Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

எம்.வி. அகஸ்டா டூரிஸ்மோ வேலோஸ் 800 பைக் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 18.99 லட்சம்

எம்.வி. அகஸ்டா டூரிஸ்மோ வேலோஸ் 800 பைக் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 18.99 லட்சம்

மோடோராயல் கைனடிக் நிறுவனம் இன்று எம்.வி. அகஸ்டா டூரிஸ்மோ வேலோஸ் 800 அட்வென்சர் டூரர் மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் 18.99 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலை விற்பனைக்கு வந்துள்ளது.

இது எம்.வி. அகஸ்டா பிராண்டின் முதல் அட்வென்சர் டூரர் பைக்காக இருப்பதுடன், இந்த பைக்கள் கைனடிக் நிறுவனத்தின் மோடோராயல் ஷோரூம்களில் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச அளவில், இந்த மோட்டார் சைக்கிள்கள் டூரிஸ்மோ வேலோஸ் 800, டூரிஸ்மோ வெலோஸ் 800 லுசோ, டூரிஸ்மோ வெலோஸ் 800 லூசோ எஸ்சிஎஸ் மற்றும் டூரிஸ்மோ வெலோஸ் ஆர்சி எஸ்சிஎஸ் என நான்கு வகைளில் கிடைக்கிறது. இருந்தாலும், தற்போதைக்கு இந்தியாவுக்கு எக்ஸ்எக்ஸ் ஆப்சன்கள் மட்டுமே கிடைக்கின்றன.

இந்தியாவில், புதிய எம்.வி. அகஸ்டா டூரிஸ்மோ வேலோஸ் 800-கள், ட்ரையம்ப் டைகர் 800 மற்றும் டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 950 பைக்களுக்கு போட்டியாக இருக்கும்.

வெளிப்படையாக பார்க்கும் போது, எம்.வி. அகஸ்டா டூரிஸ்மோ வேலோஸ் 800-கள் இத்தாலியன் மார்க்யூகளுடன் டியூன் செய்யப்பட்டுள்ளதுடன், உறுதியான மற்றும் ஆர்ப்பாட்டமான டிசைன் லாங்க்வேஜ்களுடன் பிரிமியம் பிட் பினிஷ்களுடன் இருக்கும்.
இந்த பைக்கள், சில சிக்னேச்சர் ஸ்டைல்களுடன் இருக்கும். இவை எம்.வி. அகஸ்டா மாடல்களில் இருந்து பெறப்பட்டது. அதாவது, முன்புற அழகிய வடிவமைப்பு F3 வகைகளை போன்று இருக்கும். மேலும், டிரிபிள்-பைப் எக்ஸ்ஹாஸ்ட் பொருத்தப்பட்டுள்ளது. இவை, புருட்டேல் 800 மாடல்களால் கவரப்பட்டு டிசைன் செய்யப்பட்டது.

உண்மையில், ‘எவ்ரிடே F3’ என்றும் இந்த பைக்களை இந்த நிறுவனம் அழைக்கிறது. இதுமட்டுமின்றி இந்த பைக்களில், கூடுதலாக, எல்இடி ஹெட்லேம், ஹேண்ட் கார்டுகளுடன் கூடிய பில்ட் இன் இன்டிக்கேட்டர்கள் மற்றும் எல்இடி டெயில் லேம்ப்களும் பொருத்தப்பட்டுள்ளது.

எம்.வி. அகஸ்டா டூரிஸ்மோ வேலோஸ் பைக்கள், 798cc இன்-லைன் மூன்று சிலிண்டர் இன்ஜின்களுடன் இருக்கும். இவை F3-களுடன் இருந்து பெறப்பட்டதாக இருக்கும். மேலும் இவை, 110 bhp ஆற்றலில் 10,150 rpm-லும், பீக் டார்க்கான 80 Nm-ல் 7,100 rpm-லும் இயங்கும்.

எம்.வி. அகஸ்டா நிறுவனம் தெரிவிக்கையில், மொத்த டார்க்கில் 90 சதவிகிதம், குறைந்த அளவிலான டார்க்களான 3,800 rpm கொண்டதாக இருக்கும். இந்த இன்ஜின்கள் கவுண்டர் ரோட்டேடிங் கிராங்ஷாப்ட் மற்றும் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கம் போலவே குயிக் ஷிஃப்ட்னர்களுடன் இருக்கும்.

டூரிஸ்மோ வேலோஸ் 800 பைக்களில் கூடுதலாக அதிகளவிலான எலக்ட்ரானிக் பேக்கேஜ்களுடன் வெளியாகியுள்ளது. இந்த வசதிகள், MVICS எலக்ட்ரானிக் சிஸ்டம்களுடன் முழு மல்டி-மேப் ரைடு-பை-வயர் திரட்டல், 8 லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல்களுடன் அதிநவீன EAS 2.0 எலக்ட்ரானிக் அப் அண்டு டோவ்ன் கியர்பாக்ஸ் மற்றும் ஹைட்ராலிக் முறையில் ஆக்டிவேட் செய்ய கூடிய சிலிப்பர் கிளட்ச்களும் பொருத்தப்பட்டுள்ளது.

சஸ்பென்சன்களுக்காக முன்புறத்தில் மார்சோச்சி போர்க் மற்றும் பின்புறத்தில் சாக்ஸ் மோனோஷாக்களும் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்கிங்களுக்காக, முன்புறத்தில் டூவின் 320 mm டிஸ்க்களுடன் நான்கு பாட் கிளிப்பர்கள் மற்றும் பின்புறத்தில் 220 mm டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்களில் கூடுதலாக, டூயல்-சேனல் போஸ் 9 பிளஸ் ஏபிஎஸ்களுடன் ரியர் வீல் லிஃப்ட்-அப்-கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எம்.வி. அகஸ்டா டூரிஸ்மோ வேலோஸ் 800-கள் 17 இன்ச் அலாய் வீல்கள் இரண்டு புறங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வீல்கள் 120/70 செக்ஷன் கொண்ட டயர் முன்புறத்திலும், 190/55 செக்ஷன் கொண்ட டயர் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)