்கே வாகன ரோந்து பணியில் இருந்த காவலர்கள், அப் பெண் சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தினார்.அவரிடம் வாகனம் பதிவு செய்யாமல் இருப்பதற்கான காரணத்தை கேட்டனர். அதற்கு முன்னுக்கு பின் முரணாக பெண் பதிலளித்தார். அதை தொடர்ந்து ஸ்கூட்டர் குறித்த ஆவணங்களை சோதனையிட்ட போது உரிய ஆவணங்கள் எதுமே இல்லை என்பதை தெரிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பெண் ஓட்டிவந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர், கடந்த ஆகஸ்டு மாதம் 28ம் தேதி வாங்கப்பட்டுள்ளது. அதை முறையாக பதிவு செய்யாமல், பல நாட்களாக பயன்படுத்தி வந்துள்ளார். அதை தொடர்ந்து காவலர்கள் அடுத்தடுத்த விசாரணையில் இறங்கினர்.

            இதில், பெண்ணுக்கு ஸ்கூட்டரை விற்பனை செய்த கிம்ஜி ஹோண்டா நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ. 1 லட்சம் அபராதத்தை போலீசார் விதித்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த காவலர் ஒருவரிடம் பேசினோம்.” பொதுமக்களாகிய நீங்கள் சரியாக இருந்தால் நாங்கள் உங்களிடம் ஒரு ரூபாய் கூட வாங்க போவதில்லை, வாகனம் ஓட்டி செல்லும் போது ஹெல்மெட் அணியச் சொல்வது உங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டே தான் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்றார்.

            Source: https://www.autonews360.com/tamil/news/bikes/honda-activa-scooter-in-odisha-fined-rs-1-lakh-by-transport-authorities/

          • ஹெக்டர் மாடல்களுக்கு கிடைத்த பெரியளவிலான வரவேற்பை தொடர்ந்து, எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது இரண்டாவது தயாரிப்பை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. எலக்ட்ரிக் வாகனமாக, இந்த வாகனம் எம்ஜி இஇசட்எஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இவை, இசட்எஸ் எஸ்யூவி-யை அடிப்படையாக கொண்டவையாக இருப்பதுடன் சீனா மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாகனம் சோதனை செய்யப்படும் புகைப்படங்களை வாகன ஆர்வலர் கிருஷ்ணபால்சிங் விர்பரா தற்போது வெளியிட்டுள்ளார்.

            எம்ஜி இஇசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி-கள், ஹெக்டர் வெற்றிக்கும் பின்னர் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளதுடன், எலக்ட்ரிக் வாகன பிரிவில் இந்த நிறுவனத்தின் விற்பனையை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை இந்தியாவில் எலக்ட்ரிக் எஸ்யூவியாக ஹூண்டாய் கோனா மட்டுமே இருந்து வருகிறது. ஹூண்டாய் கோனா கார்கள் கடந்த ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

            எம்ஜி இஇசட்எஸ்-கார்கள் முதன் முதலில் 2018 குவாங்சோ மோட்டார் ஷோவில் வெளியிடப்பட்டது. இந்த காரின் எக்ஸ்டீரியர் டிசைன்கள் இசட்எஸ் எஸ்யூவி போன்று இருக்கும். ஆனாலும், சர்ச்சைக்குரிய ரேடியேட்டர் கிரில்களை கொண்டிருக்காது. இதற்கு பதிலாக, அஸ்ட்ரல் தீம்களுடன், குரோம் இன்பியூஸ் முன்புற கிரில்களுடன் ஹோஸ் சார்ஜிங் சாக்கெட்களுடன் இருக்கும். மேலும் இதில் எம்ஜி லோகோ மத்தியிலும், முன்புற கிரில்களை சார்ஜிங் சாக்கெட்களை திறந்து கொள்ள முடியும்.

            மற்ற முக்கிய அம்சங்களாக எம்ஜி இஇசட்எஸ்-களில் சிலிக் புரொஜெக்டர் ஹெட்லேம்கள், எல்இடி டிஆர்எல்-கள், பாடி கிளாடிங், ஃபாக்ஸ் சில்வர் கலரிலான ஸ்கீட் பிளேட்கள் முன்புறம் மற்றும் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் ஏரோடைனமிக்ஸ் அலாய் வீல் டிசைன்களுடன் இருக்கும். இஇசட்எஸ் பிரிமியம் இன்டீரியர்களுடன், லெதர் சீட்கள் மற்றும் 8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்களுடன் இருக்கும். இந்த சிஸ்டம்கள் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ ஆகியவற்றுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் இருக்கும்.

