Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

வந்துவிட்டது ஒகினவா பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்..! விலையோ மலிவு ரூ.71,990 மட்டுமே..!

    autonews360
    • 2 views
    • 0/5 (0 votes)
    By autonews360
    வந்துவிட்டது ஒகினவா பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்..! விலையோ மலிவு ரூ.71,990 மட்டுமே..!

    ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் தனது புதிய பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளான பிரெய்ஸ் மற்றும் ஐ பிரெய்ஸ்பிளஸ் மாடல்களுக்கு இடைப்பட்டதாக விலையில் வெளியாகி உள்ளது.

    பல்வேறு வசதிகளுடன் வெளியாகி உள்ள புதிய ஒகினவா பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் லிதியம் இயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதில் லீட் ஆசிட் பேட்டரிகள் பொருத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய ஒகினவா பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ்-ஆக 2 முதல் 3 மணி நேரம் எடுத்து கொள்ளும். இந்த பேட்டரிகளை ஸ்கூட்டரில் பொருத்தப்பட்ட நிலையிலேயும், தனியாக எடுத்தும் சார்ஜிங் செய்து கொள்ளலாம்.

    புதிய ஒகினவா பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், 1 KW, BLDC வாட்டர்புரூப் மோட்டார்களுடன், 2kW லித்தியம் இயான் பேட்டரிகளுடன் கிடைகிறது. இது 2500 வாட்ஸ் திறன் கொண்டதாக இருக்கும். 15 டிகிரி சரிவான சாலையிலும் எளிதாக செல்லும் திறன் கொண்ட இந்த ஸ்கூட்டர் எக்கோ மோடில், 35km வேகத்தில், 100 km வரையிலும், ஸ்போர்ட்ஸ் மோடி-ல் 50km வேகத்தில், 90 km தூரம் வரை இயங்கும் திறன் கொண்டது.

    மேலும் இதில், டிஜிட்டல் இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர், சென்டர் லாக்கிங் சிஸ்டம், திருட்டை தவிர்க்கும் எச்சரிக்கை அலாரம், கீலெஸ் இக்னிஷன், வாகன நெருக்கடி கொண்ட பார்க்கிங் நிறுத்தப்பட்ட உங்கள் ஸ்கூட்டரை எளித்தில் அடையாளம் கண்டு கொள்ளும் டெக்னாலஜியும் பொருத்தப்பட்டுள்ளது. இவை தவிர, மொபைல் சார்ஜர் மற்றும் ஸ்கூட்டரை ரிவரில் செலுத்தும் வசதியும் இந்த் ஸ்கூட்டரில் இடம் பெற்றுள்ளது.

    ரோடு எமர்ஜென்சி சிஸ்டம், இரண்டு முறை ப்ரீ சர்விஸ் போன்ற வசதிகளுடன் 71 ஆயிரத்து 990 ரூபாய் விலையில் (எக்ஸ்ஷோரூம் விலை) கிடைக்கும் இந்த புதிய ஒகினவா பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், கிளாஸி ரெட் பிளாக் மற்றும் கிளாஸி ஸ்பிரிங்கிள் பிளாக் ஆக இரண்டு கலர் ஆப்சன்களில் கிடைகிறது.

    Source: https://www.autonews360.com/tamil/news/bikes/okinawa-praisepro-electric-scooter-launched-inr-71-990/

    Ratings

    0/5 (0 votes)
    0/5 (0 votes)