Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

‘வாகன விற்பனையில் புதிய உச்சம்!’ 4,500 எக்ஸ்பிளஸ் 200 மற்றும் எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக்களை விற்பனை செய்துள்ளது ஹீரோ நிறுவனம்

‘வாகன விற்பனையில் புதிய உச்சம்!’ 4,500 எக்ஸ்பிளஸ் 200 மற்றும் எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக்களை விற்பனை செய்துள்ளது ஹீரோ நிறுவனம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், கடந்த ஜூலை மாத்தில் மொத்தமாக 5 லட்சத்து 11 ஆயிரத்து 374 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் செய்யப்பட்ட விற்பனையை ஒப்பிடும் போது, 22.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் டிவிஎஸ் நிறுவனம் 6 லட்சத்து 63 ஆயிரம் 283 ஆயிரம் பைக்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. பெரியளவிலான டூ-வீலர் தயாரிப்பாளர்களின் விற்பனையை, கடந்த 2018ம் ஆண்டை ஒப்பிடும் போது, இந்தாண்டில் 33.83 விழுக்காடு மார்க்கெட் ஷேர்-ஐ கைப்பற்றியுள்ளது.

சாதகமற்ற சந்தை சூழ்நிலையில் சுசூகியை தவிர்த்து, எந்த ஒரு டூ-வீலர் தயாரிப்பு நிறுவனமும் ஜூலை மாதத்தில் பாசிடிவ் சேல்ஸ்-ஐ பதிவு செய்யவில்லை. இருந்தாலும், ஒரு லட்சத்து 79 ஆயிரம் யூனிட் ஹீரோ ஸ்பிலெண்டர் விற்பனையாகி, அதிகம் விற்பனையாகும் மாடலாக இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் 200 cc மாடல்களும் கூட சிறந்த திறனுடன் இருந்து வருகின்றன.

ஹீரோ எக்ஸ்பிளஸ் 200 மற்றும் ஹீரோ எக்ஸ்பிளஸ் 200 டி பைக்களின் விற்பனை 2 ஆயிரத்து 530 யூனிட்களாகவும், ஹீரோ எக்ஸ்டீரிம் 200 ஆர்-களின் விற்பனை 426 யூனிட்களாக உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு விற்பனையை ஒப்பிடும் போது இந்தாண்டில் ஹீரோ எக்ஸ்டீரிம் 200 ஆர்-களின் விற்பனை 55 விழுக்காடு அதிகரித்து உள்ளது. ஹீரோ எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ் மற்றும் எக்ஸ்டீரிம் 200 எஸ் பைக்களின் விற்பனை ஆயிரத்து 596 யூனிட்களாக இருக்கிறது. இதுமட்டுமின்றி, மொத்தமாக 4 ஆயிரத்து 500 யூனிட்களாகவும் உள்ளது.

இந்தியாவில் ஹீரோ எக்ஸ்பிளஸ் 200 பைக்களின் விலை 97 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்த விலை போட்டியிடும் வகையாக இருக்கும். ஹீரோ எக்ஸ்பிளஸ் 200டி பைக்களின் விலை 94 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதுமட்டுமின்றி எக்ஸ்பிளஸ் 200, எரிபொருள் இன்ஜெக்ஷட்டட் வெர்சன்கள் 1.05 லட்சம் ரூபாயாக இருக்கும். ஹீரோ எக்ஸ்டீரிம் 200 எஸ் பைக்கள் கடும் போட்டியை உண்டாக்கக்கூடிய வகையில் இருப்பதுடன் 98 ஆயிரத்து 500 ரூபாய் விலையில் கிடைக்கிறது (அனைத்து விலைகளும் எக்ஸ்ஷோரூம் விலையாகும்).

இந்த மோட்டார் சைக்கிள்கள் 199.6 cc ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் நான்கு ஸ்டிரோக் OHC இன்ஜின்களுடன், பீக் ஆற்றலான 18.4 PS-ல் 8,000 rpm-லும், அதிகப்பட்ச டார்க்கான 17.1 Nm-ல் 6,500 rpm-லும் இயங்கும். இந்த இன்ஜின்கள் 4 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது

ஹீரோ எக்ஸ்பிளஸ் 200, எக்ஸ்பிளஸ் 200 டி மற்றும் எக்ஸ்டீரிம் பைக்களில், சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் சிஸ்டம், எல்இடி ஹெட்லேம் செட்அப், கியர் பொசிஷன் இன்டிக்கேட்டர் மற்றும் டேர்ன்-பை-டேர்ன் நேவிகேசன் போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)