Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ வரை பயணிக்கலாம்…அசத்தலாக அறிமுகமாகும் புதிய டாடா டிகோர்..!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ வரை பயணிக்கலாம்…அசத்தலாக அறிமுகமாகும் புதிய டாடா டிகோர்..!

மின்சார வாகனங்களால் தான் சுற்றுச் சுழலை காக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஆகையால் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் அரசு ஆர்வமாய் உள்ளது. இதற்காக வெளி நாட்டு நிறுவனங்களை முதலீடு செய்யத் தமிழக அரசும், மத்திய அரசும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். மேலும் அதனை ஊக்கப்படுத்த அரசு தரப்பில் வரி குறைப்பு, மானியம் போன்ற சலுகைகளும் அறிவிக்கப்படுகிறது. 2030க்குள் அனைத்து வாகனங்களையும் மின் வாகனமாக மாற்றுவதே அரசின் நோக்கமாம்.

மின்சார வாகனங்களில் சில நடைமுறை சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது. என்னவென்றால் அதில் நீண்ட நேரம் பயணிக்க இயலாத ஒன்றாக இருக்கிறது என்பது தான். சில வாகனங்களால் 60 கி.மீ வரை தான் பயணிக்க இயலும். நமது ஊரில் சார்ஜிங் ஸ்டேசன் இன்னும் கட்டமைக்கப் படவில்லை. மின்சார வாகனங்களில் 60 கி.மீ பயணித்தால் மீண்டும் வீடு திரும்ப வாய்ப்பில்லை என்பதே நிதர்சனம்.

அறிமுகமாகும் புதிய கார்

டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தப் பட உள்ள டாடா டிகோர் என்னும் மின்சார வாகனம் அதிக திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது. இந்த கார் மூலம் அதிக தூரம் பயணிக்க முடியும் என்பதே ஸ்பெஷலிட்டி. இது மின்சார வாகனங்களை நடைமுறைப்படுத்தச் சிக்கலாக இருந்ததைத் தகர்த்தெரிகிறது என்றே சொல்லலாம். இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி மந்தமாக இருக்கும் நிலையில் இது போன்ற புதிய அறிவிப்புகள் விற்பனையைச் சூடுபிடிக்க வைக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த வாரம் புதிய மாடல் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், அரசுத் துறை பயன்பாட்டுக்கு வழங்கப்படும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியானது 144 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை வழங்குகிறது. புதிதாக வரும் மாடலானது பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். அதாவது, தனிப்பட்ட பயன்பாட்டுக்கான சந்தையில் இது சிறந்ததாக இருக்கும்

டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியானது 144 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை வழங்குகிறது. புதிதாக வரும் மாடலானது பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். அதாவது, தனிப்பட்ட பயன்பாட்டுக்கான சந்தையில் இது சிறந்ததாக இருக்கும். தற்போது டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் 72 வோல்ட் ஏசி இன்டக்ஷன் மின் மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. இந்த மின் மோட்டார் 40.23 பிஎச்பி பவரையும், 105 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. சாதாரண சார்ஜர் மூலமாக பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 6 மணிநேரம் பிடிக்கும். டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 90 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்ற முடியும்.

மக்கள் கருத்து

பண்டிகை காலங்களில் டிக்கெட் கிடைப்பது அரிது. அதனால் நாங்கள் காரிலேயெ சொந்த ஊர் திரும்புவது வழக்கம். 500, 600 கி.மீ தொலைவில் இருக்கும் ஊருக்கு மின்சார வாகனத்தில் சென்றால் ஒவ்வொரு இடத்திலும் 1 மணி நேரம் சார்ஜ் போட்டுச் செல்வதா..? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார். மேலும் இதன் விலை 20 லட்சம் வரை சொல்லப்படுகிறது. இது நடுத்தர குடும்பங்களுக்கு ஏட்டா கனியாகவே உள்ளது. இது போன்ற விஷயங்கள் அனைத்தையும் களைந்தெடுத்தால் தான் இது நடைமுறைக்கு வரும்.

Source: https://www.autonews360.com/tamil/news/cars/tata-tigor-electric-car-with-extended-range-could-be-launched-next-week/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)