            எம்ஜி இஇசட்எஸ்-களின் இன்டர்நெட் கனெக்ட்டட் ஸ்மார்ட் வசதிகளை கொண்டிருக்கும். இந்த வசதிகள் ஹெக்டேர் கார்களிலும் இடம் பெற்றுள்ளது. மேலும், இவை ஐஸ்மார்ட் மூலம் இயங்குவதுடன், புரட்சிகர தொழில்நுட்பங்களுடன் இருக்கும். இவை பயனாளர்களை, ரியல் டைம் வாகன டிராக்கிங், வாய்ஸ் அசிஸ்டென்ட், எமர்ஜென்சி கால், ரிமொர்ட் வாகன கண்ட்ரோல், ஜியோ ஃபென்சிங், காலநிலை மற்றும் டிராபிக் அப்டேட்கள், நேவிகேஷன் மற்றும் வாகன ஆய்வுகள் போனவற்றை அணுக முடியும்.

            எம்ஜி இஇசட்எஸ்-கள் 44.5 kWh லித்தியம் இயான் பேட்டரிகளுடன் இணைக்கப்பட்டு, எலக்ட்ரிக் மோட்டார்களுடன் அதிகபட்ச ஆற்றலுடன், 148 bhp மற்றும் அதிகப்பட்ச டார்க்காக 350 Nm கொண்டிருக்கும். இஇசட்எஸ்-களின் டாப்-ஸ்பீட் 140 kmph மற்றும் 0 முதல் 100 kmph வேகத்தை எட்ட 8.5 செகண்ட்களே எடுத்து கொள்ளும். ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த கார்கள் சராசரியாக 300 km வரை பயணிக்கும்.

            எம்ஜி இஇசட்எஸ்-கள் குஜராத்தின் ஹலோலில் உள்ள எம்ஜி நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருகிறது. எம்ஜி இஇசட்எஸ்-கள் ஹெக்டேர் போன்று அதிக அளவில் இருக்காது என்றாலும், எம்ஜி நிறுவனம் எம்ஜி இஇசட்எஸ்-கள் அதிகளவிலான வாடிக்கையாளர்களை கவரும் என்று எம்ஜி நிறுவனம் எதிர்பார்க்கிறது.

            தற்போது 23.7 லட்சம் ரூபாயில் விற்பனையாகி வரும் ஹூண்டாய் கோனா கார்களை ஒப்பிடும் போது, எம்ஜி இஇசட்எஸ்-களின் விலை 2-3 லட்சம் ரூபாய் குறைவான விலையில் கிடைக்கும் என்றும், இந்த விலை குறைப்பு இஇசட்எஸ்-களின் விற்பனையை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி இஇசட்எஸ்-களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அரசின் FAME-II பாலிசியின்படி, மானியம் கிடைக்கும்.

            Image Courtesy: Krishnapalsinh Virpara

            Source: https://www.autonews360.com/tamil/news/cars/mg-ezs-electric-suv-spied-testing-in-india-ahead-of-launch/

          • பஜாஜ் டோமினார் பைக்கின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ளது. அட்டோமொபைல் துறை சார்ந்தவர்கள் அனைவரது கவனத்தையும் இது ஈர்த்துள்ளது. ஏன் இந்த விலை ஏற்றம் என்பது குறித்தும் பஜாஜ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக வாகன உற்பத்தி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் அனைத்து நிறுவனங்களும் விலையை குறைத்து வருகிறது. குறிப்பாக மாருதி, டாட்டா போன்ற முன்னனி நிறுவனங்கள் அதிரடி விலை குறைப்பை கையில் எடுத்துள்ள நிலையில் பஜாஜ் நிறுவனம் விலையை உயர்த்தியிருப்பது ஆச்சியப்பட வைக்கிறது.

            தொடர் உயர்வில் பஜாஜ் டோமினார்

            பஜாஜ் டோமினார் பைக்கின் விலையை ரூ.10,000 வரை அந்நிறுவனம் அதிகரித்துள்ளது. அதிரடியாக விலையை உயர்த்தி இருக்கிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். தற்போதைய புதிய தலைமுறை மாடலானது ரூ.1.74 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று இந்த பைக்கின் விலை ரூ.1.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனையாகிறது. அதாவது, கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து தற்போது வரை ரூ.16,000 வரை விலை உயர்த்தி இருப்பது குறிப்பிடதக்கது.

            பஜாஜ் டோமினாரின் விலை உயர காரணம்?

            விலை அதிகரித்தாலும் இந்த வண்டியின் மதிப்பு ஒரு போதும் குறைய வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது. ஏனெனில் பல இளைஞர்களுக்கு இதுவே கனவு பைக். அதிக வாடிக்கையாளர் இருப்பதை அறிந்து கொண்டு தான் பஜாஜ் நிறுவனம் விலை அதிகப்படித்தியுள்ளதாக கூறப்படுகிறது.

            பஜாஜ் டோமினார் பைக்கில் 373.3 சிசி லிக்விடு கூல்டு எஞ்சின் உள்ளது. இது 39.4 பிஎச்பி பவர் மற்றும் 35 என்.எம் டார்க் திறனை வழங்கும். பைக்கின் முன்பக்கத்தில் ரேடியல் காலிர் 320 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக் உள்ளது. பின்பக்கத்தில் பாட் காலிபர் 240 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது. பைக்கிற்கு டூயல் சேனல் வழங்கப்பட்டுள்ளது மேலும் பஜாஜ் டோமினார் 400 பைக்கில் முன்புறத்தில் இன்வெர்டெட் ஃபோர்க்குகளுடன் கூடிய சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. ட்வின் பேரல் புகைபோக்கி அமைப்பும் இதன் முக்கிய அம்சமாக இருக்கிறது.

