Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

மாருதி சுசூகி XL6 பிரிமியம் எம்பிவி கார்கள் நெக்ஸா டீலர்களிடம் வந்தடைந்தது; முதல் முறையாக வெளியான காரின் புகைப்படம்

மாருதி சுசூகி XL6 பிரிமியம் எம்பிவி கார்கள் நெக்ஸா டீலர்களிடம் வந்தடைந்தது; முதல் முறையாக வெளியான காரின் புகைப்படம்

மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம், புதிய XL6 பிரிமியம் எம்பிவி-களை வரும் 21ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த அறிமுகத்திற்கு முன்பு இந்த எம்பிவி-கள் இந்தியாவின் பல்வேறு பகுதியில் உள்ள நெக்ஸா டீலர்ஷிப்களுக்கு வந்தடைந்து விட்டது. புதிய மாருதி XL6 எம்பிவி கார்களின் திட்டமிடப்படாத முதல் புகைப்படம் இந்தியன் ஆட்டோ தகவல் நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியானது.

மாருதி சுசூகி XL6 பிரிமியம் எம்பிவிகள் 6 சீட்களுடன் இருக்கும். இந்த கார்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள நெக்ஸா அவுட்லெட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இரண்டு பிரிவுகளில், நான்கு வகைகளாக ஜெட்டா மெனுவல்/ ஜெட்டா ஆட்டோமேடிக் மற்றும் ஆல்ஃபா மெனுவல்/ ஆல்ஃபா ஆட்டோமேடிக் வகைகளில் கிடைக்கிறது. இந்த காரின் கலர் ஆப்சன்கள், மெட்டாலிக் பிரிமியம் சில்வர், மெட்டாலிக் மேக்மா கிரே, பிரிமியம் அபுர்ன் ரெட், பெர்ல் பிரேவ் காக்கி, பெர்ல் ஆர்டிக் ஒயிட் மற்றும் நெக்ஸா ப்ளூ கலரை உள்ளடக்கியதாக இருக்கும்.

மாருதி சுசூகி XL6 கார்களின் விலை 9 முதல் 11 லட்சம் ரூபாய் விலைக்கு இடைப்பட்டதாக இருக்கும். இந்த கார்கள் மஹிந்திரா மராஸ்ஸோ கார்களுக்கு போட்டியாக இருக்கும். மாருதி சுசூகி எர்டிகா கார்களை அடிப்படையாக கொண்ட இந்த கார்களில் செய்யப்பட்டுள்ள காஸ்மெடிக் மாற்றங்கள், இந்த கார்கள், எர்டிகா கார்களில் இருந்து வேறுபட்டு இருக்கும்.

இந்த கார்களின் முன்புற வடிவமைப்பு ஸ்போர்ட்ஸ் வடிவிலான புதிய டிசைன்களுடன் இருக்கும். மேலும் இதில் எல்இடி ஹெட் மற்றும் டெயில் லேம்ப்கள், மேம்படுத்தப்பட்ட எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் புதிய முன்புற பம்பர் மற்றும் கிரில்களுடன் இருக்கும். கூடுதலாக இதில் ரூஃப் ரெயில்கள், ஸ்கீட் பிளேட்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் பிளாக் கலர் பினிஷில் இருக்கும்.

இந்த காரின் இன்டீரியர்களில் 6 சீட் கொண்ட லேஅவுட்களுடன் நான்கு கேப்டன் சீட்கள் மற்றும் பிளாக் மற்றும் பிளம் கலர் ஸ்கீமில் இருக்கும். இதில் உள்ள டாஷ் போர்டுகள் பிளாக் கலரில் ஃப்காஸ் வுட் இன்சர்ட்கள் மற்றும் கூடுதலாக ஸ்மார்ட்பிளே ஸ்டுடியோகளுடன் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி கொண்டதாக இருக்கும்.

ஹார்ட்டெக் பிளாட்பார்மில் தயாரிப்பட்ட XL6 கார்களில் பாதுகாப்பு வசதிகளாக, டூயல் முன்புற ஏர்பேக்ஸ், முன்புற சீட் பெல்ட்களுடன் ப்ரீ டென்சனர்கள், அதிக ஸ்பீட் வார்னிங் சிஸ்டம், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஏபிஎஸ், இபிடி மற்றும் இஎஸ்பி போன்றவை வழக்கம் போலவே பொருத்தப்பட்டுள்ளது.

மாருதி XL6-கள் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்சன்களில் மட்டுமே கிடைக்கிறது. K15B 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கள் பிஎஸ்6 விதிக்கு உட்பட்டதாக இருக்கும். மேலும் இவை 105 hp ஆற்றல் மற்றும் 138 Nm டார்க் கொண்டதாக இருக்கும். இதில் உள்ள டிரான்மிஷன் ஆப்சன்கள் மெனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ஆப்சன்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

மஹிந்திரா மராஸ்ஸோ கார்களை தவிர்த்து மாருதி XL6 கார்கள் கூடுதலாக ரெனால்ட் லாட்ஜி-களுக்கும் போட்டியாக இருக்கும். ஆன்லைனிலும், நெக்ஸா அப்ளிகேஷன் அல்லது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள நெக்ஸா டீலர்ஷிப்களிலும் இந்த கார்களுக்கான புக்கிங் செய்து கொள்ளலாம். XL6 வகைகளை பிரபலப்படுத்தும் வகையில், மாருதி சுசூகி நிறுவனம் புதிய டீசர் வீடியோ-களை வெளியிட்டுள்ளது. இதுமட்டுமின்றி நெக்ஸா பிராண்ட் அம்பாசிட்டராக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Image Source: Rush Lane, Indian AUTO Information/ Facebook

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)