Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

கடும் வீழ்ச்சியில் ஆட்டோமொபைல் துறை, அதிர்ச்சி தரும் அதிரடி ரிப்போர்ட்..!

கடும் வீழ்ச்சியில் ஆட்டோமொபைல் துறை, அதிர்ச்சி தரும் அதிரடி ரிப்போர்ட்..!

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கார், பைக் என்று அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் சமீப காலமாக தொடர் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது. வாகனங்களின் விற்பனை சரிவு காரணமாக, பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் உற்பத்தியை குறைத்துள்ளன. இதற்கான ஜிஎஸ்டி வரி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட தாக்கம் ஆகியவை முக்கியமானவை. இதுதவிர பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளும் ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. மிகவும் கடுமையான பிஎஸ்-6 விதிமுறைகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. இதனால் மேலும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.

அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து

மேலும் போக்குவரத்து நெரிசல் பிரச்னை காரணமாக புதிய வாகனங்களை வாங்குவதில் மக்களுக்கு ஆர்வம் குறைந்து கொண்டே வருவதாகவும், இதுவும் ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் எனவும் சொல்லப்படுகிறது. இதுதவிர ஓலா, உபர் போன்ற கேப் நிறுவனங்களாலும், புதிய வாகனங்களை வாங்குவதை மக்கள் தவிர்ப்பது தான் காரணம் என்றார் நிர்மலா சீதாராமன். மேலும் இந்தியாவில் பிஎஸ்-6 விதிகளுக்கு இணையான வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற அறிவிப்பும் ஓர் முக்கிய காரணம். தற்போது இந்தியாவில் பெரும்பாலும் பிஎஸ்-4 விதிகளுக்கு இணையான வாகனங்கள்தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வருவதை முன்னிட்டு, புதிய வாகனங்கள் வாங்குவதை மக்கள் தள்ளிப்போட்டு கொண்டிருப்பதாக அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

உண்மை நிலவரம் என்ன?

”உள்நாட்டு ஆட்டோமொபைல் துறையில் மந்தநிலை இல்லை. அரசிடம் இருந்து சலுகைகளை பெறுவதற்காகதான் அவர்கள் இதனை கூறி வருகின்றனர்” என்று பிரவீன் கண்டேல்வாலின் இந்த கருத்து விவாதங்களை உண்டாக்கியுள்ளது. முன்னதாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வருவதை தள்ளிப்போடும் நோக்கத்தில் தான், விற்பனை சரிவு என்ற ஆயுதத்தை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளதாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் ஒரு கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் பஜாஜ் கருத்து

பஜாஜ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ராஜீவ் பஜாஜ் தெரிவித்த ஒரு கருத்தும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆட்டோமொபைல் துறையின் தடுமாற்றத்திற்கு, உற்பத்தியை அதிகமாக செய்து தேக்கி வைத்ததே முக்கியமான காரணம் என ராஜீவ் பஜாஜ் கூறியிருந்தார். இதில், பொருளாதார மந்தநிலையின் பங்கு சிறியதுதான் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Source: https://www.autonews360.com/tamil/news/cars/no-slowdown-in-automobile-sector-claims-traders-body-cait/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)