Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

எம்.வி. அகஸ்டா டூரிஸ்மோ வேலோஸ் 800 பைக் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்…!

எம்.வி. அகஸ்டா டூரிஸ்மோ வேலோஸ் 800 பைக் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்…!

எம்.வி. அகஸ்டா டூரிஸ்மோ வேலோஸ் 800 பைக்கள் புதிய மாடலாக இந்தியாவில் இத்தாலிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, இது இந்த நிறுவனத்தின் முதல் ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்களாக இருக்கிறது. இதன் மூலம் எம்.வி. அகஸ்டா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் தங்கள் லைன்-அப்களை நிறைவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் லைன்-அப்கள் புருட்டேல் 800 மற்றும் எஃப் 3 800 வகைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

தற்போது இந்த நிறுவனம், என்ட்ரி லெவல் வகைகளை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்ய உள்ளது. பிரீமியம் டூரிஸ்மோ வெலோஸ் 800 லூசோ வகைகள், சிறப்பு ஆர்டரின் பேரில் மட்டுமே கிடைக்கும். இந்த பைக்கள் கூடுதலாக பிரீமியம் விலைகளுடன் அதாவது, வழக்கமான மாடலை விட 2 லட்சம் ரூபாய் அதிக விலை கொண்டதாக இருக்கும்.

டிசைன் மற்றும் ஸ்டைல்:

வெளிப்புறமாக பார்க்கும் போது, எம்.வி. அகஸ்டா டூரிஸ்மோ வேலோஸ் 800 பைக்கள் நிறுவனத்தின் தற்போதைய டிசைன் லாங்குவேஜ்களுடன் இருக்கும். இந்த பைக் சில சிக்னேச்சர் உபகரணங்களுடன் தனித்துவமிக்க இத்தாலிய டிசைன்களுடன் கிடைக்கிறது. இந்த டிசைன்கள், உறுதியான முன்புறம், இதில் டைமண்ட் வடிவிலான எல்இடி ஹெட்லேம் மற்றும் எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப், பெரியலவிலான பெட்ரோல் டேங்க், வெளிப்புறமாக தெரியும் பிரேம் மற்றும் டிரிபிள் பைப் எக்ஸாஸ்ட்களும் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்டைலை பொறுத்தவரை, இதில் பிரத்தியோகமான டூரிஸ்மோ வேலோஸ் பைக்கள், உயரமான மற்றும் அகலமான ஹேண்டில்பார்கள் உள்ளன. இவை ஹேன்ட்கார்டுகளுடன் மேம்படுத்தப்பட்ட இன்டிக்கேட்டர்கள், பின்புறத்தில் மெனுவலாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக்கூடிய விண்ட்ஸ்கிரீன்களுடன் 60 mm டிராவல், பெரியளவிலான 21.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் ஸ்போர்ட்ஸ் பைக்களை போன்ற ஸ்டெப் சீட்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில், ப்ளோட்டிங் ரியர் மட்கார்டுகளுடன், மேம்படுத்தப்பட்ட டேர்ன் சிக்னல் லைட்கள், பெரியளவிலான கிராப் ரெயில்கள், சிங்கிள்-சைடு கொண்ட ஸ்விங்ஆர்ம் மற்றும் 17 இன்ச் கிளாஸி பிளாக் அலாய் வீல்களும் உள்ளன.

இன்ஜின் மற்றும் டிரான்மிஷன்:

இந்த பைக்கள் 798 cc இன்-லைன் மூன்று சிலிண்டர் இன்ஜின்களுடன் இயங்கும். இவை F3 வகைகளில் இருந்து பெறப்பட்டவையாகும். மேலும் இந்த இன்ஜின்கள் அதிகபட்ச ஆற்றலான 108 bhp-ல் 10,150 rpm-லும் பீக் டார்க்கான 80 Nm-ல் 7,100 rpm-லும் இயங்கும். எம்.வி. இதில் 90 விழுக்காடு டார்க் குறைந்த அளவான 3,800 rpm-ல் கிடைக்கும் என்று அகஸ்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இன்ஜின்கள் கவுண்டர்-ரோட்டேட்டிங் கிராங்ஷாப்ட்களுடன் இருக்கிறது. மேலும் இவை குயிக் ஷிப்ட்னர்களுடன் கூடிய 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் உடனும் இணைக்கப்பட்டுள்ளது.

