Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

வெறும் 49 நாட்களில் ஐம்பது ஆயிரம் புக்கிங்களை தாண்டி Hyundai Venue சாதனையை முறியடித்து “கிங்” என நிரூபித்த கியா செல்டோஸ்…!

வெறும் 49 நாட்களில் ஐம்பது ஆயிரம் புக்கிங்களை தாண்டி Hyundai Venue சாதனையை முறியடித்து “கிங்” என நிரூபித்த கியா செல்டோஸ்…!

கியா செல்டோஸ் கார்கள், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் நல்ல அங்கீகாரத்தை பெற்று வருகிறது. இந்த கார்களின் புக்கிங் தொடங்கப்பட்டு 49 நாட்களில் 50 ஆயிரம் யூனிட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், இந்த கார்களின் காத்திருப்பு காலம் 2 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆட்டோ தொழிற்சாலை வரலாற்றில், கியா செல்டோஸ்கள் அறிமுகம் செய்யப்பட்ட முதல் இதுவரை 50 ஆயிரம் புக்கிங்கை எட்டியுள்ளது. இந்த சாதனையை இதற்கு முன்பு ஹூண்டாய் வென்யு கார்கள் படைத்திருந்தது. இந்த கார்கள் கடந்த மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார்கள் அறிமுகம் செய்யப்பட்ட 60 நாட்களில் இந்த புக்கிங் சாதனையை எட்டியது. இந்நிலையில் கியா செல்டோஸ் அறிமுகமாகி 49 நாட்கள் ஆகி உள்ள நிலையில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி 50 ஆயிரம் புக்கிங்கை பெற்று ஹூண்டாய் வென்யு சாதனையை முறியடித்துள்ளது.

ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், இந்த புக்கிங் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நிறுவனம் ஆந்திர பிரதேசத்தில் உள்ள தனது தயாரிப்பு தொழிற்சாலையில் கார் தயாரிக்கும் பணிகளை அதிகரித்து வருகிறது. இந்த தொழிற்சாலை மாதத்திற்கு சுமார் 25 ஆயிரம் கார்களை தயாரிக்கும் திறன் கொண்டது. தற்போது இந்த தொழிற்சாலை, முழு திறனுடன் செயல்பட்டு வருகிறது.

கியா செல்டோஸ் கார்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதற்கு பல காரணங்கள் இருந்து வருகின்றன. இதற்கு இந்த காரின் நேர்த்தியான ஸ்டைல், ஸ்மார்ட் எக்ஸ்டீரியர்கள், இட வசதி கொண்ட இன்டீரியர்கள் மற்றும் பெரும்பாலான அம்சங்கள் கொண்ட காராக இது இருந்து வருகிறது. இந்த ஆர்ப்பாட்டமான காரின் விலை 9.69 லட்சம் ரூபாயில் தொடங்குகிறது. கூடுதலாக இந்தியாவில் பெரியளவிலான கார்களாக இருந்து வருகிறது.

கியா இந்தியா நிறுவனம் இன்று BEAT360-ஐ அறிமுகம் செய்தது. இது மூன்று ஜோன் கொண்ட மையமாக இருக்கும். மேலும் கியா ஆர்வர்லர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். BEAT360-கள் இந்தியாவில் முதலில் குருகிராமில் காணப்பட்டது.

கியா நிறுவனம் தெரிவிக்கையில், பீட் இன் BEAT360 என்பது BEATing ஆப் ஹார்ட், ‘3’ என்பது மூன்று ஜோன், ‘6’ என்பது ஆறு சென்ஸ்கள் மற்றும் ‘0’ என்பது பவுண்டரிகள் இல்லாதது என்பதை குறிக்கும். கூடுதலாக 360-களில் என்பது அனைத்து டைரக்டசன்களிலும், முப்பரிமாண அனுபவத்தை கொடுக்கும்.

