பரணர் - சங்க காலப் புலவர்

imageபரணர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் கி.பி இரண்டாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்தவர் எனக் கணிக்கப்படுகின்றது. இவர் பல மன்னர்களையும் குறுநில மன்னர்களையும் பாடியுள்ளார். இது அவர் தமிழ்நாட்டின்பல பகுதிகளுக்கும் சென்றுள்ளார் என்பதைக் காட்டுகிறது. சங்க நூல்களில் ஒன்றான பதிற்றுப் பத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பத்து இவர் சேரன் செங்குட்டுவன் மீது பாடிய பாடல்களாகும். கரிகால் சோழனின் போர் வெற்றிகள் பற்றியும் இவரது பாடல்களில் காணமுடிகின்றது.

உறையூரை ஆண்ட தித்தன் என்பவனைப் பற்றியும், பாலி நாட்டுத் தலைவனான உதியனைப் பற்றியும், கோசருடன் போரிட்டு வென்ற பொதியமலைக்குத் தலைவனான திதியன் என்பவனைப் பற்றியும் இவர் பாடிய பாடல்கள்அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.

சங்க காலப் புலவர்களில் மிகவும் சிறந்த புலவர்களில் ஒருவர் பரணர். பரணரால் பாடப்பாடுவது பாராட்டுதற்குரியது என்ற கருத்தில் “பரணன் பாடினனோ” என்று அவ்வையார் குறிப்பிடுகிறார் (புறநானூறு - 99). பரணர், புறநானூற்றில் 13 செய்யுட்களும், அகநானூற்றில் 16 செய்யுட்களும், நற்றிணையில் 12 செய்யுட்களும், பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தும் பாடியுள்ளார்.

இவர் பாடல்கள் வரலாற்றுச் செய்திகள் நிறைந்தவை. இவர் கபிலரின் நண்பர். மருதத் திணைக்குரிய பாடல்கள் இயற்றுவதில் வல்லவர். இவரால் பாடப்பட்டோர் உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி, சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி, வையாவிக் கோப்பெரும் பேகன், சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் ஆகியோராவர்.

இவர் பதிற்றுப் பத்தில் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பாடியதற்கு, உம்பற்காட்டு வாரியையும் அவன் மகன் குட்டுவன் சேரனையும் பரிசாக பெற்றதாகக் கூறப்படுகிறது.

பரணர் பாடல்கள்:

மொத்தம் 85. அவை:

அகநானூறு 6, 62, 76, 116, 122, 125, 135, 142, 148, 152, 162, 178, 181, 186, 196, 198, 208, 212, 222, 226, 236, 246, 258, 262, 266, 276, 322, 326, 356, 367, 372, 376, 386, 396

குறுந்தொகை 19, 24, 36, 60, 73, 89, 120, 128, 165, 199, 258, 292, 298, 328, 393, 399,

நற்றிணை 6, 100, 201, 247, 260, 265, 270, 280, 300, 3`10, 350, 356

பதிற்றுப்பத்து - ஐந்தாம்பத்து 10 பாடல்கள்,

புறநானூறு 4, 63, 141, 142, 144, 145, 336, 341, 343, 348, 352, 354, 369

 

பரணர் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள்:

சேரர்

எழுமுடி மார்பின் எய்திய சேரல், கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன், குடவர் கோமான் பெருஞ்சேரலாதன், குட்டுவன், குட்டுவன் சேரல், சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன், சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், பெரும்பூண் பொறையன், பொறையன், மாந்தரன் பொறையன் கடுங்கோ,

சோழர்

கரிகாலன், சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி, (சோழன் மணக்கிள்ளி), சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளி, தித்தன்,

பாண்டியர்

செழியன், பசும்பூட் பாண்டியன்,

மன்னர் முதலானோர்

அழிசி, சேந்தன், அகுதை, அஞ்சி, அதிகன், அறுகை, அதியமான் நெடுமானஞ்சி, ஆட்டனத்தி, ஆய், ஆய் எயினன், ஆரியப் பொருநன், (ஆரிய அண்ணல்), எயினன், எவ்வி, ஐயை, ஓரி, கட்டி, கணையன், கழுவுள், குறும்பியன், ஞிமிலி, தழும்பன், திதியன், தித்தன் வெளியன், நள்ளி, நல்லடி, நன்னன், நன்னன் ஆய், நன்னன் உதியன், நெடுமிடல், பழையன், பாணன், பிண்டன், பேகன், மத்தி, மருதி, மலையன், மிஞிலி, மோகூர்(மன்னன்), வல்லங்கிழான் நல்லடி, விச்சியர் பெருமகன்,விரான், வெளியன் வேண்மான், (கண்ணகி, கடவுள் பத்தினி), கண்ணகி(பேகன் மனைவி), அன்னி மிஞிலி,

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)