Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

விழாக்கால சீசனை முன்னிட்டு டாடா ஹாரியர் டார்க் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 16.76 லட்சம்

விழாக்கால சீசனை முன்னிட்டு டாடா ஹாரியர் டார்க் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 16.76 லட்சம்

டாடா மோட்டார் நிறுவனம் புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல்களான எஸ்யூவி-களை அறிமுகம் செய்ய உள்ளது. எதிர்வரும் விழாக்கால சீசனை முன்னிட்டு டாடா ஹாரியர் வெளியிடப்பட உள்ளது. இந்த கார்களின் விலை 16.76 லட்சம் ரூபாயாகும்.

டாடா ஹாரியர் டார்க் பதிப்பு, என்று பெயரிடப்பட்டுள்ள புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் அதன் பெயருக்கு ஏற்றவகையில், பிளாக் தீம்களுடன் இருக்கும். அதாவது, இந்த காரின் இன்டீரியர்களும் முற்றிலும் பிளாக் நிறத்தில் இருக்கும். உண்மையில், இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் கடந்த ஜூலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டது. டாடா நிறுவனம், ஹாரியர் டார்க் எடிசன்களை டாப்-எண்ட் எக்ஸ்இசட் வகையாக மட்டுமே வெளியிட உள்ளது. இந்த கார்களின் விலையை பார்க்கும்போது, கடந்த ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்ட டூயல்-டோன் வெர்சன்களின் விலையை விட அதிகமாகவே இருக்கும்.

வெளிப்புறமாக பார்க்கும் போது, இந்த காரில் மொத்தமாக 14 டிசைன் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவை புதிய டாடா ஹாரியர் டார்க் பதிப்புகளை பிரிமியம் காராக மாற்றும் வகையில் இருக்கும். இந்த காரில் செய்யப்பட்டுள்ள சில டிசைன் அப்டேட்களில் முக்கியமாக, புதிய அட்லஸ் பிளாக் பாடி கலர் மற்றும் 17 இன்ச் பிளாக்ஸ்டோன் அலாய் வீல்களுடன் கூடிய வெளிப்புற தோற்றம் மற்றும் மேட்சிங் பிளாக்ஸ்டோன் தீம்களுடன் கூடிய இன்டீரியர்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்த காரின் கேபின்கள் பிரிமியம் பென்னாக் கில்லிகோ பிளாக்ஸ்டோன் லெதர் அப்ஹோலஸ்டரி, பிளாக்ஸ்டோன் மேட்ரிக்ஸ் டாஷ்போர்டு மற்றும் புதிய கன்மெட்டல் கிரே குரோம் பேக்களுடன் இருக்கும். இவை இண்டீரியரை அழகு படுத்தும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. புதிய டார்க் தீம்-மை தவிர்த்து, பெரும்பாலான அம்சங்கள் டாப்-எண்ட் எக்ஸ்இசட் வகைகளில் உள்ளதை போன்று இருக்கும்.

இந்த லிமிடெட் பதிப்பின் வெளியீடு குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவன பயணிகள் வாகனங்கள் வர்த்தக பிரிவு, சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி விவேக் ஸ்ரீவத்ஸா தெரிவிக்கையில், இன்-லைன்களுடன் உள்ள எங்களது எண்டோவர்கள், ஸ்டைல் அம்சங்கள் கொண்டதாகவும் ஹாரியர் இருக்கும். எப்போதும், எங்கள் தயாரிப்புகள் முன்னிலை பெற்றிருக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம்.

பிளாக் கலர்கள் எப்போதும், வாடிக்கையாளர்களின் விருப்பமாக இருந்து வருகிறது. வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையிலும் எதிர்வரும் விழாக்கால சீசனில் நாங்கள் ஹாரியர் டார்க் எடிசன்களை அறிமுகம் செய்துள்ளோம். இந்த புதிய கார்கள், பல்வேறு பேக்கேஜ்களுடன், கவர்ந்திழுக்கும் எக்ஸ்டீரியர்களுடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்டீரியர்கள் 14 டிசைன் மேம்பாடுகளை கொண்டதாக இருக்கும். இந்த ஹாரியர்கள் அறிமுகம் செய்யப்பட்டது முதல், வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டாடா ஹாரியர்கள், ஃபியட்-சோர்ஸ் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்களுடன் 138 bhp மற்றும் 350 Nm பீக் டார்க் கொண்டதாக இருக்கும். இதில் உள்ள ஆயில் பர்னர், 6 ஸ்பீட் மெனுவல் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தற்போது ஆட்டோமேடிக் டிரான்மிஷன் ஆப்சன்கள் வெளியாகவில்லை. தற்போது டாடா ஹாரியர்கள் இந்தியாவில் 12.99 லட்சம் ரூபாய் முதல் 16.76 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) விற்பனையாகிறது.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)