அபராத தொகையை குறைக்க தமிழக அரசு திட்டம் ?

அபராத தொகையை குறைக்க தமிழக அரசு திட்டம் ?

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக அங்கம் வகித்தது. அதே போல் இன்றும் இணக்கமான சூழல் நிலவுகிறது. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய மோட்டர் வாகன சட்டம் அமலுக்கு வந்த நிலையில் பல மாநில அரசுகள் அதனை எதிர்த்து வருகின்றது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலமான குஜராத்திலேயே அபராதத் தொகையை மாற்றியமைத்து கொண்டனர். இந்நிலையில் தமிழக அரசு என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

நிதின் கட்கரி கருத்து

அபராதங்களை உயர்த்தியிருப்பது குறித்து நிதின் கட்கரி கூறுகையில், ”போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றினால், அபராத தொகைகளை கண்டு அச்சம் கொள்ள தேவையில்லை.ஒரு சில நாடுகளில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்கள். அங்கு சாலைகள் பாதுகாப்பானவையாக உள்ளன. அதேபோல் இந்தியாவின் சாலைகளும் பாதுகாப்பானவையாக மாறி வருகின்றன. இதற்காக மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். ஏனெனில் மனித உயிர்கள் விலை மதிப்பற்றவை” என்றார்.

அபராத தொகையை மாற்றியமைத்த குஜராத்

புதிய மோட்டார் வாகன விதிமுறைகளின்படி ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் நீங்கள் ஆயிரம் ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும். ஆனால் குஜராத்தில் இது தற்போது 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தாலும், புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இதனையும் குஜராத் அரசு 500 ரூபாயாக குறைத்துள்ளது. டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கினால், புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆனால் குஜராத் அரசு இதனை டூவீலர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயாகவும், மற்ற வாகனங்களுக்கு 3 ஆயிரம் ரூபாயாகவும் குறைத்துள்ளது. இதேபோல் பல்வேறு விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகையையும் குஜராத் அரசு குறைத்துள்ளது.

தமிழக மக்களுக்கு ஓர் நற்செய்தி

குஜராத்தை போல் அபராதத்தை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதா? என தமிழக வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். மக்களின் நாடி பிடித்த தமிழக அரசு புதிய அபராதங்களை வாகன ஓட்டிகள் மீது தற்போதைக்கு விதிக்க வேண்டாம் என தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அப்படியே அமல்படுத்த வேண்டாம் என தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அபராத தொகைகள் மிக கடுமையாக இருப்பதால், அதனை குறைக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் சிலர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்த பரிந்துரையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் பச்சை கொடி காட்டி விட்டதால், குஜராத்தை போல் தமிழக அரசும் அபராத தொகைகளை அதிரடியாக குறைக்கவுள்ளது. இதற்காக ஒரு சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனை தமிழக அரசு அடுத்த வாரம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகிழ்ச்சி வெள்ளத்தில் தமிழக மக்கள்

தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகைகளை குறைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக தமிழக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே தமிழக வாகன ஓட்டிகள் உற்சாகமடைந்துள்ளனர். மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு தொகையை தமிழக அரசு குறைக்கத் திட்டமிட்டுள்ளதால் தமிழக மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.

Source: https://www.autonews360.com/tamil/news/cars/tamil-nadu-government-decided-to-reduce-traffic-violations-fine-under-new-motor-vehicle-act/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)