ரிவோல்ட் ஆர்வி எலக்ட்ரிக் பைக்களுக்கான புக்கிங் முடிந்தது…இனி மீண்டும் புக்கிங் நவம்பர் மாதத்தில் ஆரம்பம்…!

ரிவோல்ட் ஆர்வி எலக்ட்ரிக் பைக்களுக்கான புக்கிங் முடிந்தது…இனி மீண்டும் புக்கிங் நவம்பர் மாதத்தில் ஆரம்பம்…!

குருகிராமை அடிப்படையாக கொண்ட ரிவோல்ட் இன்டலிகார்ப் நிறுவனம், இந்தியாவில் முதல் AI- எனேபிள் செய்யப்பட்ட எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்நிலையில், செப்டம்பர், அக்டோபர் மாதத்திற்கான ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கின் புக்கிங் தீர்ந்து விட்டதாக ரிவோல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த பைக்களுக்கான டெலிவரி திட்டமிட்டபடி வரும் அக்டோபர் மாத இறுதியில் டெலிவரி செய்யப்பட உள்ளது.

இந்த பைக்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், இரண்டாம் கட்ட முன்பதிவை மேற்கொள்ளவதுடன், இந்த பைக்களுக்கான டெலிவரி வரும் நவம்பர்- டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், முதல் கட்ட முன்பதிவில் எத்தனை புக்கிங்கள் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்த விபரங்களை ரிவோல்ட் நிறுவனம் வெளியிடவில்லை. கடந்த ஜூலையில், எலக்ட்ரிக் டூ-வீலர் நிறுவனம், இதுவரை 25,000 எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங்கை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த சாதனை குறித்து ரெவால்ட் இன்டெலிகார்ப் நிறுவனர் ராகுல் சர்மா தெரிவிக்கையில், ஆர்வி 400 பைக்களுக்கான வரவேற்பை தொடர்ந்து ஏற்கனவே வாடிக்கையாளர் இந்த பைக்களுக்கு மாற தொடங்கி விட்டனர். எலக்ட்ரிக் வாகன யுகத்திற்கு மாற இந்தியா ஏற்கனவே தயாராகி விட்டது. இது வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் எலக்ட்ரிக் வாகனங்களை அணுகும் வகையில் பெரியளவிலான மேம்பாடுகளுடன் இருக்கும். இந்த மேம்பாடுகள் மை ரிவோல்ட் பிளான் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். கடந்த நான்கு நாட்களில், டெல்லியில் இருந்து ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இந்த பைக்களை வாங்க விரும்புவதால், அங்குள்ள ஷோரூம்கள் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றன. மேலும், இந்த பைக்களுக்கான புக்கிங்கை ஆன்லைனில் உறுதி செய்து வருகின்றனர். டெல்லி, மற்றும் புனே நகரங்களில் கிடைத்த வரவேற்பால் ரிவோல்ட் நிறுவனம் மகிழ்ச்சி அடைந்துள்ளது என்றார்.

இதுகுறித்து ரிவோல்ட் நிறுவனம் தெரிவிக்கையில், 90 விழுக்காடு வாடிக்கையாளர்கள், மை ரிவோல்ட் பிளான் பிரிமியத்தை ஏற்று கொண்டுள்ளனர். இந்த நிறுவனம் ஆர்வி400 பைக்களை இரண்டு வகைகளில் வெளியிட்டுள்ளது. அதாவது அடிப்படை மற்றும் பிரிமியம் வகைகளில் முறையே 3,499 ரூபாய் மற்றும் 3,999 ரூபாய் விலையில் கிடைக்கிறது. இந்த மாத தவணையில் 37 மாதங்கள் செலுத்த வேண்டும். இதில் பிரிமியம் வகைகள், பல்வேறு அம்சங்களுடன் இருக்கும். ஆர்வி400 பிரிமியம் வகைகள் எலக்ட்ரிக் பைக்களின் அன்-ரோடு விலை 1.48 லட்சம் ரூபாயாக இருக்கும்.

