Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

பஜாஜ் டோமினார் பைக்குகளின் விலை 10,000 ரூபாய் வரை அதிரடி உயர்வு..!

பஜாஜ் டோமினார் பைக்குகளின் விலை 10,000 ரூபாய் வரை அதிரடி உயர்வு..!

பஜாஜ் டோமினார் பைக்கின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ளது. அட்டோமொபைல் துறை சார்ந்தவர்கள் அனைவரது கவனத்தையும் இது ஈர்த்துள்ளது. ஏன் இந்த விலை ஏற்றம் என்பது குறித்தும் பஜாஜ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக வாகன உற்பத்தி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் அனைத்து நிறுவனங்களும் விலையை குறைத்து வருகிறது. குறிப்பாக மாருதி, டாட்டா போன்ற முன்னனி நிறுவனங்கள் அதிரடி விலை குறைப்பை கையில் எடுத்துள்ள நிலையில் பஜாஜ் நிறுவனம் விலையை உயர்த்தியிருப்பது ஆச்சியப்பட வைக்கிறது.

தொடர் உயர்வில் பஜாஜ் டோமினார்

பஜாஜ் டோமினார் பைக்கின் விலையை ரூ.10,000 வரை அந்நிறுவனம் அதிகரித்துள்ளது. அதிரடியாக விலையை உயர்த்தி இருக்கிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். தற்போதைய புதிய தலைமுறை மாடலானது ரூ.1.74 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று இந்த பைக்கின் விலை ரூ.1.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனையாகிறது. அதாவது, கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து தற்போது வரை ரூ.16,000 வரை விலை உயர்த்தி இருப்பது குறிப்பிடதக்கது.

பஜாஜ் டோமினாரின் விலை உயர காரணம்?

விலை அதிகரித்தாலும் இந்த வண்டியின் மதிப்பு ஒரு போதும் குறைய வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது. ஏனெனில் பல இளைஞர்களுக்கு இதுவே கனவு பைக். அதிக வாடிக்கையாளர் இருப்பதை அறிந்து கொண்டு தான் பஜாஜ் நிறுவனம் விலை அதிகப்படித்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பஜாஜ் டோமினார் பைக்கில் 373.3 சிசி லிக்விடு கூல்டு எஞ்சின் உள்ளது. இது 39.4 பிஎச்பி பவர் மற்றும் 35 என்.எம் டார்க் திறனை வழங்கும். பைக்கின் முன்பக்கத்தில் ரேடியல் காலிர் 320 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக் உள்ளது. பின்பக்கத்தில் பாட் காலிபர் 240 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது. பைக்கிற்கு டூயல் சேனல் வழங்கப்பட்டுள்ளது மேலும் பஜாஜ் டோமினார் 400 பைக்கில் முன்புறத்தில் இன்வெர்டெட் ஃபோர்க்குகளுடன் கூடிய சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. ட்வின் பேரல் புகைபோக்கி அமைப்பும் இதன் முக்கிய அம்சமாக இருக்கிறது.

மேலும் விலை அதிகரித்தால் விற்பனை குறையுமா என்று கேள்விகள் எழுந்தாலும் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதே நிதர்சனம். மேலும் பஜாஜ் இது போன்ற கவர்ச்சிகரமான பைக்குகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே ஆட்டோமொபைல் துறை சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பு.

Source: https://www.autonews360.com/tamil/news/bikes/bajaj-dominar-400-price-hiked-by-rs-10000/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)