Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

அர்ஜுனா விருது வென்ற முதல் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர் என்ற பெருமையை பெற்றார் கவுரவ் கில்..!

அர்ஜுனா விருது வென்ற முதல் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர் என்ற பெருமையை பெற்றார் கவுரவ் கில்..!

இந்தியா மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிரிவில் மிகபெரிய மைல்கல்லாக, ரிலே டிரைவர் கவுரவ் கில், இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ஸ் பீல்டில் வெற்றி பெற்று அர்ஜுனா விருது பெற்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கவுரவ் கில் திறமையை அங்கீகாரம் செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட சிறப்பு விழாவில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் இடம் இருந்து அர்ஜுனா விருதினை பெற்று கொண்டார். கில்-லின் வெற்றி மோட்டார் ஸ்போர்ட்ஸ் தடகள பிரிவில் சிறந்த நிகழ்வாக இருப்பதுடன், அரசால் பல ஆண்டுகளாக தவிர்க்கப்பட்டு வந்த விளையாட்டுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாகும்.

விளையாட்டு துறையில் மிகப்பெரிய சாதனை படைத்த விளையாட்டு வீரர்களை கவரவிக்கும் வகையில் இந்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தால், அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

கில், மோட்டார் ஸ்போர்ட்ஸ்-ஐ தனது தொழிலாக கொண்டவர். 37 வயதாகும் கில், மூன்று முறை ஆசிய பசிபிக் ரிலே பங்கேற்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றவர். மேலும் அவர் இந்திய தேசிய ரிலே சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று ஆறு முறை வெற்றி பெற்றுள்ளார்.

கூடுதலாக, இவர், முந்தைய ஆண்டில் WRC2 முன்னுரிமை அல்லாத நுழைவில் பங்கேற்றார். மேலும் ரிலே துருக்கி, வேல்ஸ் ரிலோ ஜிபி மற்றும் ரலே ஆஸ்திரேலியா போட்டிகளில் இந்தாண்டில் பங்கேற்று மூன்று சுற்றுகளை நிறைவு செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் தக்ஷின் டேர் ரிலேயில் கில் பங்கேற்கும் போதும் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டில்தான் விளையாட்டு அமைச்சகம் மோட்டார் ரேஸிங்கை அங்கீகாரம் செய்துள்ளதுடன், கூட்டமைப்பின் மோட்டார்ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா (FMSCI)-ஐ தேசிய விளையாட்டு கூட்டமைப்பு பட்டியலில் சேர்த்தது. தொடர்ந்து, விளையாட்டு துறை அமைச்சகத்திடம் FMSCI கடந்த மூன்று ஆண்டுகளில் தற்போது, கவுரவ் கில் பெயரை பெருமைமிக்க அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்தது.

கில் பெற்ற வெற்றி, தடகளம் மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ்களுக்கு கிடைத்த அங்கீகாரம் மட்டுமின்றி இளைய தலைமுறையினரை மோட்டார் ஸ்போர்ட்சில் பங்கேற்க ஊக்குவிக்கும். இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ்கள் உலகளவில் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த திருப்பம், பெரியளவிலான எக்கோ-சிஸ்டத்தை கட்டமைக்க உதவும். மேலும் போட்டியாளர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் உதவியுடன் இந்த ஸ்போர்ட்ஸ் மேலும் வளர வழிவகை செய்யும்.

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)