ரிவோல்ட் ஆர்வி400 பைக்கள் பல்வேறு பேக்களுடன் அதிகப்படியான டெக்னாலஜிகளுடன் கூடுதலாக எந்த பிரச்சினையும் இல்லாத ஓனர்ஷிப் அனுபவத்தை கொடுக்கும். இந்த பேமென்ட் பிளான்கள், பைக்கின் விலை மட்டுமின்றி சேவை கட்டணத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்த நிறுவனம் கூடுதலாக, 8 ஆண்டுகள்/1,50,000 km பேட்டரி வாரண்டிகளுடன், 3 ஆண்டுகள்/30,000 km பராமரிப்பு பெனிபிட்கள், நிறுவனத்தின் ஓராண்டு இன்சூரன்ஸ்/ மூன்றாம் தரப்பு நிறுவனத்திடம் இருந்து 5 ஆண்டுகளுடன் அறிமுக ஆப்பராக கிடைக்கிறது.

மாத தவணையில் வாங்கும் வசதி கொண்ட இந்த மோட்டார் சைக்கிள், குறைந்த விலை கொண்டதாக இருப்பதுடன், நிலையான விலை கொண்டதாகவும் இருக்கும். மேலும் இது முதல் நாளில் இருந்தே இந்த மோட்டார் சைக்கிள்களுக்கு உங்களை உரிமையாளராக மாற்றி விடுவதுடன், புதிய அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும்.

மெக்கனிக்கல் முறையில் பார்க்கும் போது, ஆர்வி400- பைக்கள், 3.24 kWh லித்தியம் இயான் பேட்டரிகளுடன் 72V ஆற்றலை உருவாக்கும். மேலும் ஒரு முறை சார்ஜ் செய்தால், இந்த பைக் அதிக பட்சமாக 150 km தூரம் பயணிக்கும். ஸ்போர்ட்ஸ் மோடு-ல் இந்த பைக்களின் டாப்-ஸ்பீட் 85 kmph-ஆக இருக்கும்.

இந்த பைக்களின் முன்புறத்தில் USD போர்க்களுடனும், அட்ஜெஸ்ட் செய்து கொள்ளத்தக்க மோனோஷாக்கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்கை பொறுத்தவரை, இந்த பைக்களின் இரண்டு புறங்களிலும் டிஸ்க்களுடன், சிபிஎஸ் வழக்கம் போலவே பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்களின் எடை 108 kg-களுடன் லைட்களுடன் இருக்கும். இந்த பேட்டரிகள் முழுமையாக சார்ஜ்-ஆக 4.5 மணிநேரம் ஆகும். ஒருவேளை வாடிக்கையாளர்கள் கூகிள் பார்ட்னர்ஷிப்களுடன் கூடுதலாக கனெக்டேட் ஹெல்மெட்களுடன் வாங்கினால், உங்கள் பைக்கை வாய்ஸ் காமண்ட் மூலம் ஸ்டார்ட் செய்து கொள்ள பயனாளர்களை அனுமதிக்கும்.

ஆர்வி 400 பைக்களுக்கான டெலிவரிகள் டெல்லியில் உள்ள நான்கு இடங்களில் இந்த வாரத்தில் தொடங்க உள்ளது. புனேவில் செப்டம்பர் மாதத்தில் டெலிவரிகள் தொடங்கப்பட உள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் தங்கள் பைக்களை டெஸ்ட் ரைடு செய்வதுடன், KYC விதிமுறைகளை செய்து கொள்ள முடியும். இரண்டாம் கட்ட முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளதுடன், இந்த பைக்களுக்கான டெலிவரி வரும் நவமபர் மாதம் முதல் தொடங்க உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/news/bikes/revolt-rv400-electric-motorcycle-sold-out-for-september-october/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)