Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

புதிய கேடிஎம் ட்யூக் 790 பைக்கின் முன்பதிவு தொடக்கம்..!

புதிய கேடிஎம் ட்யூக் 790 பைக்கின் முன்பதிவு தொடக்கம்..!

கேடிஎம் டியூக் 790 பைக்கள் பெங்களூரில் உள்ள பார்கிங் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது போன்ற ஸ்பை புகைப்படங்கள் அண்மையில் வெளியானது. இந்த பார்க்கிங் இடங்கள் பெங்களூரில் உள்ள கேடிஎம் இந்தியா டீலர்களுக்கு சொந்தமானதாகும்.

கேடிஎம் டீலர்கள் வெளியிட்ட தகவலில், புதிய கேடிஎம் டியூக் 790 பைக்கள் வரும் செப்டம்பர் 5ம் தேதி அறிமுகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேடிஎம் இந்தியா நிறுவனம், இந்த அறிமுக தேதி குறித்து தகவல்களை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில், கேடிஎம் டியூக் 790 பைக்களுக்கான அதிகாரப்பூர்வமற்ற புக்கிங்கள் குறிப்பிட்ட டீலர்ஷிப்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பைக்களுக்கான புக்கிங்கை செய்து கொள்ள டீலர்ஷிப்களை பொறுத்து 30,000 முதல் 50,000 ஆயிரம் வரை செலுத்த வேண்டும். 2019ம் ஆண்டுக்கு இந்தியாவில் விற்பனை செய்ய 100 யூனிட்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 100 பைக்களும் முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிடில்வெயிட் ஸ்போர்ட்ஸ் பைக்களான கேடிஎம் டியூக் 790 பைக்களில் லைட்வெயிட் சேஸ்களுடன் இருக்கும். இதன் உறுதியான வடிவமைப்புடன், காம்பேக்ட் நிலையுடன் இருக்கும். இவை நேர்த்தியான மற்றும் சிறந்த லீன் ஆங்கிள்களுடன் இருக்கும்.

மேலும் இதில் உள்ள வசதிகள், முழுமையான எல்இடி டேர்ன் இன்டிக்கேட்டர்கள், எல்இடி ஹெட் மற்றும் டெயில் லேம்ப்கள் மற்றும் ஹை மவுண்டட் சைடு எக்ஸாஸ்ட்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். மேலும் இதில் சஸ்பென்சன்கள் 43mm அட்ஜெஸ்ட் செய்ய முடியாத USD போர்க் மற்றும் WP-ல் இருந்து பெறப்பட்ட ப்ரீலோடு மோனோஷாக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி டூயல் டிஸ்க் பிரேக்கள் முன்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

கேடிஎம் டியூக் 790-களில் கூடுதலாக, மல்டிபங்க்ஷன் TFT ஸ்கிரீன் மற்றும் ஸ்பெஷல் ரைடு வசதிகள், அதாவது, டிராக் மோடு, மோட்டார் சைக்கிள் டிரக்ஷ்ன் கண்ட்ரோல், குயிக்ஷிப்ட்னர் பிளஸ், மோட்டார் சிலிப் ரெகுலேசன், சுப்பர் மோட்டோ மோடு மற்றும் மோட்டார் சைக்கிள் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல்களுடன் கூடிய ஏபிஎஸ் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்த பைக்கள், 174 kgs எடை கொண்டதாக இருப்பதுடன், ஸ்போர்ட்ஸ் கிளாஸ் பைக்களை விட எடை குறைந்ததாகவும் இருக்கும். கேடிஎம் நிறுவனம், கேடிஎம் டியூக் 790 பைக்களை இரண்டு கலர் ஸ்கீமில் அதாவது, ஆரஞ்சு மற்றும் பிளாக் நிறத்தில் வெளியிட உள்ளது. ஏற்கனவே கேடிஎம் 790 பைக்கள் சர்வதேச மார்க்கெட்டில், 799cc, பெர்லல் டூவின் இன்ஜின்களுடன் 105 hp ஆற்றல் மற்றும் 86 Nm டார்க்குடன் விற்பனை செய்து வருகிறது.

இந்த பைக்கள் CBU ரூட் வழியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்றும், இதன் விலை தோராயமாக 8.5 லட்சம் ரூபாயாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. துவக்கத்தில் இந்த டியூக் 790 இந்தியாவில் உள்ள அனைத்து கேடிஎம் டீலர்கள் மூலம் விற்பனை செய்யப்படாது. இவை குறிப்பிட்ட நகரங்களில் உள்ள டீலர்ஷிப்களில் மட்டும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேடிஎம் டியூக் 790 பைக்களின் விலை, இதற்கு போட்டியாக இருக்கும் பைக்களான ரூ. 7.46 லட்சம் விலை கொண்ட சுசூகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ் 750, ரூ. 7.69 லட்சம் கொண்ட கவாசாகி இசட் 900, ரூ. 9.19 லட்சம் விலை கொண்ட ஸ்ட்ரீட் டிரிபிள் எஸ் மற்றும் ரூ. 10.99 லட்சம் விலை கொண்ட டுகாட்டி மான்ஸ்டர் 821 போன்றவைகளின் விலையை விட அதிகமாக இருக்கும்.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)