Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

OLX-ல் விற்பனைக்கு வந்த பிரபல நடிகரின் பென்ஸ் கார்…!

OLX-ல் விற்பனைக்கு வந்த பிரபல நடிகரின் பென்ஸ் கார்…!

பாலிவுட் பிரபல நடிகர் ஒருவர் பயன்படுத்திய பென்ஸ் சொகுசு கார் OLX-ல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரை விற்பனை செய்யும் பிரபலம் யார்? அவர் ஏன் குறைந்த விலைக்கு அவரது காரை விற்பனை செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?. இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்….

கடந்த 1970களில் முதன்முதலாக பாலிவுட் திரை உலகில் ‘கோபக் கனல் வாலிபன்’ எனப் பெயர் பெற்றுப் பிரபலம் அடைந்தவர் அமிதாப் பச்சன். இந்தியத் திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுள் ஒருவராக கருதப்பட்டு வருபவர்.

பாலிவுட் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் அமிதாப் பச்சன் குடும்பத்தில் லெக்ஸஸ் எல்எக்ஸ்570, மெர்சிடிஸ்-மேபேக் எஸ்500, பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி, போர்ஷே கேமேன் என பல்வேறு கார்கள் உள்ளன.

இதுமட்டுமின்றி இந்தியாவில் விற்பனையாகும் மிகவும் லக்ஸரியான எம்பிவி ரக கார் என்று கருதப்படும் மெர்சிடிஸ்-பென்ஸ் வி கிளாஸ் காரை அமிதாப் பச்சன் வாங்கியுள்ளார். முன்னதாக மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் 350 எல் கார் ஒன்றையும் அவர் பயன்படுத்தி வந்தார். அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த காரில் பயணம் செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு ஆடம்பர கார்களை பயன்படுத்தி வரும் இவர் தான் பயன்படுத்திய 2007ம் ஆண்டு மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் 350 எல் கார் OLX-ல் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த கார் மூன்றாவது உரிமையாளரிடம் இருந்து விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான எஸ்-கிளாஸ் மாடலை விட அதிகமான இடவசதி கொண்டிருக்கும் இந்த காரில் குறிப்பிடப்பட்டுள்ள ‘எல்’ என்பது கூடுதல் வீல் பேஸை குறிப்பிடும். 3,498 cc V6 பெட்ரோல் இன்ஜின்களுடன் 365 hp ஆற்றல் மற்றும் 345 Nm டார்க் கொண்ட இந்த கார்கள், இதுவரை வெறும் 55 ஆயிரம் கிலோ மீட்டர்கள் மட்டுமே ஓடியுள்ளதாக அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காரை அமிதாப் பச்சன் பயன்படுத்தியதாக அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அமிதாப் பச்சன் குடும்பம் பயன்படுத்திய வண்ணம் (கிரே) மற்றும் பதிவு எண்ணைதான் (MH 02 BD 5050) இந்த காரும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைவிட ஆச்சரியம் என்னவென்றால், மிகபெரிய பாலிவுட் பிரபலமான அமிதாப் பச்சன் பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் 350 எல் காருக்கு வெறும் 9.99 லட்ச ரூபாய் மட்டுமே விலை கேட்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது விற்பனையாகும் சில பட்ஜெட் காம்பேக்ட் எஸ்யூவிகளின் விலையை விட இந்த விலை மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Source:  https://www.autonews360.com/tamil/news/cars/amitabh-bachchans-mercedes-benz-s-class-on-sale/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)