Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

5.40 லட்சம் விலையில் அறிமுகமானது புதிய டாடா டியாகோ Wizz எடிசன் கார்..!

5.40 லட்சம் விலையில் அறிமுகமானது புதிய டாடா டியாகோ Wizz எடிசன் கார்..!

டாடா மோட்டார் நிறுவனம், லிமிட்டெட் எடிசன் டியாகோ விஸ் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பிரிமியம் எடிசன்கள் டியாகோ போர்ட்போலியோவில் உருவாக்கப்பட்டுள்ளது. டாடா டியாகோ விஸ் கார்கள் 1.2 லிட்டர் ரிவோட்ரன் பெட்ரோல் இன்ஜின்களுடன் 5.40 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) கிடைக்கிறது லிமிடெட் எடிசன் மாடல்கள், டைட்டானியம் கிரே பாடி கலர் மற்றும் இதன் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர்களில் 10 புதிய ஸ்பெஷல் அம்சங்களுடன் வெளியாகியுள்ளது.

வெளிப்புறத்தை பார்க்கும் போது, டாடா டியாகோ விஸ் கார்கள் பிளாக் காண்டிராஸ்ட் ரூஃப், கேன்யன் ஆரஞ்ச் கிரில் இன்செர்ட்கள், வீல்களுடன் ஆரஞ்ச் வேலைப்பாடுகளுடன் இருக்கும். மேலும் இதில் ஆரஞ்ச் ORVM-கள் மற்றும் பேட்ஜ்களில் Wizz என்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இவை முழுமையான பேப்பரிக் சீட்களுடன் ஆரஞ்ச் டிக்கோ-ஸ்டிச், கிரானைட் பிளாக் இன்னார் டோர் ஹேண்டில், டைட்டானியம் கிரே கியர் ஷிப்ட் பெசல், டைட்டானியம் கிரே ஏர் வென்ட் பெசல் மற்றும் ஆரஞ்ச் சைடு மற்றும் சென்டர் ஏர் வென்ட் ரிங்களுடன் இருக்கும்.

டாடா டியாகோ விஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவன, பயணிகள் வாகன வர்த்தக பிரிவு தலைமை சந்தைப்படுத்தல் துறை அதிகாரி விவேக் ஸ்ரீவத்ஸா தெரிவிக்கையில், டியாகோ இந்த பிரிவில் பிரபலமான காராக இருந்து வருவதுடன், அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து நிலையான வளர்ச்சியை எட்டி வருகிறது. ஏற்கனவே 2.5 லட்சம் வாடிக்கையாளர்களை டியாகோ கார்கள் பெற்றுள்ள நிலையில், லிமிட்டெட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அதிக வாடிக்கையாளர்களை கவரும் என்று நம்பப்படுகிறது என்றார்.

Source: https://www.autonews360.com/tamil/news/cars/tata-tiago-wizz-launched-in-india-priced-at-rs-5-40-lakh/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)