Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கில் வோடஃபோன் ஐடியா சிம் மூலம் 4G IoT இணைப்பு அறிமுகம்..!

ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கில் வோடஃபோன் ஐடியா சிம் மூலம் 4G IoT இணைப்பு அறிமுகம்..!

ரிவோல்ட் நிறுவனம் சமீபத்தில் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் பைக்களை அறிமுகப்படுத்தியது. இதற்கு ஆட்டொமொபைல் மார்கெட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அக்டோபர் மாதத்தோடு முன்பதிவு நிறைவுபெற்ற நிலையில் தற்சமயம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான முன்பதிவுகள் நடந்து வருகிறது. இந்த மாடல் பைக்குகளில் ஏகப்பட்ட புதிய அம்சங்கள் அறிமுகமாகிறது. முக்கியமானதாக கருதப்படுவது ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 பைக்குகளின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் சிம் கார்டு மூலமாக நேரடி இணைய வசதியை வழங்கும் வசதி கொடுக்கப்படுகிறது.

வோடஃபோன் ஐடியாவோடு கைகோர்க்கும் ரிவோல்ட்

இதனை சாத்தியப்படுத்த ரிவோல்ட் நிறுவனம் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. அதில் பாசிட்டிவான முடிவுகள் எட்டப்பட்டு இதனை நடைமுறை படுத்த இரு நிறுவனங்களும் தயாராகியுள்ளது. இதன்விளைவாக, ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்குகளில் 4ஜி இணைய வசதி பெற முடியும்.இந்த இணைய வசதி மூலமாக பல்வேறு வசதிகளை ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலம் இணைய வசதிகளை பெற்று கொள்ளலாம்.

சிறப்பம்சங்கள்

வெறும் 4 மணிநேரத்திற்குள் முழுமையாக சார்ஜாகிவிடும் இந்த பைக்கின் பேட்டரி மூலம் அதிகம்பட்சம் 156 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இந்த பேட்டரி கழட்டி மாட்டும் தன்மையுடன் இருக்கிறது. தேவைக்கு ஏற்றவாறு ஒரு பேட்டரியை சார்ஜ் போட்டுவிட்டு, மற்றொரு பேட்டரியை பயன்படுத்திக் கொள்ளலாம். சாதாரண 15A சார்ஜர் மூலமாக பேட்டரியை சார்ஜ் செய்ய 4 மணிநேரம் முழுமையாக தேவை. இணைய வசதிகளால் வாடிக்கையாளர்க்கு என்ன லாபம் என்று துறை சார்ந்த நிர்வாகிகளிடம் பேசினோம். இன்று இணைய வசதிகள் இருந்தால் எல்லா வற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது. பயணங்களின் போது இணைய வசதி மிகவும் அவசியமான ஒன்று. இந்த வசதியை அமல்படுத்துவது மூலமாக நேவிகேசன், சுற்றுசூழலின் நிலை, ட்ராபிக் போன்றவற்றை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

மாத தவணையில்ம் ரிவோல்ட் பைக்குகள்

புதிய ரிவோல்ட் ஆர்வி300 எலெக்ட்ரிக் பைக் ரூ 2,999 மாதத் தவணையிலும், ஆர்வி400 ஸ்டான்டர்டு மாடல் ரூ.3,499 மாதத் தவணையிலும், ஆர்வி400 பிரிமீயம் மாடல் ரூ.3,999 விலையிலும் கிடைக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/news/bikes/revolt-partners-with-vodafone-idea-for-4g-iot-connectivity-solutions/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)