Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

MV Agusta Dragster Series: ஸ்டைலிஷான மூன்று புதிய பைக்குகள் விற்பனைக்கு அறிமுகமானது…!

MV Agusta Dragster Series: ஸ்டைலிஷான மூன்று புதிய பைக்குகள் விற்பனைக்கு அறிமுகமானது…!

எம்.வி. ஆகஸ்டா டிராக்ஸ்டெர் 800 சீரிஸ்களில் 3 புதிய பைக்கள் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்குள் 18.73 லடசம் ரூபாய் துவக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இத்தாலியை சேர்ந்த எம்.வி. ஆகஸ்டா நிறுவனம், இந்தியாவில் கைனெட்டிக் நிறுவனத்துடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் இணைந்துள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து கைனட்டிக் மோட்டோராயல் நிறுவனம் லிமிடெட் எடிசன் மாடல்களாக, வெறும் 200 யூனிட்களை மட்டுமே விற்பனைக்கு வெளியிட உள்ளது.

இந்தியாவில் உள்ள பைக்பிரியர்களை கவரும் நோக்கில், எம்.வி. ஆகஸ்டா டிராக்ஸ்டெர் 800 சீரிஸ்களில், டிராக்ஸ்டர் 800 ஆர்.ஆர், டிராக்ஸ்டர் ஆர்.ஆர் அமெரிக்கா, ஆர்.ஆர் பைரல்லி என 3 புதிய பைக்கள் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

விலைகளை பொறுத்தவரையில், டிராக்ஸ்டெர் 800ஆர்ஆர், டிராக்ஸ்டெர் 800ஆர்ஆர் அமெரிக்கா மற்றும் டிராக்ஸ்டெர் 800ஆர்ஆர் பைரெல்லி ஆகிய பெயர்களில் இந்த மாடல்கள் வந்துள்ளன. இதில், டிராக்ஸ்டெர் 800ஆர்ஆர், டிராக்ஸ்டெர் 800ஆர்ஆர் அமெரிக்கா மாடல்கள் 18.73 லட்சம் ரூபாய் விலையிலும், பைரெல்லி மாடல் 21.5 லட்சம் ரூபாய் விலையிலும் கிடைக்கும். (எக்ஸ்ஷோரூம் விலை இந்தியாவில்)

இந்த மூன்று பைக்குகளிலும் ஒரே மாதிரியான 800 cc இன்ஜின்களுடன் 140 hp ஆற்றல் மற்றும் 87 Nm டார்க் கொண்டதாக இருக்கும்.

மேலும் டிராக்ஸ்டெர் 800 ஆர்ஆர் மற்றும் டிராக்ஸ்டெர் 800ஆர்ஆர் அமெரிக்கா மாடல்கள் இரண்டும் ஐஸ் பியர்ல் ஒயிட் – டார்க் மேட் க்ரே மற்றும் நார்டோ க்ரே – டார்க் மேட் கிரே ஆகிய இரண்டு கலர் ஆப்சன்களில் கிடைக்கிறது. இதில் டிராக்ஸ்டெர் 800ஆர்ஆர் அமெரிக்கா மாடல்களில் ஸ்பெஷல் பாடி டெக்கல் ஸ்டிக்கர் டிசைன்களுடன் கிடைக்கிறது. இதே போன்று பைரெல்லி மாடல்கள் மேட் பிளாக் – பைரெல்லி யெல்லோ மற்றும் ஐஸ் பியர்ல் – அமெரிக்கன் புளூ ஆகிய இரண்டு கலர் ஆப்சன்களில் கிடைக்கிறது.

எம்.வி. ஆகஸ்டா டிராக்ஸ்டெர் 800 சீரிஸ் அறிமுக விழாவில் பேசிய மோட்டோராயல் நிறுவன நிர்வாக இயக்குனர் அஜிங்கியா பிரோடியா, இந்தியாவின் செயல்பட்டு வரும் ஒரே மல்டி பிராண்டு சூப்பர் பைக் விநியோகம் செய்யும் நிறுவனம் மோட்டோராயல் நிறுவனம். நாங்கள் எம்வி ஆகஸ்டா நிறுவனத்தின் அனைத்து சூப்பர் பைக்குகளையும் விற்பனை செய்வதில் பெருமை அடைகிறோம். இந்த பைக்களின் கவர்ந்திழுக்கும் தோற்றம், செயல்திறன், வேகம், பாதுகாப்பு கட்டமைப்புகள் போன்றவை இந்தியாவில் வசிக்கும் பைக் பிரியர்களை வெகுவாக கவரும் என்று நம்புகிறோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மோட்டோராயல் நிறுவனம் ஷோரூம்கள் இந்தியாவின் சென்னை, கொச்சி, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை போன்ற இடங்களில் தற்போது நிறுவப்பட்டுள்ளது. மேலும் எங்கள் சேவை விரிவு படுத்தும் நோக்கில் ஜெய்ப்பூர், கொல்கத்தா, டெல்லி, சண்டிகர் ஆகிய நகரங்களிலும் மோட்டோராயல் ஷோரூம்கள் தொடங்கப்பட உள்ளது என்றார்.

Source: https://www.autonews360.com/tamil/news/bikes/mv-agusta-dragster-800-series-launched/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)