Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

மேம்படுத்தப்பட்ட புதிய வோக்ஸ்வாகன் போலோ & வென்டோ ஃபேஸ்லிஃப்ட் கார்கள் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம்..!

மேம்படுத்தப்பட்ட புதிய வோக்ஸ்வாகன் போலோ & வென்டோ ஃபேஸ்லிஃப்ட் கார்கள் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம்..!

வோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வெர்சன்களான வோக்ஸ்வாகன் போலோ & வென்டோ கார்களை வரும் செப்டம்பர் 4-ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் பிரபலமான மாடல்கள் இந்தியாவில் சில சப்டைல் காஸ்மெடிக் மாற்றங்களுடன் புதிய மாடல் போன்றும் பல்வேறு வசதிகளுடன் வெளியாக உள்ளது.

மேம்படுத்தப்பட்ட கார்கள், சோதனை செய்தது இந்தாண்டின் துவக்கத்தில் பார்க்கப்பட்டது. இந்த மாற்றங்கள் இந்த காரை புதியதாகவும், அடுத்த தலைமுறை போலோ & வென்டோ போன்று இந்தியாவில் அறிமுகத்திற்கு முன்பு புகைபடங்கள் வெளியானது. இந்த புதிய தலைமுறை போலோ வகைகள், இந்தியாவில் MQB A0 பிளாட்பார்மை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். இதே பிளாட்பார்மில் கூடுதலாக வென்டோ வகை கார்களும் தயாரிக்கப்படுகிறது.

ஏற்கனவே வெளியான ஸ்பை புகைப்படங்களில் பார்த்தது போன்று வோக்ஸ்வாகன் போலோ & வென்டோ ஃபேஸ்லிஃப்ட்களில் ஸ்போர்ஸ் ஸ்டைலில், மறுசீரமைப்பு செய்யப்பட்ட முன்புறத்தில், சில மாற்றங்களுடன் கூடிய கிரில்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவை GTI மாடல்களில் இருந்து கவரப்பட்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பின்புற பம்பர்கள் டூவிக் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு கார்களிலும் சில்ஹாட்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அப்டேட் வெர்சன்களில் கூடுதலாக புதிய அலாய் வீல்கள் கிரே பிநிஷில் இருக்கும். வோக்ஸ்வாகன் போலோ & வென்டோ ஃபேஸ்லிஃப்ட்கள் பல்வேறு கட்டாயமாகப்பட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வசதிகள், முன்புற சீட்பெல்ட் ரீமைண்டர், ரியர் பார்கிங் சென்சார்கள் மற்றும் ஸ்பீட்அலர்ட் சிஸ்டம் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். டூயல் ஏர்பேக்ஸ் மற்றும் ஏபிஎஸ் ஏற்கனவே வழக்கமான அனைத்து வகைகளிலும் இடம் பெற்றுள்ளது. இருந்தாலும் இதில் உள்ள இன்போடேய்ன்மென்ட் சிஸ்டமில் எதாவது மாற்றம் செய்யப்பட்டு உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

ஆற்றலை பொறுத்தவரை வோக்ஸ்வாகன் போலோ வகைகளில், 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் TDI டீசல் இன்ஜின்களுடன் வெளியாக உள்ளது. இந்த இன்ஜின்கள் இந்த காரின் அறிமுகத்தின் போது பிஎஸ்6 விதிக்கு உட்பட்டதாக இருக்குமா என்று பார்க்க வேண்டும். இதுமட்டுமின்றி 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார்களும் GT TSI வெர்சன்களில் பொருத்தப்பட்டு இருக்கும்.

வோக்ஸ்வாகன் வென்டோ-கள் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மில்களுடன் வெளியாக உள்ளது. வோக்ஸ்வாகன் நிறுவனம் அதிக நவீன 1.0 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் மோட்டார்கலை சர்வதோஷ அளவில் வெளியிட்டுள்ளது. இவை அதிக ஆற்றலில் இயங்கும். ஆனால் இந்த இன்ஜின்கள் இந்திய கொண்டு வரப்பட்டால் அது பிஎஸ்6 தரத்திற்கு ஏற்றதாக மாற்றப்பட வேண்டியிருக்கும்.

இந்தியாவில் வோக்ஸ்வாகன் போலோ கார்கள் இந்தாண்டுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனால், இந்த கார்களில் அதிகளவிலான காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்ட வெளியாகும் என்று தெரிகிறது. வென்டோ வகைகளும் இதே வகையான மாற்றங்களுடன் இந்தியாவில் வெளியாகும் என்று தெரிகிறது.

வோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனம் புதிய வகையான எஸ்யூவிகலி முதல் முறையாக வோக்ஸ்வாகன் 2.0 திட்டத்தில் கொண்டு வர உள்ளது. இவை வரும் 2021-ல் அறிமுகமாக உள்ள புதிய போலோ & வென்டோ கார்களை தொடர்ந்து இந்த திட்டம் கொண்டு வரப்படும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில் சில அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)