கியா செல்டோஸிடமிருந்து 1.5 லிட்டர் டீசல் இஞ்சினை பெறுகிறது ஹூண்டாய் வென்யூ

கியா செல்டோஸிடமிருந்து 1.5 லிட்டர் டீசல் இஞ்சினை பெறுகிறது ஹூண்டாய் வென்யூ

தென் கொரியா கார் தயாரிப்பு நிறுவனம் ஹூண்டாய் வென்யூ, அதிக அளவில் விற்பனையாகும் சப்-காம்பேக்ட் எஸ்யூவியாக இருந்து வருகிறது. இந்த எஸ்யூவி-களில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் அண்மையில் புதிய கியா செல்டோஸ் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஆயில் பர்னர்கள் வென்யூ-களில் ஏற்கனவே உள்ள பிஎஸ்4 விதிக்கு உட்பட்ட 1.4 லிட்டர் டீசல் இன்ஜின்கள், பிஎஸ்6 எமிஷன் விதிக்கு உட்பட்டு மாற்றப்பட உள்ளது. இது அடுத்த கட்ட பணிகளின் போது மாற்றப்பட உள்ளது. கியா செல்டோஸ் கார்களில் உள்ள 1.5 லிட்டர் மோட்டார்கள் பிஎஸ்6 எமிஷன் விதிக்கு உட்பட்டதாக மாற்றப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக இந்த கார் இருக்கும்.

கியா செலடோஸ்கள் 1.5 லிட்டர் வேரியபுல் ஜியோமெட்ரி டர்போசார்ஜ்ஜர்கள்(VGT) டீசல் இன்ஜின்கள் 113 bhp மற்றும் 250 Nm டார்க் கொண்டதாக இருக்கும். மேலும் இவை 6 ஸ்பீட் மெனுவல் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

வென்யூ கார்களில் ஹூண்டாய் நிறுவனத்தின் குறைந்த ஆற்றல் கொண்ட வெர்சன்களான 1.5 லிட்டர் ஆயில் பர்னர்களுடன் வேரியபுல் ஜியோமெட்ரி டர்போசார்ஜ்ஜர்கள்(VGT)-களுடன் இருக்கும். இவை 89 bhp மற்றும் 220 Nm பீக் டார்க் கொண்டதாக இருக்கும். இது ஏற்கனவே இருந்த 1.4 லிட்டர் டீசல் இன்ஜினுக்கு மாற்றாக பொருத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும், ஹூண்டாய் நிறுவனம் கூடுதலாக, அதிக ஆற்றல் கொண்ட 1.5 லிட்டர் VGT டீசல் இன்ஜின்களை, கிரெட்டா மற்றும் வெர்னா வகைகளில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, ஹூண்டாய் வென்யூ-கள் இரண்டு பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் வெளி வருகிறது. டாப்-ஸ்பெக் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மோட்டார், 118 bhp மற்றும் 172 Nm பீக் டார்க் கொண்டதாக இருப்பதுடன், டூயல்-கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்மிஷன் அல்லது 6 ஸ்பீட் மெனுவல் கியர் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதில் கூடுதலாக, 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் மில்கள் 82 bhp மற்றும் 114 Nm பீக் டார்க் கொண்டிருப்பதுடன், இவை 5 ஸ்பீட் மெனுவல் டிரான்மிஷன் உடன் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும். கடைசியாக, 1.4 லிட்டர், இன்ஜின்கள் மாற்றப்பட்டு புதிய கியா இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின்கள் 89 bhp மற்றும் 220 Nm பீக் டார்க்கில் இயங்குவதுடன், 6 ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வென்யூ கார்கள் கடந்த ஜூலை மாதம், அதிகம் விற்பனையாகும் காராக இருப்பதுடன், கடந்த மாதத்தில் மட்டும் இந்தியாவில் 9 ஆயிரத்து 585 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இன்று வரை இந்த கார்கள் அதிக விற்பனையாகும் காராக இருந்து வருகிறது. மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் கடந்த ஜூலை மாத்தில் 5 ஆயிரத்து 302 யூனிட்களை விற்பனை செய்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)