இந்தியன் FTR 1200 S, FTR 1200 S ரேஸ் ரிப்ளிக்கா பைக்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப விலை ரூ. 15.99 லட்சம்

இந்தியன் FTR 1200 S, FTR 1200 S ரேஸ் ரிப்ளிக்கா பைக்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப விலை ரூ. 15.99 லட்சம்

இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம், இந்தியன் எஃப்.டி.ஆர் 1200 எஸ் மற்றும் எஃப்.டி.ஆர் 1200 எஸ் ரேஸ் ரிப்ளிக்கா பைக்கள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தியன் எஃப்டிஆர் 1200 பைக்களின் விலை 15.99 லட்சம் ரூபாயிலும், எஃப்டிஆர் ரேஸ் ரிப்ளிக்கா வகைகள் 17.99 லட்சம் ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

அனைத்து விலைகளும் இந்தியாவில் எக்ஸ்ஷோரூம் விலையாகும். இரண்டு மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான அறிவிப்பையும், இதற்கான விலையையும் கடந்த 2018ம் ஆண்டில் இந்தியன் மோட்டார் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த நிறுவன தயாரிப்புகள், ஏற்கனவே வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதுடன், இந்தியன் மோட்டார்ஸ் டீலர்ஷிப்களில் 2 லட்சம் ரூபாய் டோக்கன் அட்வான்ஸ் செலுத்தி புக்கிங் செய்து கொள்ள தொடங்கி விட்டனர்.

இந்தியன்ஸ் சாம்பியன்ஷிப் வெற்றி பெற்ற எஃப்டிஆர் 750 பிளாட் டிராக் ரேஸ் பைக்களால் கவரப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. எஃப்டிஆர் சிரீஸ்கள் புதிய லிக்யுட் கூல்டு 1,203cc V-டூவின் இன்ஜின்களுடன் 120 bhp மற்றும் 112.5 Nm பீக் டார்க் கொண்டதாகவும் இருக்கும். மேலும், இந்த இன்ஜின்கள் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

எஃப்டிஆர் 1200 எஸ் பைக்களில் பிரிமியம் வசதிகளாக, போஸ் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல்களுடன் 6-ஆக்சிஸ் இண்டீரியல் சென்சார்களுடன் லீன் சென்சிடிவ் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ்களுடன் இருக்கும். இதுமட்டுமின்றி இவை ஸ்போர்ஸ், ஸ்டாண்டர்ட் மற்றும் ரெயின் என மூன்று ரைடிங் மோடுகளுடன், 4.3 இன்ச் முழு கலர் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் கன்சோல்களுடன் இருக்கும்.

இந்த இன்ஜின்கள் ஸ்கவுட் வாகன இன்ஜின்களாக கவரபட்டது என்றலும், இதில் 80 விழுக்காடு புதிய உபகரணங்களுடன் அதிக அழுத்தம் கொண்ட விகிதத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இருந்தாலும், இது முதல் தயாரிப்பு வெர்சன் இந்தியன் மோட்டார் சைக்கிள்களாக இருப்பதுடன், இவை குரூசர்களுடன் இருப்பதுடன், ஹெவிவெயிட் இந்தியன் மோட்டார் சைக்கிள்களுடன் ஒப்பிடும் போது லேசானதாக இருக்கும்.

இந்தியன் நிறுவனம், எஃப்டிஆர் 1200 வகை பைக்களை இந்தியாவின் CBU ரூட் வழியாக மற்ற இந்தியன் மாடல்களை போன்று கொண்டு வந்துள்ளது. எஃப்டிஆர் 1200 பைக்கள் புதிய பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ள முதல் மோட்டார் சைக்கிள்களாக இருக்கும். இந்நிலையில், ஸ்ட்ரீட்பைட்டர் ஸ்டைலை அடிப்படையாக கொண்ட எஃப்டிஆர் 1200 பைக்கள் அடுத்த ஆண்டு மாடல் லைன்-அப்களை இருக்கும் என்றும், அட்வென்சர் டூரிங் மாடல்கள் 2021ம் ஆண்டு மாடல்களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)