Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

பண்டிகை காலத்தை மகிழ்விக்க அறிமுகமானது மஹிந்திரா பொலிரோ பவர் ப்ளஸ் ஸ்பெஷல் எடிசன்..!

பண்டிகை காலத்தை மகிழ்விக்க அறிமுகமானது மஹிந்திரா பொலிரோ பவர் ப்ளஸ் ஸ்பெஷல் எடிசன்..!

பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய மஹிந்திரா பொலெரோ பவர்+ ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மஹிந்திரா பொலெரோ பவர்+ ஸ்பெஷல் எடிசன் எஸ்யூவி மாடல்கள் பல்வேறு வகைகளில் கிடைகிறது. இந்த மாடல்களின் பிரிமியம் வகைகள் வழக்கமான மாடல்களை விட 22 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கும்.

தற்போது புதிய மஹிந்திரா பொலெரோ பவர்+ ஸ்பெஷல் எடிசன்-களின் விலை 7.85 லட்சம் ரூபாய் முதல் 8.86 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் டெல்லியில்) கிடைக்கிறது. புதிய மஹிந்திரா பொலெரோ பவர்+ ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் மொத்தமாக 1000 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளது. மேலும் இந்த மாடல்கள் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மஹிந்திரா பொலெரோ பவர்+ ஸ்பெஷல் எடிசன் எஸ்யூவிகளில் பல add-on அம்சங்களுடன் இருக்கும். வெளிப்புறமாக பார்க்கும் போது புதிய மஹிந்திரா பொலெரோ பவர்+ ஸ்பெஷல் எடிசன்களில், டெக்கல், ஸ்பெஷல் எடிசன் சீட் கவர், ஸ்பெஷல் எடிசன் கார்பேட் மேட்கள், ஸ்பெஷல் எடிசன் – ஸ்காப் பிளேட் சீட், ஸ்டீயரிங் வீல் கவர், முன்புற பம்பர் அட்-அன் பனிக்கால லேம்ப்கல், ஸ்பாயிலர்களுடன் கூடிய ஸ்டாப் லேம்ப்களுடன் இருக்கும். மற்ற அம்சங்கள் மாற்றம் எதுவும் இல்லாமல் இருக்கும்.

மெக்கனிக்கல் ரீதியாக பார்க்கும் போது, இந்த கார்களில் எந்த மாற்றமும் இல்லாமல் 1.5 லிட்டர் mHawkD70 டீசல் இன்ஜின்களுடன் 70 bhp மற்றும் 195 Nm பீக் டார்க் கொண்டதாக இருக்கும். இந்த காரின் இன்ஜின்கள் 5 ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்தாண்டின் ஜூலை மாதத்தின் துவக்கத்தில், பொலெரோ பவர்+ மாடல்கள் பிஎஸ்6 ரெடினஸ் சர்டிபிகேட்களுடன் இருக்கும். இந்த சர்டிபிகேட்கள் சர்வதேச ஆடோட்மேடிவ் டெக்னாலஜி மையத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. மேலும் பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட மாடல்கள் வரும் 2020-ம் ஆண்டின் முற்பகுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மஹிந்திரா நிறுவனம், இந்தியாவில் ஏற்கனவே 12 லட்சம் பொலெரோ வாகனங்களை விற்பனை செய்து, இந்தியாவில் இந்த பிரிவில் அதிகளவில் விற்பனையாகும் காராக இருந்து வருகிறது.

 

Source: https://www.autonews360.com/tamil/news/cars/mahindra-bolero-power-special-edition-launched-for-festive-season/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)