ஓல்டு இஸ் கோல்டு! அசூர வேகத்தில் விற்பனையாகும் பழைய கார்கள்

ஓல்டு இஸ் கோல்டு! அசூர வேகத்தில் விற்பனையாகும் பழைய கார்கள்

வாகன உற்பத்தி கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் தருவாயில் ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை. பொதுவாக நடுத்தர வகுப்பு மக்கள் தான் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க முன்வருவதுண்டு. ஆனால் இன்று பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க ஆர்வம் காண்பிக்கின்றனர். குறிப்பாக வாடகை கார்களில் பெரும்பாலும் 2nd hand காராக இருக்கத் தான் வாய்ப்புகள் அதிகம்.

OLX நிறுவனம் கொடுத்த இன்ப அதிர்ச்சி

ஆட்டோமொபைல் துறையின் விற்பனை வீழ்ச்சி அதிகமாக உள்ள நிலையிலும் பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை 10 சதவீதம் வரை வளரும் என OLX நிறுவனம் கணித்துள்ளது. இணையதளம் மற்றும் ஆப் மூலம் இன்றைய சமூகம் அனைத்தையும் வாங்குகிறது, அதே போல் ஆன்லைனில் பழைய கார்களை வாங்க OLX உதவுகிறது. புதிய வாகன விற்பனை வீழ்ச்சியை நோக்கி பயணித்தாலும் பழைய கார்களின் விற்பனை ஜோராக இருக்கிறது எனவும் இது நிச்சயம் வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் எனவும் இந்நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் தகவல்.

பழசுக்கு அதிகரிக்கும் மவுசு

இந்நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை ஒன்றில், இந்தியாவின் உள்நாட்டு வாகனச் சந்தையில் 2018இல் விற்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் 40 லட்சம் எனவும் 2019ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 44 லட்சமாக அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனை 2020ஆம் ஆண்டில் 50 லட்சத்தை எட்டும் எனவும் 2023ஆம் ஆண்டில் 66 லட்சத்தைத் தாண்டக்கூடும் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. தற்போது பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான சந்தை மதிப்பு 1,400 கோடி டாலர் ஆகும். இது 2023ஆம் ஆண்டு 2,500 கோடி டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று olx நிறுவனம் கூறுகிறது.

ஆமை வேகத்தில் புதிய வாகன விற்பனை

ஆகஸ்ட் 2019இல் ஆட்டோமொபைல் துறைக்கு 23.55 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 23,82,436 வாகனங்கள் விற்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதம் 18,21,490 வாகனங்களே விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது பல அட்டோமொபைல் நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/news/cars/pre-owned-car-sales-expected-to-grow-10-percent-in-2019/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)