Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

வாகனங்களை மறுசுழற்சி செய்ய முன்வரும் முன்னணி நிறுவனங்கள்.. !

    autonews360
    • 2 views
    • 0/5 (0 votes)
    By autonews360
    வாகனங்களை மறுசுழற்சி செய்ய முன்வரும் முன்னணி நிறுவனங்கள்.. !

    வாகனங்களிலிருந்து வெளியாகும் புகையால் புவி வெப்ப மயமாதல் உட்படப் போன்ற பிரச்சனைகள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும் உற்பத்தியின் போது லட்சக் கணக்கான லிட்டர் தண்ணீரும் வளங்களும் தேவைப் படுகிறது. இயற்கை சுரண்டலைத் தவிக்க மறுசுழற்சி முறையே சிறந்தது எனக் கூறுகின்றனர் சூழலியல் நிபுணர்கள்.

    (BS VI) ரக வாகனங்கள் பயன்படுத்தத் தடை

    மத்திய அரசு புவி வெப்பமடைவதையும், சுற்றுசூழல் மாசடைவதை குறைக்க பழைய வாகனங்களை மறுசுழற்சி செய்யத் திட்டமிட்டுள்ளது. புதிய மாசுக்கட்டுப்பாட்டு விதிகளின்படி, தற்போது பயன்பாட்டில் உள்ள பி.எஸ்.6 (BS VI) ரக வாகனங்கள் மீதான தடை ஏப்ரல் 1, 2020 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அன்றுமுதல் பி.எஸ்.4 (BS IV) ரக வாகனங்களே விற்பனைக்கு கிடைக்கும். ஏற்கெனவே மகேந்திரா நிறுவனம் தனது மகேந்திரா ஆக்செல்லோ என்ற துணை நிறுவனத்தின் வாயிலாக இதுபோன்ற மறுசுழற்சி மையத்தை அமைத்திருக்கிறது. பொதுத்துறை நிறுவனமான எம்.எஸ்.டி.சி உடன் இணைந்து இந்த மையம் நொய்டாவில் நிறுவப்பட்டது.

    இணையும் நிறுவனங்கள்

    அரசின் இந்த முயற்சியை முன்னிறுத்தி கார் நிறுவனங்களும் பழைய வாகனங்களை மறுசுழற்சி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது மாருதி சசுகி நிறுவனமும் டோயோட்டா நிறுவனமும் இணைந்து பழுதடைந்து இனி இயக்க முடியாத நிலைக்கு வந்துவிட்ட வாகனங்களைச் சேரிக்கும் மையத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கின்றன. இதற்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைதுள்ளது. இந்த மையத்திற்கு வரும் கார்களின் பாகங்கள் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்கப்படும். நல்ல நிலையில் இருக்கும் பாகங்களின் பயன் மதிப்பு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்படும். இதேபோல, சுமாரான நிலையில் இருக்கும் பாகங்கள் சரிசெய்யப்பட்டு பரிசோதனைக்கு உட்படும். பயன் மதிப்பு உறுதி செய்யப்பட்ட உதிரிப் பாகங்கள் விற்பனைக்கோ வேறு பயன்பாட்டுக்கோ செல்லும் எனக் கூறப்படுகிறது.

    குவியும் பாராட்டுக்கள்

    நாட்டிலேயே இரண்டாவது பெரிய கூட்டு முயற்சியாக மாருதி மற்றும் டொயோட்டாவின் திட்டம் உருவாக இருக்கிறது. டொயோட்டா நிறுவனம் ஏற்கெனவே இந்தியாவில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை விற்பனை செய்வதுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றமதியும் செய்கிறது. டோயோட்டாவின் ஜப்பானைச் சேர்ந்த தாய் நிறுவனம் அந்நாட்டில் உலோகம், வாகனம், இயந்திரம், வேதிப்பொருட்கள், மின்சாதனங்கள் உள்ளிட்ட பல துறைகளில் இயங்கிவருகிறது.இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம் இத்திட்டத்தைத் தொடர்ந்து இன்னும் வேறு வழிகளிலும் டோயோட்டாவுடன் இணைந்து செயலாற்றும் எண்ணத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த முடிவு நிச்சயம் சுற்றுசூழலை பாதுகாக்க வழிவகை செய்யும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்ப்பது குறிப்பிடதக்கது.

    Source: https://www.autonews360.com/tamil/news/cars/maruti-and-toyota-to-set-up-vehicle-scrappage-plant/

    Ratings

    0/5 (0 votes)
    0/5 (0 votes)