Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

Jawa 90th Anniversary Edition ஸ்பெஷல் பைக் இந்தியாவில் அறிமுகம்; விலையை கேட்டா உடனே வாங்கிடுவீங்க..!

Jawa 90th Anniversary Edition ஸ்பெஷல் பைக் இந்தியாவில் அறிமுகம்; விலையை கேட்டா உடனே வாங்கிடுவீங்க..!

கிளாசிக் லிஜெண்ட்ஸ் நிறுவனமான ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம், ஜாவா 90-வது அனிவெர்சரி எடிசன்களை இந்தியாவில், 1.73 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை) அறிமுகம் செய்துள்ளது. இந்த பிராண்டின் 90-வது அனிவெர்சரி கொண்டாட்டத்தை முன்னிட்டே இந்த பைக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்தை செக்கோஸ்லோவாக்கியாவுக்கு முந்திய காலகட்டத்தில் 1929 ஆம் ஆண்டில் ஃபிரான்டிசெக் ஜானெசெக் இந்த பிராண்டை நிறுவினார். இந்த நிறுவனத்தில் இருந்து வெளி வந்த முதல் மோட்டார் சைக்கிள் – ஜாவா 500 ஓஹெச்வி என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அனிவெர்சரி எடிசன், ஜாவா நிறுவனத்தின் முதல் மோட்டார் சைக்கிளை நினைவு கூறும் வகையில் அதே அடையாளத்துடன் வெளிவந்துள்ளது. கூடுதலாக, ஜாவா 90-வது அனிவெர்சரி எடிசன்கள் உடனடியாக டெலிவரி செய்யப்படும் என்றும், இந்த எடிசன்கள் மொத்தமாக வெறும் 90 யூனிட்மட்டுமே தயாரிக்கப்பட உள்ளது.

ஜாவா 90-வது அனிவெர்சரி எடிசன்களின் கலர், முழுமையான பின்ஸ்டிரிப் பெட்ரோல் டேங்க்கள் போன்றவை ஜாவா 500 ஓஹெச்வி பைக்களில் இருந்து பெறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த மோட்டார் சைக்கிள், முழுமையான குரோம் பினிஷ்டு இன்ஜின் மற்றும் எக்ஸ்ஹாஸ்ட்களுடன் இருக்கும். ஒவ்வொரு 90-வது அனிவெர்சரி எடிசன் மோட்டார் சைக்கிள்களிலும் பெட்ரோல் டேங்களில் தனிப்பட்ட சீரியல் நம்பர்களுடம் இருக்கும்.

காஸ்மெடிக் மாற்றங்களை பார்க்கும் போது, ஜாவா 90-வது அனிவெர்சரி எடிசன்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும் இதில் 293 cc சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின்களுடன், 26 hp மற்றும் 28 Nm பீக் டார்க் கொண்டதாக இருக்கும். இந்த இன்ஜின்கள் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

லிமிட்டெட் எடிசன் ஜாவா மோட்டார் சைக்கிள்கள் வரும் 15-ம் தேதி முதல் டீலர்ஷிப்களில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புக்கிங் செய்துள்ள வாடிக்கையாளர்கள், இந்த மோட்டார் சைக்கிளை பெறுவதற்கு தகுதி உடையவர்களாக இருப்பார்கள். ஜாவா 90-வது அனிவெர்சரி எடிசன்கள் டீலர்ஷிப் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த பைக்களை வாங்க விரும்புபவர்கள் வரும் 22-ம் தேதிக்குள் தங்கள் ஆர்டரை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக் தயாரிப்பு நிறுவனம் , இந்த பைக்களை வாங்கும் 90 அதிர்ஷ்டசாலி உரிமையாளர்களை லக்கி டிரா மூலம் தேர்வு செய்ய உள்ளது. பின்னர், மோட்டார் சைக்கிள் அவர்களுக்கு உடனடியாக டெலிவரி செய்யப்படும் என்று ஜாவா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த டெலிவரி, வரும் நவம்பர் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மார்க்கெட்டிற்குள் நுழைந்தது. அது முதல் இந்த நிறுவனம் பெரியளவிலான வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த பிராண்ட்கள் இதற்கு முன்பு 100 டீலர்ஷிப்களில் தங்கள் பணிகளை தொடங்குவதாக தெரிவித்து இருந்தது போன்று, இன்னும் பணிகளை துவக்கவில்லை. இந்த பைக்களுக்கு அதிகளவிலான வரவேற்பு கிடைத்துள்ளதால், இந்த பைக்களுக்கான டெலிவரி வழக்கம் போலவே இருக்கும் என்று தெரிகிறது.

தற்போது இந்த் நிறுவனம், இரண்டு வகையான ஜாவா பைக்களை வெளியிட்டுள்ளது. ஜாவா மற்றும் ஜாவா போர்டி டூ என்ற என்ற பைக்களை தவிர்த்து, மேலும் சில மோட்டார் சைக்கிள்களை அடுத்த இரண்டு ஆண்டில் வெளியிட்ட ஜாவா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவை ஜாவா பேராக் மாடலை உள்ளடக்கியதாக இருக்கும். பாபர் பாணியில் உருவாக்கப்பட உள்ள இந்த பைக்கள் கடந்த ஆண்டு காட்சிப்படுத்தப்பட்டது.

 

 

Source: https://www.autonews360.com/tamil/news/bikes/jawa-90th-anniversary-edition-launched-price-starting-at-rs-1-73-lakh/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)