தல தோனியின் ஜீப் கிராண்ட் செரோகி டிராக்ஹாக் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பம்சங்கள்!

தல தோனியின் ஜீப் கிராண்ட் செரோகி டிராக்ஹாக் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பம்சங்கள்!

இந்தியாவின் முதல் அதிக சக்திவாய்ந்த எஸ்யூவி ரக காராக கருதப்படும் ஜீப் கிராண்ட் செரோகி டிராக்ஹாக் காரில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வலம் வருவதுபோன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய முன்னணி வீரர்களில் ஒருவருமான மகேந்திர சிங் தோனி. இவருக்கு கிரிக்கெட் மட்டுமின்றி கார், பைக் விஷயத்தில் ஆர்வமாக அதிகம் இருக்கின்றார். அந்தவகையில், ஆடம்பர ரக கார்கள் மீது அலாதியான விருப்பம் கொண்டவராக இருக்கின்றார். இதனை உறுதி செய்யும் வகையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஜீப் நிறுவனத்தின் கிராண்ட் செரோகி டிராக்ஹாக் எஸ்ஆர்டி வேரியண்ட் காரை அவர் வாங்கியிருந்தார். இந்த கார் இந்திய மதிப்பில் ரூ. 1.6 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. இதனை கடந்த ஆகஸ்டு மாதத்தில்தான் அவர் வாங்கியிருந்தார். இவரிடம், இந்த கார் மட்டுமின்றி மேலும் சில விலையுயர்ந்த கார்களும் இருக்கின்றன. அந்தவகையில், ஹம்மர் எச்2 என்ற எஸ்யூவி ரக கார் இவரிடம் இருக்கின்றது. இதுமட்டுமின்றி, விலையுயர்ந்த ஹெல்கட் என்ற மோட்டார் சைக்கிளும் அவரிடம் உள்ளது.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி!

இந்த கார் தோனிக்காக சிறப்பாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் அமெரிக்காவில் இந்திய மதிப்பில் ரூ. 62 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால், ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் வரி உள்ளிட்ட பலவற்றின் காரணமாக ரூ. 1.6 கோடி இந்த காருக்கு செலவிடப்பட்டுள்ளது.

இந்த அதீத திறனின் காரணமாக இந்தியாவில் விற்பனையாகும் அதிக சக்தி கொண்ட எஸ்யூவி கார்களிலேயே முதன்மை இடத்தை இந்த ஜீப் கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக் பெறுகின்றது. அந்தவகையில், இந்த கார் வெறும் 3.62 செகண்டுகளிலேயே 0த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தைத் தொட்டுவிடும். இதன் எஞ்ஜின் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் இயங்குகின்றது.

தோனி பல நேரங்களில் பயணத்தின்போது அவரே காரை இயக்கும் பழக்கம் கொண்டவராக இருக்கின்றார். ஆகையால், இதுபோன்று அவரே இயக்கியவாறு காட்சி வெளிவருவது முதல் முறையல்ல, முன்னதாக ஹம்மர் காரை அவரே இயக்கியபோதும் இதுபோன்று காட்சிகள் வெளியாகின. தோனி இயக்கிய ஜீப் கிராண்ட் செரோகி ஓர் வழக்கமான மாடல் அல்ல. இந்தியாவில் கிடைக்கும் ஜீப் கிராண்ட் செரோக்கியிலேயே மிக சக்திவாய்ந்த எஸ்ஆர்டி எனப்படும் பதிப்பாகும். இந்த காரில் 6.4 லிட்டர் ஹெமி வி8 பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக, 468 பிஎச்பி சக்தியையும், 624 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும்.

Source: https://www.autonews360.com/tamil/news/cars/ms-dhoni-spotted-driving-his-new-jeep-grand-cherokee-trackhawk-for-the-first-time/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)