Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

தத்தளிக்கும் ஆட்டோமொபைல் துறை, வேலையிழக்கும் தொழிலாளர்கள்..!

தத்தளிக்கும் ஆட்டோமொபைல் துறை, வேலையிழக்கும் தொழிலாளர்கள்..!

இந்தியாவில் தொழில்துறைகளில் முன்னனியில் இருப்பது ஆட்டோமொபைல் துறை என்றால் மிகையல்ல. இதனால் இந்தியாவில் பல கோடி பேர் பலனடைந்த வருகிறார்கள். ஆட்டோமொபைல் துறையால் மறைமுகமாக பல துறைகளும் இயங்கி வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியடைந்து வருவதோடு பல லட்சம் பேர் வேலையின்றி தவிக்கும் இக்கட்டான சூழல் நிலவுகிறது.

4 கோடி பேர்

இந்திய உற்பத்தித் துறையில் சுமார் 45 சதவிகிதம் பங்களிப்பது ஆட்டோமொபைல் துறை தான் இதில் 4 கோடி பேர் இதனை சார்ந்து வாழ்கின்றனர். ஆனால் இன்றைய ஆட்டோமொபைல் துறையின் நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. இந்த ஒரு துறை மட்டும் இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 7.5 சதவிகிதம் வரை பங்களித்து வருகிறது. இவ்வளவு பெரிய துறையிலேயே தொடர்ந்து வேலை இழப்புகள், வேலை இல்லா நாட்கள் தொடர்கதையாவது வருத்தமான செய்தியே.

பாதிப்புள்ளாகும் பிற துறைகள்

சில துறைகள் மற்ற துறைகளுடன் மறைமுகமாக ஒன்றினைந்த ஒன்றாக இருக்கும். அதே நிலைதான் ஆட்டோமொபைல் துறையும். ஆட்டோமொபைல் துறை பாதிப்புக்குளானால் ஆட்டொமெட்டிக்காக வீழ்ச்சியை சந்திக்கும், ஆம் அட்டொ மொபைல் வீழ்ச்சியால் இன்சுரன்ஸ், எரி பொருள் நிறுவனங்களில் ஆரம்பித்து Spare parts தயாரிக்கும் நிறுவனம் வரை இதன் தாக்கம் நிச்சயம் இருக்கும் என்றே கூறப்படுகிறது.

பதற வைக்கும் புள்ளி விபரங்கள்

இந்தியாவில் கடந்த செப்டம்பர் 2019-ல் 20,04,932 வாகனங்களைத் தான் விற்று இருக்கிறார்களாம். செப்டம்பர் 2018-ல் 25,84,062 வாகனங்கள் விற்கப்பட்டது. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இந்திய ஆட்டோமொபைல் துறையின் விற்பனை சுமார் 22.4 சதவிகிதம் சரிவைச் சந்தித்து இருக்கிறது. கனரக வாகனங்களை பொருத்தளவில் இந்தியாவில் செப்டம்பர் 2019-ல் லாரி போன்ற கன ரக வாகனங்கள் மொத்தம் 58,419 விற்க்கப்பட்டது. ஆனால் கடந்த செப்டம்பர் 2018-ல் 95,870 கண ரக வாகனங்களை விற்றார்களாம். நிறுவனங்கள் வெளியீட்டுள்ள புள்ளி விபரங்களின் படி 39% வீழ்ச்சி அடைந்திப்பதாக தெரிகிறது.

பறிபோகும் வேலை

இதன்விளைவாக நிறுவனங்கள் தொழிலாளர்களை கைவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாருதி, அசோக் லைலாண்ட் போன்ற முன்னனி நிறுவனங்கள் அதன் செயல்படும் நாட்களை குறைத்து கொண்டதோடு ஒப்பந்த பணியாளர்களை வேலை விட்டு தூக்கி விட்டனர். இதே நிலை தொடர்ந்தால் தோராயமாக 10 லட்சம் வேலை இழக்க கூடும் என கூறப்படுகிறது.

Source: https://www.autonews360.com/tamil/news/cars/losing-jobs-as-indias-automobile-crisis/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)