உபகரணங்கள் மற்றும் அம்சங்கள்:

இந்த மோட்டார் சைக்கிள், பல்வேறு அம்சங்களுடன் வெளியாகியுள்ளது. அதாவது, முழுமையான டிஜிட்டல் கலர் டிஸ்பிளே உடன் கூடிய இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர், சுவிட்ச் செய்து கொள்ளத்தக்க ஏபிஎஸ் மற்றும் பல்வேறு ரைடிங் மோடுகள் கொண்டதாக இருக்கும். சஸ்பென்சனை பொறுத்தவரை, முழுமையாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ளத்தக்க மார்சோச்சி முன்புற போர்க் மற்றும் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக்கூடிய சாக்ஸ்கள் பின்புற மோனோஷாக்-களுடன் கிடைகிறது.

பிரேக்களை பொறுத்தவரை, டூவின் 320 mm டிஸ்க்களுடன் நான்கு-பாட் காலிப்பர்கள் முன்புறத்திலும், சிங்கிள் 220mm டிஸ்க் பிரேக்கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. எம்.வி. அகஸ்டா டூரிஸ்மோ வேலோஸ் 800 பைக்களில் 17 இன்ச் அலாய் வீல்கள் இரண்டு புறங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இவை 120/80 செக்ஷன் டயர்கள் முன்புறத்திலும், 190/55 செக்ஷன் டயர்கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. மற்ற அம்சங்கள், இம்மொபைலைசர், குரூஸ் கண்ட்ரோல், யுபிஎஸ் சார்ஜர் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

பாதுகாப்பு மற்றும் எலக்ட்ரானிக்ஸ்:

எம்.வி. அகஸ்டா டூரிஸ்மோ வேலோஸ் 800 பைக்களில், பல்வேறு எலக்ட்ரிக்ஸ் பேக்கேஜ்களை கொண்டுள்ளது. அதாவது MVICS எலக்ட்ரானிக் சிஸ்டம்களுடன் முழு மல்டி-மேப் ரைடு-பை-வயர் திரட்டல், 8-லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல், மேலும் இவை பொருத்தமான EAS 2.0 எலக்ட்ரானிக் அப் மற்றும் டோவ்ன் கியர்பாக்ஸ் மற்றும் ஹைட்ராலிக் ஆக்டிவேட் செய்யப்பட்ட சிலிப்பர் கிளட்ச்களுடன் இருக்கும். இந்த பைக்களில் கூடுதலாக டூயல்-சேனல் போஸ் 9 பிளஸ் ஏபிஎஸ்களுடன் ரியர் வீல் லிப்ட் அப்-களுடன் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இவற்றின் கண்ட்ரோல் அழுத்தம் முன்புற பிரேக்களுடன் இன்வோல்ன்டரி வீல் லிப்ட் அப்களை கொண்டதாக இருக்கும்.

விலை மற்றும் போட்டி:

எம்.வி. அகஸ்டா டூரிஸ்மோ வேலோஸ் 800 ஸ்போர்ட்ஸ் டூரர் மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் 18.99 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருந்த போதும் ஸ்பெஷல் ஆப்பராக, மோட்டார் சைக்கிள்களின் டிஸ்கவுன்ட் விலையாக 16.99 லட்சம் ரூபாயாக முதல் மூன்று வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க உள்ளது. இரண்டும் இந்தியாவில் எக்ஸ்ஷோரூம் விலையாகும். இந்த மோட்டார் சைக்கிள்கள், ட்ரையம்ப் டைகர் 800 மற்றும் டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 950 பைக்களுக்கு போட்டியாக இருப்பதுடன், டைகர் 1200 மற்றும் மல்டிஸ்ட்ராடா 1200 எஸ் ஆகியவற்றுக்கும் போட்டியாக இருக்கும்.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)