            மேலும் விலை அதிகரித்தால் விற்பனை குறையுமா என்று கேள்விகள் எழுந்தாலும் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதே நிதர்சனம். மேலும் பஜாஜ் இது போன்ற கவர்ச்சிகரமான பைக்குகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே ஆட்டோமொபைல் துறை சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பு.

            Source: https://www.autonews360.com/tamil/news/bikes/bajaj-dominar-400-price-hiked-by-rs-10000/

          • டிவிஎஸ் நிறுவனம் ஸ்கூட்டியை அறிமுகம் செய்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் 25வது ஆண்டு விழா நிறைவையொட்டி புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இன்றும் பெண்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பிரனும் ஸ்கூட்டியை பயன்படுத்துகின்றனர். ஆகையால் இதற்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

            பெண்களின் தோழி

            புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டர் பெண்களின் நம்பர்-1 சாய்ஸாக இருந்து வருகிறது. இந்த நிலையில், புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

            டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் மேட் எடிசன் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடலில் இரண்டு புதிய வகைகள் அறிமுகமாகிறது. கோரல் மேட் மற்றும் அக்வா மேட் ஆகிய இரண்டு புதிய மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட மாடல்கள் அறிமுகமாகி உள்ளன. மேலும், முப்பரிமாண லோகோ, புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் பொலிவான தோற்றம் தருவதாக இருக்கிறது.

            இதன் சிறப்பு என்ன தெரியுமா?

            பொதுவாக புதிய வாகனங்கள் பண்டிகை காலங்களில் தான் அறிமுகம் செய்யப்படும், வரும் தீபாவளியை கணக்கில் கொண்டே இந்த வாகனம் அறிமுகப் படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதன் சிறப்பாக கருதப்படுவது என்னவென்றால் 87.8 சிசி எஞ்சின் தான் அதிகபட்சமாக 4.9 பிஎஸ் பவரையும், 5.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டரின் ஈக்கோத்ரஸ்ட் தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் அதிக எரிபொருள் சிக்கனம் தரும் எனவும் இது நீண்ட நாள் உழைக்கும் என்று டிவிஎஸ் நிறுவனம் தரப்பில் சொல்லப்படுகிற்து.

            7 வண்ணத் தேர்வுகளில் புதிய டிவிஎஸ் ஸ்கூட்டர் மேட் எடிசன் ரூ.44,322 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

            Source: https://www.autonews360.com/tamil/news/bikes/tvs-scooty-pep-plus-matte-edition-launched-price-is-rs-44-322/

          • போலோ மற்றும் வென்டோ கார்களின் அறிமுகத்திற்கு பின்னர் ஜிடி லைன் வகைகளாக வோக்ஸ்வாகன் அமியோ ஜிடி வகைகள் அறிமுகமாகியுள்ளது. இந்த கார்களின் விலை 9.99 லட்சம் ரூபாயாகும். (எக்ஸ் ஷோரூம் விலை, இந்தியாவில்) இந்த கார்கள் அறிமுகமாக உள்ளது குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே தகவல் வெளியிடப்பட்டு இருந்தது.

            இந்த கார்கள், 110 hp, 1.5 லிட்டர் டீசல் மற்றும் 7 ஸ்பீட் டூயல்-கிளட்ச் ஆட்டோமேடிக் இன்ஜின்-கியர்பாக்ஸ் காம்பினேஷன்களில் மட்டுமே கிடைக்கிறது. வோக்ஸ்வாகன் அமியோ ஜிடி-களில் ஒரே மாதிரியான டிசைன் உபகரணங்களுடன் ஜிடி லைன் வெர்சன்கள், அதன் ஹாட்ச்பேக் மற்றும் மிட்சைஸ் செடான்களுடன் வெளி வந்துள்ளது. வோக்ஸ்வாகன் அமியோ ஜிடி-களில் உள்ள வசதிகளாக, ஜிடி லைன் பேட்ஜ்களுடன் பென்டர்களுடன் பிளாக் அவுட் விங்க்-மிரர் கேப்கள், ரூப் மற்றும் ஸ்பாயிலர்களுடன் இருக்கும்.

            வோக்ஸ்வாகன் அமியோ ஜிடி-களில் கூடுதலாக, புதிய சன்செட் ரெட் பெயிண்ட் ஷேடுகளுடன் கிடைக்கிறது. இவை போலோ மற்றும் வென்டோ ஜிடி லைன்களுடன் இருக்கும். இருந்தபோதிலும், போலோ மற்றும் வென்டோ போன்று இல்லாமல், அம்யோகளில் புதிய டிசைன் கிரில்களுடன் பம்பர்களும் பொருத்தப்பட்டுள்ளது.

