Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அதிகாரப்பூர்வ காரின் சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்தால் அப்படியே மெர்சலாகிடுவீங்க..!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அதிகாரப்பூர்வ காரின் சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்தால் அப்படியே மெர்சலாகிடுவீங்க..!

சீன அதிபர் ஜீ ஜின்பிங் அரசு முறை பயணமாக நாளை 11ஆம் தேதி சென்னை வருகிறார். 12,13 ஆகிய தேதிகளில் வரலாற்று சிறப்புமிக்க இடமான மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதுடன் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகவுள்ளன.

சென்னை வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு காரில் பயணிக்க உள்ளார். விமான நிலையத்தை சுற்றிய பகுதிகளை அழகுபடுத்தும் பணிகளில் ஏராளமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாலைகளை செப்பனிடுவது, சுவர்களுக்கு வெள்ளை அடிப்பது, பூங்காக்கள் அமைப்பது என படு ஜோராக பணிகள் நடைபெற்று வருகின்றன.

சீன அதிபர் ஜி ஜின்பிங் தான் வெளிநாடுகளுக்கு செல்லும் போது அதிகாரப்பூர்வ காரையும் எடுத்து செல்வது வழக்கம். இதன்படி அவரது அதிகாரப்பூர்வ கார்கள் போயிங் 747 விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கார்கள் அவ்வளவு சிறப்பு வாய்ந்ததா? அதில் என்னென்ன வசதிகள் இடம் பெற்றுள்ளது என்பதை தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்….

  1. சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தி வரும் கார் சீனாவின் பாரம்பரியம் மிக்க ஹாங்கி நிறுவனம் தயாரித்து அளித்துள்ள கார். இந்த நிறுவனம் தற்போது எஃப்.ஏ.டபிள்யூ வாகன குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது என்பது கூடுதல் தகவல்
  2. சீனாவின் கம்யூனிச கொள்கையின் பாரம்பரியத்தை விளக்கும் வகையிலான செங்கொடி என்று பொருள்படும் பெயரை கொண்ட ஹாங்கி நிறுவனத்தின் கார்களையே பெரும்பாலான சீன அதிபர்கள் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.
  3. கடந்த 1958-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த ஹாங்கி நிறுவனம் 1981-ம் ஆண்டு வரை அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே கார்களை தயாரித்து அளித்து வந்தது.
  4. சீன அதிபர்கள் வெளிநாட்டு பயணிக்கும் போது, அந்தந்த நாடுகள் கொடுக்கும் பாதுகாப்பான வாகனங்களை மட்டுமே பயன்படுத்தி கொள்வது வழக்கமான இருந்த நிலையில், தற்போது உள்ள சீன அதிபர் இந்த நடைமுறையை மாற்றியுள்ளார்.
  5. சீன அதிபர் ஜி ஜின்பிங் அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தி வரும் ஹாங்கி நிறுவனத்தின் எல்-5 கார்கள். இந்த கார்கள் ஹாங்கி நிறுவனத்தின் பிரபலமான சிஏ770 என்ற கார்களின் மூலம் கவரப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் காரில் இடம் பெற்றுள்ள வசதிகளை தெரிந்து கொள்ளுங்கள்….

  • சீன அதிபரின் ஹாங்கி எல்-5 கார் மாடலானது குண்டு துளைக்காத கார்
  • கண்ணி வெடி தாக்குதல்களையும் தாங்கும் திறன் கொண்டது.
  • ஸ்பெஷல் ரன் ஃப்ளாட் டயர்கள் கொண்டதாக இருக்கும். இது பஞ்சர் ஆகாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • லிமோசின் வகை கார் மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.
  • 5.55 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும், 1.5 மீட்டர் உயரமும் கொண்ட பிரம்மாண்ட கார்.
  • அதிக இடவசதி கொண்டதுடன் வீல் பேஸ் நீளம் 3.4 மீட்டர் அளவில் இருக்கும்.
  • இந்த காரின் எடை 3.15 டன்னாக இருக்கும். மெர்சிடிஸ் மேபக் எஸ்600 கார் விட பெரியளவில் இருக்கும் எனது கூடுதல் தகவல்.
  • ஆடம்பரமான சீட்களுடன், ஸ்பெஷல் ஏசி சிஸ்டம்களும் பொருத்தப்பட்டுள்ளது.
  • காரில் செங்கொடியை பிரதிபலிக்கும் லைட், கொடி மற்றும் பாரம்பரிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
  • சேட்டிலைட் போன் வசதி

சீன அதிபர் ஜி ஜின்பிங் காரின் விலை மற்றும் ஆற்றல் திறனையும் தெரிந்து கொள்ளுங்கள்…

  • இந்த கார்கள் இந்திய மதிப்பில் 5.69 கோடி ரூபாய் விலை கொண்டது.
  • 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 ரக இன்ஜின்களுடன் 381 hp 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.
  • அதிவேகம் கொண்ட இந்த கார் 0 – 100 கிமீ வேகத்தை 10 வினாடிகளில் எட்டி விடும். 105 லிட்டர் பெட்ரோல் டேங்க் கேப்பசிட்டி கொண்ட இந்த கார்கள் டேங்க் நிரப்பபட்ட நிலையில் 500 கிலோ மீட்டர் தூரம் ஓடும்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் காரின் பாதுகாப்பு கருதி, குண்டு துளைக்காத கண்ணாடிகள் தொடங்கி, மிக கனமான கட்டமைப்பு என பல்வேறு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு கருதி, இந்த காரின் சிறப்புகளில் பெரும்பாலானவை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. கார் என்ஜின், திறன் போன்ற சில விஷயங்கள் மட்டுமே வெளி உலகிற்கு தெரியும்.

நாளை இந்த கார் சென்னை சாலைகளிலும் தடம் பதிக்க உள்ளது பெருமைக்குரிய விஷயமாகும்.

Source: https://www.autonews360.com/tamil/news/cars/chinese-president-xi-jinping-official-car-features-explained/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)