BEAT360- ஹவுசிஸ் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். இவை சரவுண்டட் மீடியா ஜோன், மிக்ஸட்டு ரியாலிட்டி ஜோன் மற்றும் கான்பிகர் ஜோன்களுடன் ஆடியன்ஸ்களுக்கு ஏற்ற வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ளவும் முடியும். மேலும் வாடிக்கையாளர்களின் கனவுகளுக்கு ஏற்ப காரை வடிவமைத்து கொள்ளவும் முடியும்.

BEAT360-ஐ எனேபிள் செய்து கொள்வதால் பல்வேறு வகையான அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம். மேலும் அவர் மாற்றையமைகத்தக்க மொபைலிட்டிகளுடன், கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விஷன் மற்றும் மதிப்பை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.

இவை கபே ஜோன் வசதிகள் அதிவேக மையத்தை உயிர்பிக்கும் வகையில் இருக்கும். இது முழுமையாக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட வசதிகளுடன் இருக்கும். மேலும் இதில் பல்வேறு கலச்சார நிகழ்வுகளுடன் பிராண்டின் ஒர்க்ஷாப்கள், மியூசிக் மற்றும் எண்டர்டெயின்மென்ட் கிக்ஸ்களுடன் இருக்கும். இதற்காக தொழில்துறை வல்லுனர்கள் மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்து இனிமையான கியா அனுபவத்தை வழங்க உள்ளனர்.

கியா செல்டோஸ் கார்கள் மூன்று இன்ஜின் ஆப்சன்களில் கிடைக்கிறது. இவை பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும். இவை, 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்களுடன் 115 hp ஆற்றல் மற்றும் 144 Nm டார்க் கொண்டதாக இருக்கும். இதே போன்று 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் 115 hp ஆற்றல் மற்றும் 250 Nm டார்க் கொண்டதாகவும், டாப் லைன்கள் 1.4 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்களுடன் 140 hp ஆற்றல் மற்றும் 242 Nm டார்க் கொண்டதாக இருக்கும்.

ஒவ்வொரு இன்ஜின்களுடன் 6 ஸ்பீட் எம்டி, 6 ஸ்பீட் ஏடி, சிவிடி மற்றும் 7 ஸ்பீட் டிசிடி-களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த இன்ஜின்கள், ஹூண்டாய் குழுமத்தின் ஸ்மார்ட் ஸ்ட்ரீம் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இது எதிர்காலத்தில் கியா மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் அனைத்து மாடல்களிலும் பொருத்தப்படும் என்று தெரிகிறது.

அதிகரித்து வரும் டிமாண்ட்டை பார்க்கும் போது, கியா மோட்டர்ஸ் நிறுவனம் அண்மையில் டாப் வகை செல்டோஸ்களை அறிமுகம் செய்துள்ளது. இவை, ஜிடிஎக்ஸ்+ வகைகள், டிசிடி கியர்பாக்ஸ் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்சன்களுடன் இருக்கும். கியா செல்டோஸ் நிறுவனம் தற்போது மொத்தம் 16 வகைகளை அறிமுகம் செய்துள்ளது. இவை மூன்று இன்ஜின்களுடன் 4 டிரான்மிஷன் ஆப்சன்களுடன் இருக்கும்.

கியா செல்டோஸ் கார்களின் வெற்றியை தொடர்ந்து, கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் கூடுதலாக 5 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் இரண்டு இவி-களையும் ( சோல் மற்றும் நிரோ), மற்றும் டெல்லுரைடு, சோரெண்டோ மற்றும் ஸ்டிங்கர் போன்ற வகைகளாக இருக்கும். இந்த கார்கள் சிகேடி ரூட் வழியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, ஆந்திர பிரதேசத்தில் உள்ள அனந்தபூர் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்பட உள்ளது.

 

 

Source: https://www.autonews360.com/tamil/news/cars/kia-receives-more-than-50-000-bookings-in-49-days-beats-hyundai-venue-record/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)