            வோக்ஸ்வாகன் அமியோ ஜிடி-கள் அடிப்படையில் டாப்-ஸ்பெக் டீசல்-ஆட்டோமேடிக் வகையாக இருக்கும். ஹைலைன் பிளஸ்களுடன் ஒரே நிலையிலான உபகரணங்களை பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த காரில் வோக்ஸ்வாகன் கனெக்ட் சூட்களும் அதே விலையில் கிடைக்கும்.

            வோக்ஸ்வாகன் நிறுவனம், கனெக்ட்டிவிட்டி டெக்னாலஜிகள் வழக்கமாக பிட்மென்ட்களுடன் அமியோ ஹைலைன் பிளஸ் வகைகளிலும் கிடைக்கிறது. வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் மற்ற டீசல் மாடல்களை போன்று, அனைத்து வகைகளும் அமியோ டீசல்கள் தற்போது 5 ஆண்டு வாரண்டிகளுடன் வழக்கம் போலவே கிடைக்கிறது. பெட்ரோல் வகைகள் பிராண்டின் நான்கு-ஆண்டு/ஒரு லட்சம் கிலோ மீட்டர் வாரண்டி பேக்களுடன் கிடைக்கிறது. இது நான்கு ஆண்டு ப்ரீ ரோடு-சைடு அசிஸ்ட் மற்றும் மூன்று ஃப்ரீ சர்விஸ் (ஓராண்டு அல்லது 15,000 km) போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

            வோக்ஸ்வாகன் அமியோ-கள் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து எந்த மாற்றங்கள் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த கார்கள், புதிதாக வெளியான செடான்களுடன் ஒப்பிடும் போது, மாருதி சுசூகி டிசைர், ஃபோர்டு ஆஸ்பியர் மற்றும் ஹோண்டா அமேஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

            வோக்ஸ்வாகன் அமியோ ஜிடி லைன்-கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாக்கால சீசனில், வோக்ஸ்வாகன் நிறுவன தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

            Source: https://www.autonews360.com/tamil/news/cars/volkswagen-ameo-gt-line-launched-at-rs-9-99-lakh/

          • டி.வி.எஸ் என்டோர்க் 125 ஃபேஸ்லிஃப்ட்களுக்கான டீஸரை டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து டி.வி.எஸ் என்டோர்க்கின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பதிவில் டி.வி.எஸ் என்டோர்க் 125 ஃபேஸ்லிஃப்ட்களுக்கான டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.

            மார்க்கெட்டில் உள்ள ஸ்கூட்டர்களில் சிறந்த ரைடிங் அனுபவத்தை கொடுப்பதுடன் அதிக விலை கொண்ட ஸ்கூட்டராகவும் இந்த ஸ்கூட்டர் மாறியுள்ளது. முதல் முறையாக இந்த டி.வி.எஸ் என்டோர்க் 125 ஃபேஸ்லிஃப்ட்களுக்கான தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

            டி.வி.எஸ் நிறுவனத்தின் ஸ்டைல்களால் கவரப்பட்ட ஸ்கூட்டராக இது இருப்பதுடன், சிறந்த தோற்றத்தில் வெளியாகியுள்ளது. ஒரே மாதிரியான தீம் உடன் இருக்கும் இந்த ஸ்கூட்டர்கள் ஆர்ப்பாட்டமான தோற்றத்துடன், சீஸ்சேல்டு பாடி லைன்களுடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் முன்பு மேற்புறத்தில் பெரியளவிலான கிளியர் லென்ஸ் கொண்ட ஹெட்லேம்களுடன் மேம்படுத்தப்பட்ட எல்இடி டிஆர்எல்களும் பொருத்தப்பட்டுள்ளது. இன்டிக்கேட்டர்கள் உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

            தனித்துவமிக்க அலாய் வீல்களுடன் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் மற்ற ஸ்கூட்டர்களில் இருந்து தனியாக தெரியும் வகையில் இருக்கும். மேலும் இதில் ரெட் காண்டிராஸ்ட் தையல்களுடன் கூடிய சீட், பாக்ஸ் கார்பன் பைபர் பேணல் போன்றவைகளும் பொருத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இந்த ஸ்கூட்டரை சிறப்பானதாக மாற்றியுள்ளது.

            ஆற்றலை பொறுத்தவரை தற்போதைய தலைமுறை டி.வி.எஸ் என்டோர்க் 125-கள் ஏர்-கூல்டு, 125 cc, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்களுடன் அதிகபட்ச ஆற்றல் அவுட்புட்டாக 9.27 bhp மற்றும் பீக் டார்க் அவுட்புட்டாக 10.4 Nm அளவில் இருக்கும். இந்த ஸ்கூட்டர்களின் அதிகபட்ச வேகம் வேகம் 95 km/h அளவில் இருக்கும்.

