புலிப்பாணிச் சித்தர்

புலிப்பாணி பதினெண் சித்தர்களுள் ஒருவரான போகரின் சீடர். போகரின் தாகம் தீர்க்க புலியின் மீதுimage அமர்ந்து நீரெடுத்து வந்ததால் (புலி + பாணி) அப்பெயர் பெற்றார். புலிப்பாணி நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.

"ஆள்தவே காலங்கி கடாட்சத்தாலே 
அப்பனே வேங்கை தனில் ஏறிக்கொண்டு 
தாழ்ந்திடவே ஜலம் திரட்டி புனிதவானும் 
சாங்கமுடன் தரணியிலே சுற்றிவந்தான்".

- போகர் -

போகருடைய சீடார்களில் ஒருவர், தமிழகத்தி பொன் வணிகர் குலத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறார்.

போகர் நவபாஷாணதைக் கொண்டு பழனி முருகன் சிலையை வடிக்கும் போது இவர் அவருக்கு உதவியாக இருந்ததாக சொல்லப் படுகிறது.

போகர் சமாதியடைய முன்னர் இவரை அழைத்து தமக்குப் பின் தண்டாயுதபாணி கோவில்ப் பூசை , புனஸ்காரங்களை இவரே செய்யவேண்டும் என்று பணித்ததாகவும் சொல்லப் படுகிறது.

இவர்,

புலிப்பாணி வைத்தியம் 500
புலிப்பாணி சோதிடம் 300
புலிப்பாணி ஜாலம் 325
புலிப்பாணி வைத்திய சூத்திரம் 200
புலிப்பாணி பூஜா விதி 50
புலிப்பாணி சண்முக பூஜை 30
புலிப்பாணி சிமிழ் வித்தை 25 
புலிப்பாணி சூத்திர நாணம் 12
புலிப்பாணி சூத்திரம் 9

ஆகிய நூல்களை இயற்றியாதாக சொல்லப்படுகிறது.

இவர் பழனி அருகில் வைகாவூர் எனுமிடத்தில் சமாதியடைந்ததாக சொல்லப்படுகிறது.

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)