Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

ரெனால்ட் டஸ்ட்டர் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஸ்பை படம் முதல் முறையாக வெளியானது..!

ரெனால்ட் டஸ்ட்டர் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஸ்பை படம் முதல் முறையாக வெளியானது..!

உள்நாட்டு மார்க்கெட்டில் ரெனால்ட் நிறுவன தயாரிப்புகளில் சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களாக க்விட் மாடல்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் ரெனால்ட் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய வாகனத்தை டஸ்டர் என்ற பெயருடன் வெளியிட்டுள்ளது.

இந்த எஸ்யூவி-கள் வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இரண்டு முக்கிய அப்டேட்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அடுத்த தலைமுறை டஸ்டர்கள் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் போதிலும், இந்தியாவில் இவை எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகவில்லை.

கடந்த ஜூலை மாத்தில் டஸ்டர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட்கள் வெளியிடப்பட்டது. இந்த ஃபேஸ்லிஃப்ட்களில் கட்டமைப்பு மற்றும் எக்ஸ்டீரியர் மாற்றங்களுடன் அடுத்த தலைமுறை மாடல்களின் வரவு வெகு விரைவில் இருக்காது என்ற தெரிகிறது. இந்நிலையில், ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே, ஜீரோ எமிஷன் டஸ்டர்களை சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்தாண்டின் துவக்கத்தில் முதல் செட் ஸ்பை படங்கள் இன்டர்நெட்டில் வெளியானது.

திட்டமிடப்படாதபடி வேலைப்பாடுகளுடன் கூடிய முதல் தலைமுறை டஸ்டர், ரெனால்ட் நிறுவனத்தின் சார்ப்பு நிறுவனமாக இருந்து வரும் டாசியா நிறுவனம், டஸ்டர் கார்களின் எலக்ட்ரிக் வெர்சன் prototype சோதனை செய்துள்ளது.

இந்த டெஸ்ட் முயற்சிகள், சீட்களுக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி பேக்களுடன் உள்ளது. மேலும் இவை இது கடினமான வேலைப்பாடுகளுக்கு கூடியபடி கட்டமைப்பின் அடியில் காணப்படுகிறது. இந்த அனைத்து செயல்பாடுகளும் ஒரு புதிய மின்சார வாகன கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது.

வழக்கமான டஸ்டர்களுடன் ஒப்பிடும் போது, இந்த prototype-கள் நீளம் மற்றும் அகலம் மற்றும் புதிக்கப்பட்ட டயர்கள், பாதுகாப்பிற்கான ரேஸ்-ஸ்பெக் ரோல் கேஜ் மற்றும் ஸ்போர்ட்டி ரேசிங் பாக்கெட் சீட்கள் ஆகியவற்றைக் கொண்டது. இவை அனைத்தும் டாசியா ரேஸ் கார்க்ளுளான அன்ட்ராஸ் டிராப்பி ஐஸ் சீரிஸ்களின் கீழ் முதல் தலைமுறை டஸ்டர் கார்களின் பாடி உடன் கிடைக்கும். பிரேக்கை பார்க்கும் போது, இதில் பெரியளவிலான ப்ரெம்போ யூனிட்கள் முன்புறத்திலும், ஆல்பின் கிளிப்பர்கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

Dacia ரோடு கார் பிரிவு எலக்ட்ரிக் ரேஸ் கிளாஸ் பிரிவில் நுழைந்துள்ளது மிகவும் நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. மேலும், இந்த டிராக்கள் குறித்து தெரிந்து கொள்வது, சாலைகளில் டெக்னாலஜிகளை கொண்டு வர உதவும். அடுத்த ஆண்டுகளுள் Dacia நிறுவனம், முதல் சுற்றுச்சூழலை பாதிக்காக மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதே போன்று பிரபலமான வாகனங்களான சான்ட்ரோ மற்றும் டஸ்டர் போன்றவையும் எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட உள்ளது.

ரெனால்ட் நிறுவனம் இவி வாகனங்களை சர்வதேச அளவில் விற்பனை செய்து அனுபவம் பெற்றுள்ளது என்பது கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. மேலும், இந்த நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார்கள் வரும் 2022-ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை Dacia மலிவு விலை இவி-களை தயாரித்தால், டஸ்டர் கார்களும் பேட்டரி மூலம் இயங்கும் கார்களை ஏன் எதிர்காலத்தில் தயாரிக்க கூடாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. ரெனால்ட் நிறுவனத்தின் சிட்டி கேஇசட்-இ கார்களில் சீனாவில் விற்பனை செய்ப்பட்டு வரும் நிலையில், இதை மாற்ற நாடுகளில் விற்பனை செய்ய சாத்தியமான வாய்ப்புகள் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

 

 

Source: https://www.autonews360.com/tamil/news/cars/renault-duster-electric-vehicle-spied-testing/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)