            டி.வி.எஸ் என்டோர்க் 125 ஃபேஸ்லிஃப்ட்களில் டெலஸ்கோபிக் சஸ்பென்சன்கள் முன்புறத்திலும், மோனோஷாக் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. பெடல் டிஸ்க் பிரேக்கள் முன்புறத்திலும், டிரம் பிரேக்கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

            டி.வி.எஸ் என்டோர்க் 125 ஸ்கூட்டர்கள், இந்திய மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டர்கள் வெளியாகி 18 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது ஃபேஸ்லிஃப்ட் வெளியிடப்பட உள்ளது. இது டிவிஎஸ் நிறுவனம் என்டோர்க் 125 ஃபேஸ்லிஃப்ட்களுக்காக பணியாற்றி வருகிறது என்பதை காட்டுகிறது.

            புதிய ஸ்கூட்டர்களுக்கான டீசர்கள் தற்போது ஆன்லைனில் பரவி வருகிறது. மிகவும் சிறிய அளவு கொண்ட இந்த டீசர் வீடியோவில், இந்த ஸ்கூட்டரின் முன்புற பகுதி காட்டப்பட்டுள்ளது. இந்த முன்புறம் மறுடிசைன் செய்யப்பட்டுள்ளது இதில் தெளிவாக தெரிகிறது. மேலும் இதில் உள்ள ஹெட்லைட் யூனிட்கள் முற்றிலும் புதிய மற்றும் சிக்னேச்சர்களுடன் டி-வடிவ எல்இடி டிஆர்எல்-களுடன் இருக்கும். இந்த ஹெட்லேம் யூனிட்களில் ஹெலசன் பல்ப் செட்டப்களுடன் எல்இடி-கள் உள்ளன. மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகி என்று தெரிய வந்துள்ளது.

            டி.வி.எஸ் என்டோர்க் 125 ஃபேஸ்லிஃப்ட்-கள் எல்இடி ஹெட்லேம்ப்களுடன், டீசர் வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. இந்த ஒரு சிறந்த ஸ்கூட்டர்களாக இருப்பதுடன், பல்வேறு வகையான ரைடிங் அனுபவத்தை கொடுக்கும். மேலும் இது அதிக வசதிகளுடன், ஜிப்பி சவுண்ட்களுடன் இருக்கும். டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம், அதிகளவிலான இந்த ஃபேஸ்லிஃப்ட்-களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

            Source: https://www.autonews360.com/tamil/news/bikes/tvs-ntorq-125-facelift-with-led-headlamp-new-design-teased/

          • வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிவது அவசியமான ஒன்றே. ஆனால் அதனை தவிர்ப்பதற்கு பல்வேறு காரணங்களை எடுத்துரைப்பர். அதில் ஒன்று தான் ஹெல்மெட் போட்டால் வெப்பம் அதிகரிக்கும் என்ற காரணம். அதனை எதிர்கொள்ள வந்து விட்டது ஏசி ஹெல்மெட்.

            வெளியில் அலைபவர்கள், டூ-வீலர் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் நிலை பரிதாபத்தை தரக்கூடியது. அடிக்கும் வெயிலில் ஹெல்மெட்டை அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுவது, மிகுந்த சிரமத்தை தரக்கூடியது. இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் விதமாக, கர்நாடக இளைஞர் ஒருவர் ஏசி-யால் இயங்கும் ஹெலெம்ட் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளார்.

            இந்த ஹெல்மெட்டில் தேவைப்படும் நேரங்களில் மட்டும் ஏசி போட்டு கொள்ளலாம், தேவைப்பட்டால் ஏசி இயந்திரத்தில் வரும் இரு குழாய்களை அதில் இணைந்து கொள்ளலாம். தேவைப்படாத பட்சத்தில் சாதரணமாக விட்டுவிடலாம். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் உள்ளே நிலவும் சூடான காற்றையும் இது வெளியே தள்ளும்.

            என்ன விலை அழகே ?

            ஏசி ஹெல்மெட் என்றவுடன் என்னை விலை அழகே, உன்னை விலைக்கு வாங்க வருவேன் என்ற பாடல் ஒலிக்க தொடங்கலாம். ஆனால் இதன் விலை சற்று அதிகம் தான். 7 ஆயிரம் முதல் 21 ஆயிரம் வரை விற்க்கப்படுகிறது.

            ஏசி ஹெல்மெட் பற்றிய அரிய தகவல்கள்

            ஹெல்மெட் மற்றும் தோள்பட்டை பையுடன் சேர்த்து 1,800 கிராம் எடையுள்ளதாக இருக்கும் எனப்படுகிறது. மேலும் ஹெல்மெட்டின் மாடலுக்கு தகுந்தால் போல எடையில் மாற்றமிருக்கும். பேட்டரி திறனில் இயங்கும் இந்த ஏசிக்கு தோள்பட்டை பையில் தனியாக பிளக்-பாயின்ட் உள்ளது. சூழ்நிலைக்கு தகுந்தார் போல் இதனை கூட்டி, குறைத்து கொள்ளலாம். குளிர்ந்த பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு இந்த இயந்திரம் சூடான காற்றையும் வெளிப்படுத்தும். வாகன ஓட்டிகள் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் இடங்களுக்கு ஏற்றவாறு, குளிர்ந்த மற்றும் சூடான மோடுகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த ஏசி இயந்திரம், பைக்கின் பேட்டரியின் மூலம் திறனை பெற்று இயங்கும்.

