இந்திய வரலாற்றில் முதன் முறையாக வெறும் ரூ.2,999 மாதத் தவணை திட்டத்தில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்..!

இந்திய வரலாற்றில் முதன் முறையாக வெறும் ரூ.2,999 மாதத் தவணை திட்டத்தில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்..!

ரிவோல்ட் இன்டலிகார்ப் நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை, இந்தியாவின் முதல் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் – எனேபிள் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களான ரிவோல்ட் ஆர்வி 400 பைக்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரிவோல்ட் ஆர்வி 400 இ-மோட்டார் சைக்கிள்கள், 125 cc கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாக இருக்குமாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆர்வி400 மோட்டார் சைக்கிள்களுடன் கூடுதலாக, ரிவோல்ட் நிறுவனம், புதிய என்ட்ரி லெவல் ஆர்வி 300 பைக்களையும் அறிமுகம் செய்துள்ளது. இரண்டு பைக்களில் ஆர்வி 300 பைக்களை, மாதத்திற்கு 2,999 ரூபாய் வீதம் 37 மாதங்கள் செலுத்தும் வகையிலும், ஆர்வி 400 பைக்களை மாதத்திற்கு 3,999 ரூபாய் வீதம் 37 மாதங்களுக்கு செலுத்தும் வகையிலுமான திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு இந்த நிறுவனம் வழங்குகிறது.

ரிவோல்ட் ஆர்வி400 வகைகள், 4G LTE சிம்களுடன் வெளியாக உள்ளது. இதன் மூலம் இன்டர்நெட் மற்றும் கிளைவுட் கனேக்டட் வசதிகளை இந்த மோட்டார் சைக்கிள் பெறும். மேலும், இதில் உள்ள பிரத்யேக ரிவோல்ட் மொபைல் பயன்பாடுகள் இந்த மோட்டார் சைக்கிளை உடனுக்குடன் ஆய்வு செய்து கொள்ள உதவும், சேட்டிலைட் நேவிகேஷன், பைக் லோக்கேட்டர், பாதுகாப்புக்காக ஜியோ பென்சிங், டோர் ஸ்டெப் பேட்டரி சர்விஸ் மற்றும் பேட்டரி சார்ஜிங் நெட்வொர்க்களை அக்சஸ் செய்யும் வசதி, பேட்டரி மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கான அழைப்பை மேற்கொள்ளும் வசதி போன்றவிய மட்டுமின்றி ஆன்லைன் பேமென்ட் கேட்வே வசதியும் இதில் உள்ளது.

லித்தியம்-இயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ள ஆர்வி 400-கள் ARAI சர்டிபிகேட் பெற்றுள்ளதுடன், ஒரு முறை சார்ஜ் செய்தால் 156 km தூரம் பயணிக்கும். மேலும் இந்த பேட்டரிகள் முழு சார்ஜ்-ஆக நான்கு மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தையே எடுத்து கொள்ளும்.

எளிதாக கழற்றக்கூடிய வகையிலான இந்த பேட்டரிகளை வீட்டிலோ அல்லது பணியிடத்திலோ ஆன்-போர்டு சார்ஜ்ஜர் மூலம் எளிதாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதுமட்டுமின்றி ரீசார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளை ஆப் மூலம்ஆர்டர் செய்து கொள்வதுடன், டோர்ஸ்டெப் டெலிவரி ஆப்சன்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆர்வி 400 எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்கள், 3kW எலக்ட்ரிக் மோட்டார்களுடன் 175 Nm டார்க்களுடன், இந்த மோட்டார் சைக்கிள்களின் டாப் ஸ்பீட் 85 kmph-ஆக இருக்கும். இந்த மோட்டார் சைக்கிள்களில் உள்ள பேட்டரிகளுக்கு அன்லிமிடெட் வாரண்டிகளும் இந்த நிறுவனம் வழங்குகிறது.

ரிவோல்ட் ஆர்வி 400 மோட்டார்சைக்கிள்களை அமேசான் மற்றும் ரிவோல்ட் இன்டலிகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆர்வி 400-கள் கூடுதலாக, தேர்வு செய்து கொள்ள கூடிய ஒருங்கிணைந்த சவுண்ட்களுடன் இருக்கும். இந்த சவுண்ட்களை ரிவோட் ஆப்-பில் உள்ள ரைடர் மோடு மூலம் தேர்வு செய்து கொள்ளலாம். ரிவோல்ட் ஆர்வி 400-கள் தற்போது டெல்லி மற்றும் புனே நகரில் கிடைக்கிறது. விரைவில், பெங்களூர், ஹைதராபத், அஹமதாபாத் மற்றும் சென்னை உள்பட பல நகரங்களிலும் அடுத்த சில மாதங்களில் கிடைக்கும் வகையில் விரிவு படுத்தப்பட உள்ளது.

சிறிய அளவு கொண்ட ரிவோல்ட் ஆர்வி 300 மோட்டார் சைக்கிள், 1.5 kW மோட்டார்களுடன் 2.7 kW பேட்டரி பேக்களுடன் ஒரு முறை சார்ஜ் செய்தால் 80-150 km பயணிக்கும். இந்த மோட்டார் சைக்கிள்களின் டாப் ஸ்பீட் 65 kmph-ஆக இருக்கும்.

இந்த எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்கள் 8 ஆண்டு/ 75,000 km வாரண்டிகளுடன் ஒவ்வொரு 10,000 km சர்விஸ் இன்டர்வெல்களுடன் கிடைக்கிறது. ரிவோல்ட் நிறுவனம் கூடுதலாக இலவச டயர் ரிபிளேஸ்மென்ட், மூன்று ஆண்டுகள் ஒரு முறை மாற்றும் வசதியை வழங்குகிறது. ஆனாலும் இந்த வசதி பிரிமியம் வகையான ஆர்சி 400 வகைகளுக்கு மட்டுமே பொருந்தும். ஆர்வி 300 மற்றும் ஆர்வி 400 மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங் நாளை (29.8.2019) முதல் தொடங்க உள்ளது.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)