Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

சுசூகி மோட்டார் சைக்கிள் செப்டம்பர் மாத விற்பனை 2.11 % வளர்ச்சி..!

சுசூகி மோட்டார் சைக்கிள் செப்டம்பர் மாத விற்பனை 2.11 % வளர்ச்சி..!

டூ-வீலர் விற்பனை குறைந்து வரும் நிலையில், சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் மிக உயர்ந்த உள்நாட்டு மாதந்திர விற்பனையை பதிவு செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டுமே மொத்தமாக 63 ஆயிரத்து 382 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 63 ஆயிரத்து 140 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

ஆண்டுதோறும் இந்த விற்பனை அளவு நிலையாக இருந்து வருகிறது. இந்த உயர்வு வெறும் 0.38 விழுக்காடாக இருந்தாலும், இந்த நிறுவனம் கூடுதலாக உயர்வான விற்பனை அளவை எட்டியுள்ளது. மொத்தமாக, சுசூகி நிறுவனத்தின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 2.11 விழுக்காடாக உயர்ந்து 73 ஆயிரத்து 658 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இவை உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்டதை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த விற்பனை இலக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 72 ஆயிரத்து 134 யூனிட்களாகும்.

இந்த நிறுவனம் மொத்த விற்பனையாக, ஏப்ரல்- செப்டம்பர் மாத்தில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 676 யூனிட்களும், 2019-ம் ஆண்டில் இதே போன்று 3 லட்சத்து 71 ஆயிரத்து 109 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 13.08 விழுக்காடு உயர்வை சந்தித்து உள்ளது.

எஸ்.எம்.ஐ.பி.எல்-இன் மாதாந்திர செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் கொய்சிரோ ஹிராவ், எங்கள் நிறுவனம் உள்நாட்டு விற்பனையில் இதுவரை இல்லாத வகையிலான உயர்வை சந்தித்து உள்ளது குறித்து பெருமை கொள்கிறோம். இது தற்போதைய ஆண்டில் பாசிட்டிவ் வளர்ச்சியை காட்டுகிறது. இதற்காக, வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதுடன், டீலர்கள் மற்றும் நெட்வொர்க்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். இது எங்கள் தயாரிப்புகளின் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் சப்போர்ட்களை வெளிபடுத்தியுள்ளது என்றார்.

மேலும் பேசிய அவர், பண்டிகை கால சீசனை முன்னிட்டு, எஸ்.எம்.ஐ.பி.எல் நிறுவனம், நம்பிக்கையுடன், அதிக வாடிக்கையாளர்கள்களை இணைந்து புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த விற்பனை உயர்வால் மகிழ்ச்சி அடைந்துள்ள சுசூகி நிறுவனம், வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் பண்டிகைகால வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது என்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சுசூகி டூ-வீலர்களின் விற்பனை நிலையாகவே இருந்தது. மந்தநிலையில் உள்ள ஆட்டோமொபைல் துறையில், சுசூகி நிறுவனம் மிக உயர்ந்த உள்நாட்டு விற்பனையை பதிவு செய்துள்ளது. இந்த விற்பனை உயர்வுக்கு, கடந்த சில மாதங்களில் 250 cc சுசூகி ஜிக்சர்கள் முதல் சுசூகி அக்சஸ் போன்ற சில புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டதே காரணம் என்று சுசூகி நிறுவனம் நம்புகிறது.

The images and the video are taken from Bulu Patnaik

Source: https://www.autonews360.com/tamil/news/bikes/suzuki-sales-grow-by-2-11-per-cent-in-september-records-highest-ever-monthly-domestic-sales/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)