            இளைஞர் சந்தீப்பின் கண்டுபிடிப்புக்கு குவியும் பாராட்டுக்கள்

            ஏசி ஹெல்மெட் அறிமுகம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, இதற்காக நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்ததாகவும், பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு இளைஞர் சந்தீப் இந்த ஏசி ஹெல்மெட்டை கண்டுபிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. . இதுபோல அவரிடம் எட்டுக்கும் மேற்பட்ட கண்டுப்பிடிப்புகள் இருப்பதாகவும், விரைவில் அவை அடுத்தடுத்து அறிமுகம் செய்ய இருப்பதாகவும் சந்தீப் தெரிவித்துள்ளார்.

            பாதுகாப்பானதா ?

            இதனால் ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா என்பது குறித்து தெரிந்து கொள்வது அவசியம். ஏசி பஸ்கள் தீரென்று தீப்பிடித்து எரிவது போன்ற செய்திகளை கேள்விபட்டிருக்கிறோம், அதனால் தொழில்நுட்ப கோளாறுகள் வராத வண்ணம் பார்த்து கொள்வது நல்லது.

            Source: https://www.autonews360.com/tamil/news/bikes/bengaluru-techie-has-designed-an-air-conditioned-helmet/

          • இந்தியாவில் முன்னணி சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாக இருந்து வரும் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம், ஜப்பானின் யமஹா மோட்டார் இணைந்து, லெக்ட்ரோ இஹெச்எக்ஸ்20 எலக்ட்ரிக் பைக்களை அறிமுகம் செய்துள்ளது. லெக்ட்ரோ இஹெச்எக்ஸ்20- பிரிமியம் எலக்ட்ரிக் பைக்கள், ஓய்வான நேரத்தில், ஆப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற வகையில் இருப்பதுடன், 1.35 லட்சம் ரூபாய் விலையில் கிடைக்கிறது.

            லெக்ட்ரோ இஹெச்எக்ஸ்20, முதல் தயாரிப்பாகவும், மூன்று வகை திட்டத்துடன் கடந்த ஆண்டு ஹீரோ சைக்கிள்ஸ் லிமிடெட் மற்றும் யமஹா மோட்டார் நிறுவனம் லிமிடெட் மற்றும் மிட்சுய் & கோ. லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.

            எலக்ட்ரிக் மோட்டார்கள் ஜப்பானில் டிசைன் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இ-பைக்கள் இந்தியாவில் காசியாபாத் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்படுகிறது. ஹீரோ சைக்கிள் நிறுவனம், லெக்ட்ரோ இஹெச்எக்ஸ்20-கள் உலகின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது.

            ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான பங்கஜ் எம் முன்ஜால் பேசுகையில், யமஹா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள லெக்ட்ரோ இஹெச்எக்ஸ்20-களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். ஹீரோ சைக்கிள்ஸ் மற்றும் யமஹா மோட்டார் நிறுவனம் இணைந்து உருவாக்கப்பட்ட முதல் தயாரிப்பாகும். இந்த இ-சைக்கிள், சென்டர் மோட்டார் மற்றும் அதிக திறனுடன் இருப்பதுடன், தீவிர சாகச விளையாட்டுகளுக்கு ஏற்றதாக இருக்கும். இந்த இ-பைக்கள் இந்திய மார்க்கெட்டில் பல்வேறு வகையான வாடிக்கையாளர்களை கவரும் என்று உறுதியாக நம்புகிறோம் என்றார்.

            யமஹா மோட்டார் கம்பெனி லிமிடெட் நிர்வாக அதிகாரி ஹிரோயுகி ஓட்டா தெரிவிக்கையில், ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த இ-சைக்கிள்கள், இந்திய சந்தையில் மின்-சுழற்சி பிரிவில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். யமஹா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள சென்டர் மோட்டார் இன்ஜின்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்றார்.

            லெக்ட்ரோ இஹெச்எக்ஸ்20 பிரிமியம் தயாரிப்புகள், அட்வென்சர் பயணங்கள் மற்றும் மலை பகுதிகளில் பயணிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும். இந்த இ-பைக்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் அவுட்லேட் பெற்று கொள்ளலாம். இந்த பைக்களின் சேல்ஸ் மற்றும் விநியோக மற்றும் மார்க்கெட்டிங் சப்போர்ட் போன்றவற்றை மிட்சுய் & கோ. லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தற்போது உள்ள இ-பைக்கள் ரியர் ஹப் மோட்டார்களுடன் கிடைக்கும். லெக்ட்ரோ இஹெச்எக்ஸ்20-கள் சென்டர்-மவுண்டட் மோட்டார்கள் பெடல்களுக்கு பொருத்தும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இ-பைக்கள் 10.9 AH பேட்டரிகளுடன் ஸ்விஃப் செய்து கொள்ளக்கூடியதாகவும், முழு சார்ஜில் 80 km தூரம் பயணிக்கும்.

