Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

விற்பனையில் கலக்கும் Maruti S Presso…ரெனால்ட் க்விட்டை வீழ்த்தி முதல் இடத்துக்கு முன்னேறியது!!

    autonews360
    • 2 views
    • 0/5 (0 votes)
    By autonews360
    விற்பனையில் கலக்கும் Maruti S Presso…ரெனால்ட் க்விட்டை வீழ்த்தி முதல் இடத்துக்கு முன்னேறியது!!

    இந்திய ஆட்டோமொபைல் துறையில் இந்தாண்டு மந்தநிலை நிலவி வரும் நிலையில், இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட் தற்போது, பழைய ட்ரான்சிஷன் முறையிலிருந்து புது ட்ரான்சிஷன் முறைக்கு (கிராஷ் டெஸ்ட் மற்றும் எமிஷன்) போன்றவைகளுக்கு மாறி வருகிறது. இதனால் புதிதாக கார் வாங்குபவர்கள், விரைவில் வெளியேறும் மாடல்களை வாங்க விரும்பாமல் புதிய மாடல்களுக்காக காத்திருக்கும்படி செய்கிறது.

    இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் வரை ஆட்டோ தயாரிப்பு நிறுவனங்களில் YoY திறன் பின்னோக்கியோ இருந்து வருகிறது. அதிக விற்பனை கொண்ட கார்களின் விற்பனை 22.9 விழுக்காடாக குறைந்தது, 46 ஆயிரத்து 525 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

    ஹூண்டாய் சாண்ட்ரோ மற்றும் மாருதி எஸ்-பிரஸ்ஸோ கார்களின் விற்பனை குறித்து முந்திய ஆண்டில் தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், மற்ற எல்லா மாடல்களும் விற்பனையில் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வீழ்ச்சியில் மாருதி ஆல்டோ கார்கள் 15 ஆயிரத்து 79 கார்களை மட்டுமே விற்பனை செய்து 30.57 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளது.

      Sep-19 Sep-18 Diff % Aug-19 Diff %
    1 Maruti Alto 15,079 21,719 -6,640 -30.57 10,123 4,956 48.96
    2 Maruti WagonR 11,757 13,252 -1,495 -11.28 11,402 355 3.11
    3 Maruti S-Presso 5,006 0 5,006 0 5,006
    4 Maruti Celerio 4,140 9,208 -5,068 -55.04 4,765 -625
    5 Hyundai Santro 3,502 0 3,502 3,288 214 6.51
    6 Tata Tiago 3,068 8,377 -5,309 -63.38 3,037 31 1.02
    7 Renault Kwid 2,995 5,529 -2,534 -45.83 2,191 804 36.70
    8 Datsun Redi-Go 842 1,658 -816 -49.22 751 91 12.12
    9 Datsun Go 136 597 -461 -77.22 205 -69
      Total 46,525 60,340 -13,815 -22.90 35,762 10,763 30.10

     

    மாருதி வேகன் ஆர்-கள் செப்டம்பர் மாத சிறிய கார்கள் விற்பனை பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த கார்களின் விற்பனை 11 ஆயிரத்து 757 யூனிட்களுடன் 11.8 விழுக்காடு பின்னடைவை சந்தித்து உள்ளது. இந்த பட்டியலில் மாருதி எஸ் பிரஸ்ஸோ, மைக்ரோ கிராஸ்ஓவர் கார்களில் 5 ஆயிரத்து 6 யூனிட்களை டிஸ்பேட்ஜ் செய்துள்ளது. இந்த மாதத்தில் இந்த கார்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் இந்த காருக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

    மாருதி செலிரோ கார்களின் விற்பனையை, கடந்த 2018-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்போது 4 ஆயிரத்து 140 யூனிட்களாக இருந்து வருகிறது. இந்த ஹாட்பேக்கள் தற்போது ஒருங்கிணைக்கப்பட்ட அப்டேட்களுடன் வெளியாகியுள்ளது. மாருதி அல்லாத வகையான ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களின் விற்பனை கடந்த மாத்தில் அதிகரித்துள்ளது. அதாவது ஹூண்டாய் சாண்ட்ரோ-களின் விற்பனை 3 ஆயிரத்து 502 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

    டாடா டிகோர்கள் இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த கார்கள் 3 ஆயிரத்து 68 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இருந்தாலும் 63.38 விழுக்காடு விற்பனை சரிவை சந்தித்துள்ளது. ஆட்டோதயாரிப்பாளர்கள், தற்போது டிஜிட்டல் இன்ஸ்டுரூமென்ட் கான்சோல்களை டியாகோ கார்களுக்கான ஃபேஸ்லிஃப்ட்களை அறிமுகம் செய்துள்ளது.

    ரெனால்ட் க்விட்கள் 2 ஆயிரத்து 995 யூனிட்களை டிஸ்பேட்ஜ் செய்துள்ளது. முதல் மாதத்தில் இந்த கார்கள், மாருதி எஸ் பிரஸ்ஸோ கார்களுக்கு போட்டியாக இருந்தது. டட்சன் ரெடிகோ மாடல்கள், 842 யூனிட்களை விற்பனை செய்து 50 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளது. இந்த கார்களின் ஃபேஸ்லிஃப்ட்கள் சிவிடிகளை அறிமுகம் செய்துள்ளதுடன், கடந்த மாதத்தில் 136 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

    மேற்குரிய விற்பனை எண்ணிகை அனைத்தும், மொத்த விற்பனை அளவையே (தொழிற்சாலையில் டிஸ்பேட்ஜ்) காட்டுகிறது. இந்நிலையில், தற்போது சில ஆட்டோ தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பு பணிகளை நிறுத்தி, மந்த நிலையை கட்டுபடுத்த முடிவு செய்துள்ளன. இருந்தாலும் பண்டிகைகாலத்தில் கார்களின் விற்பனை சிறிதளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     

    Source; https://www.autonews360.com/tamil/news/cars/maruti-s-presso-beats-renault-kwid-september-sales-2019/

    Ratings

    0/5 (0 votes)
    0/5 (0 votes)