Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

ரிவோல்ட் மோட்டார்ஸ் விரைவில் வெளியாக உள்ள அனைத்து எலக்ட்ரிக் கபே ரேஸ்ஸர் பைக்களுக்கான டீசரை வெளியிட்டது…!

ரிவோல்ட் மோட்டார்ஸ் விரைவில் வெளியாக உள்ள அனைத்து எலக்ட்ரிக் கபே ரேஸ்ஸர் பைக்களுக்கான டீசரை வெளியிட்டது…!

ரிவோல்ட் இன்டலிகார்ப் நிறுவனம் அண்மையில் ஆர்வி 300 மற்றும் ஆர்வி 400 பைக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இவை இந்த நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களாக இருக்கும். ஏற்கனவே இந்த மோட்டார் சைக்கிள்கள் குறித்த விரிவான விபரங்களை ஏற்கனவே நமது autonews360.com இணையதளத்தில் நீங்கள் படித்திருப்பீர்கள்.

இந்த அறிமுகத்திற்கு பின்னர், இந்த நிறுவனம் தனது எதிர்கால திட்டமான புதிய பைக் அறிமுகம் குறித்து டீசரை வெளியிட்டுள்ளது. இந்த பைக்கள் எலக்ட்ரிக் கபே ரேஸ்ஸர் என்றும், இவை இந்த நிறுவனத்தின் அடுத்த அறிமுகமாக இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த டீசரில், காட்டப்பட்டுள்ள ஸ்கெட்ச்சில் மோட்டார் சைக்கிள் வட்ட வடிவிலான ஹெட்லேம், குறைந்த அளவிலான ஒரு ஜோடி கிளிப்களுடன் கூடிய ஹேண்டில்பார்கள், உயரம் குறைந்த சீட் மற்றும் கபே ரேஸ்ஸர் ஸ்டைல் கவுல் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இந்த ஸ்கெட்ச்களில் கூடுதலாக கினாப்பி டயர்களுடன், ஸ்போர்ட்ஸ் பைக்களை போலவே இருக்கும்.

கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட டேங்க்களுடன் கிரிப்களுக்காக முழங்காலை வைப்பதற்கான இடைவெளியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக ஒட்டி செல்லும் போது சிறப்பாக செயல்படும் வகையில் டயர் ஹக்கர்களும் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கபே ரேஸ்ஸர்கள், ஆர்வி 400 பைக்களின் இருந்து பெறப்பட்ட பிரேம்கள் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்களை பயன்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இவை அனைத்து ஆர்வி 400 பைக்களை போலவே இருக்கும் வாய்ப்புள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் இந்தாண்டின் இறுதியிலோ அல்லது வரும் 2020-ம் ஆண்டின் முற்பகுதியிலோ அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிவோல்ட் நிறுவனம் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை இதுவரை இல்லாத வகையில், எக்ஸ்ஷோரூம் விலையை கொடுக்காமல் குறைந்த விலையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிறுவனம், மாத தவணை முறையில் தங்கள் பைக்களை விற்பனை செய்து வருகிறது.

ஆர்வி 300 பைக்களை மாதம் 2,999 ரூபாய் விதம் 37 மாதங்கள் செலுத்தி பெற்று கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. இதேபோன்று ஆர்வி 400 மற்றும் பிரிமியம் ஆர்வி 400 வகைகளை முறையே 3,499 மற்றும் 3,999 ரூபாய்களாக 37 மாதங்கள் செலுத்தி வாங்கி கொள்ளலாம். இதனால், ரிவோல்ட் நிறுவனம் எலக்ட்ரிக் கபே ரேஸ்ஸர் வகைகளையும் இதே போன்ற மாத தவணை முறையிலேயே விற்பனை செய்யும் என்று தெரிகிறது.

ரிவோல்ட் ஆர்வி 400 பைக்களில் 4G LTE சிம்கள் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் இன்டர்நெட் மற்றும் கிளவுட் கனேக்டட் அம்சங்களை உங்கள் மோட்டார் சைக்கிள்களில் எனேபிள் செய்து கொள்ளலாம்.

லித்தியம்-இயான் பேட்டரிகளுடன் கூடிய ஆர்வி400 பைக்கள் ARAI-சர்டிபிகேட் பெற்றுள்ளதுடன், சிங்கிள் சார்ஜ்ஜில் 156 km பயணிக்கும். மேலும், இந்த பேட்டரி முழு சார்ஜ்-ஆக நான்கு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தையே எடுத்து கொள்ளும்.

ஆர்வி 400 பைக்கள் சத்தமில்லாத மோட்டார் சைக்கிளாகவும், 3kW எலக்ட்ரிக் மோட்டார்களுடன் 175 Nm உடனடி டார்க்களுடன், இந்த பைக்களின் அதிகப்பட்ச வேகம் 85 kmph-ஆக இருக்கும்.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)