            லெக்ட்ரோ இஹெச்எக்ஸ்20-கள் மெனுவல் பெடல்களுடன் பேட்டரி அசிஸ்ட் மற்றும் ஐந்து மோடுகல்களில், பல்வேறு அவுட்புட்களுடன் இருக்கும். லெக்ட்ரோ இஹெச்எக்ஸ்20-களில் டிரிபிள் சென்சார் டெக்னாலஜிகளுடன் டார்க் சென்சார், ஸ்பீட் சென்சார் மற்றும் கிராங்க் சென்சார்கல்லுடன் இருக்கும். லெக்ட்ரோ இஹெச்எக்ஸ்20-கள் சிங்கிள் சார்ஜில் 60-70 km தூரம் பயணிக்கும். இந்த சார்ஜ்-ஆக 3.5 மணி நேரமாகும்.

            ஷிமானோ ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்குகள், சிறந்த பிரேக்கிங் திறன்களுடன் இருக்கும். இது 2×10 கியர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஹீரோ சைக்கிள்ஸ், லெக்ட்ரோ பிராண்ட் பெயரில் குறைந்த விலையில் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இ-பைக்கள் அறிமுகம் செய்துள்ளது.

            Source: 

          • சுவிட்சர்லாந்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் இறகுப் போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட பிவி சிந்து இறுதி போட்டி வரை முன்னேறினார். அதிலும் திறம்பட செயல்பட்டு ஐப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இதனால் அனைத்து தரப்பு மக்களும் பிவி சிந்துவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் பிரபல நடிகை சமந்தாவின் மாமனார் நாகர்ஜூனா சாமுண்டேஸ்வர்நாத் வாங்கிய காரை பிவி சிந்துவிற்கு பரிசாக வழங்கியுள்ளார். இதுவே டாக் ஆஃப் தி டவுன்.

            பி.எம்.டபிள்யூ பரிசளித்த சாமுண்டேஸ்வர்நாத்

            சிந்துவின் வெற்றியை பாராட்டி பிரபல தெலுங்கு நடிகரும், நடிகை சமந்தாவின் மாமனாருமான நாகர்ஜூனா விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 ஆடம்பரக் காரை பரிசளித்துள்ளதாக புகைப்படங்களுடன் கூடிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த காரை ஹைதராபாத் பேட்மிண்டன் சங்கத்தின் தலைவர் சாமுண்டேஸ்வர்நாத் வாங்கியது குறிப்பிடதக்கது, விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு பரிசளிப்பது இவரது வழக்கம். அந்த வகையில் பி.வி. சிந்துவின் வெற்றியை பாராட்டி, அவருக்கு பி.எம்.டபிள்யூ கார் பரிசாக வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்வு நடிகர் நகார்ஜுனாவுக்கு சொந்தமான ஹைதராபாத் ஸ்டுடியோவில் வைத்து நடைபெற்றது.

            22வது கார் இது!

            விழாவில் பங்கேற்ற நடிகர் நாகார்ஜுனா, சாமுண்டேஸ்வர்நாத் வாங்கிய காரை பிவி சிந்துவுக்கு தன் கையால் பரிசளித்தார். விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்களுக்கு சாமுண்டேஸ்வர்நாத் தொடர்ந்து வழங்கும் 22வது கார் இதுவாகும்.

            சச்சின் அறிமுகம் செய்த கார்

            சிந்துவுக்கு கிடைத்துள்ள பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 கார், நாட்டில் விற்பனையாகும் ஆடம்பர கார்களில் முதன்மையான இடத்தில் உள்ளது. இது விற்பனைக்கு வந்த புதிதில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அறிமுகம் செய்து வைத்தார்

            பி.எம்.டபிள்யூ எக்ஸ்5 காரின் வசதிகள்

            பி.எம்.டபிள்யூ எக்ஸ்5 கார், XDrive30D Sport மற்றும் XDrives30D X line ஆகிய இரு வேரியண்டுகள் இதில் உள்ளன. இதனுடைய விலை ரூ. 72.9 லட்சம் தொடக்கத்தில் இருந்து, அதிகப்பட்சமாக ரூ. 80 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் விற்பனையாகி வரும் கார்களில் மிகப்பெரிய அளவு கொண்ட எஸ்யூவி மாடலாக எக்ஸ் 5 உள்ளது. தற்போது இந்த கார் நான்காவது தலைமுறை மாடலாக விற்பனையில் இருந்து வருகிறது. காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளன. பி.எம்.டபிள்யூ எக்ஸ்5 காரில் 3.0 லிட்டர் டர்போ சார்ஜட் டீசல் எஞ்சின் உள்ளது. இது 261 பிஎச்பி பவர் மற்றும் 620 என்.எம் டார்க் திறனை வழங்குகிறது. ஆட்டோமேட்டிக் டிரான்மிஷன் கொண்ட இந்த கார், துவக்க நிலையில் இருந்து 6.5 நொடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டிப்பிடித்துவிடும்.

            நெகிழ்ந்து போன சிந்து

            வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு வழங்கப்பட்டுள்ள கார் கருப்பு நிறத்தில் இருந்தது. இந்த காரை அவருக்கு வழங்கப்பட்ட போது, அவருடைய பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் மற்றும் பி.வி.சிந்துவின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். காரை வழங்கிய நாகர்ஜுனா, பி.வி. சிந்துவுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை கூறினார். பரிசு பெற்ற பி,வி, சிந்து நெகிழ்ந்து போனார்.

            Source: https://www.autonews360.com/tamil/news/cars/nagarjuna-gifts-pv-sindhu-a-brand-new-bmw-x5/

          • இந்தியாவில் ஆட்டோ துறையில் மந்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில், சில தயாரிப்புகள் சிறப்பாக செயல்பட்டு வருவதுடன், ஆட்டோ மொபைல் துறையில் தங்கள் தயாரிப்புகளை நிலை நிறுத்தி கொள்ள போராடி வருகின்றனர். இந்நிலையில், சில டூ-வீலர்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன. இருந்தபோதிலும், தங்கள் தயாரிப்புகளுக்கான விலையை உயர்த்தும் நிறுவனங்களும் இருந்து கொண்டு தான் வருகின்றன.

            கேடிஎம் நிறுவனம் கேடிஎம் 125 டியூக் மற்றும் ஆர்சி 125 பைக்களுக்கான விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு, தற்போது குறிப்பிட்ட நகரங்களில் லிமிட் செய்யப்பட்டுள்ளது.

            இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கேடிஎம் நிறுவனம் டீலர்ஷிப்களில் அடுத்து வரும் நாட்களில் இந்த விலை உயர்வுடன் கூடிய விற்பனை தொடங்க உள்ளது. இந்த விலை உயர்வின் படி, 125 டியூக்களின் விலை 2 ஆயிரத்து 248 ரூபாய் உயர்ந்துள்ளது. இதேபோன்று ஆர்சி 125 பைக்களின் விலை ஆயிரத்து 537 ரூபாய் அதிகரித்துள்ளது. புதிய விலைகளின்படி, கேடிஎம் 125 டியூக் மற்றும் ஆர்சி 125 பைக்களின் விலைகள் முறையே ஒரு லட்சத்து, 32 ஆயிரத்து 500 மற்றும் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 750 ரூபாயாக இருக்கும்.

            125 டியூக் மற்றும் ஆர்சி 125 இரண்டு பைக்களுக்கும், ஆட்டோ துறை மந்த நிலையில் இருந்து வரும் நிலையிலும், அதிக டிமாண்ட்களுடன் இருந்து வருகிறது. இதனாலேயே தங்கள் தயாரிப்புகளுக்கு விலையை உயர்த்தியுள்ளது. இது குறித்து கேடிஎம் நிறுவனம் எந்த கவலையும் கொள்ளவில்லை. கேடிஎம் 125 டூவின்கள், கேடிஎம் நிறுவனத்தின் அதிகளவில் விற்பனையாகும் பைக்களாக மாறியுள்ளதுடன், கடந்த ஜூன் மாதத்தை ஒப்பிடும் போது, ஜூலை மாதத்தில் 32.16 விழுக்காடு விற்பனை உயர்வை பதிவு செய்துள்ளது.

            கேடிஎம் 125 டியூக்கள் இந்தியாவில் பிரபலமடைவதற்கு அதிக திறன் கொண்ட பைக்களாக இருப்பதே காரணமாக இருந்து வருகிறது. கேடிஎம் 125 டியூக் பைக்களுக்கான விலை உயர்த்தப்படுவது இது நான்காவது முறையாகும். கடந்த ஜூன் மாதத்தில் 125 டியூக்களின் விலை 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து என்பது குறிப்பிடத்தக்கது.

            இந்த பைக்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது, 1.18 லட்சம் ரூபாயில் விற்பனை செய்யப்பட்டதுடன், கடந்த 2018-ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் 14 ஆயிரம் ரூபாய் விலை உயர்வை சந்தித்துள்ளது. ஆர்சி 125 பைக்கள் கடந்த ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அறிமுக விலையாக 1.47 லட்சம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது.

            தயாரிப்புக்கான செலவுகள் அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கான காரணமாக இருந்து வருகிறது. இரண்டு பைக்களும் ஒரே மாதிரியான 124.7cc, லிக்யுட் கூல்டு இன்ஜின்களுடன் 14.3 bhp மற்றும் அதிகப்பட்ச டார்க்காக 12 Nm- கொண்டதாக இருக்கும். இந்த இன்ஜின்கள் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 125 டியூக்-கள் யமஹா எம்டி 15, ஆர்சி 125 யமஹா ஒய்இசட் ஆர் 15 வி 3 ஐ பைக்களுக்கு போட்டியாக இருக்கும்.

            Source: https://www.autonews360.com/tamil/news/bikes/ktm-125-duke-rc-125-prices-hiked-again/

          No friends yet.

          Albums

            No items to display

            Videos

              No videos

              Let autonews360 know what you think!

              There are no polls of autonews360 yet.