Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

ஒகினாவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பண்டிகை கால சிறப்பு சலுகைகள் அறிவிப்பு!

ஒகினாவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பண்டிகை கால சிறப்பு சலுகைகள் அறிவிப்பு!

குருகிராமை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம், எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு முதல் முறையாக எலக்ட்ரிக் வாகனங்கள் லைன்-அப்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிறுவனம், இ-ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இந்த மாதம் முதல் தொடங்கும் இந்த சலுகை வரும் அக்டோபர் 31ம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகைகள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். இத்துடன் 20 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு வீட்டு உபயோக பொருட்களை வெல்லும் வாய்ப்பும் உள்ளது. கூடுதலாக, எலக்ட்ரிக் டூ-வீலர்களை வாங்கும் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் ஒருவருக்கு சர்வதேச சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முயற்சி குறித்து ஒகினாவா ஆட்டோடெக் நிறுவன நிறுவனர் மற்றும் எம்.டி, ஜீதேந்தர் சர்மா பேசுகையில், எதிர்கால போக்குவரத்துக்கு எலக்ட்ரிக் வாகனங்களே பயன்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்த உதவும் வகையில் அரசும் சலுகைகளை அளித்துள்ளது. மத்திய அரசு பட்ஜெட் மற்றும் ஜிஎஸ்டி 7 சதவிகிதம் குறைக்கப்பட்டது போன்றவை எங்கள் வாடிக்கையாளர்களை எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க வழிவகை செய்துள்ளது. எங்கள் நிறுவனத்தின் தற்போதைய பிரச்சாரமும் வாடிக்கையாளர்களை ஒகினாவா குடும்பத்தில் இணைக்கவே முயற்சிகள் எடுத்து வருகிறோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இ-ஸ்கூட்டர்களுக்கு தற்போது அதிக டிமாண்ட்கள் ஏற்பட்டுள்ளது கண்கூடாக தெரிகிறது. இதனால் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இ-ஸ்கூட்டர்களை கவர்ந்திழுக்கும் விலையில் விற்பனை செய்ய உள்ளோம். விழாகாலங்களான சுந்திர தினம், ரக்ஷா பந்தன், நவராத்திரி, தசரா மற்றும் தீபவாளி போன்றவற்றை மனதில் கொண்டு எங்கள் வாடிக்கையாளர்களை எலக்ட்ரிக் டூ-வீலர்களை வானக்க ஊக்குவித்து வருகிறோம் என்றார்.

ஒகினாவா நிறுவனம் தனது வாகனங்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே புதிய சலுகைக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதம் குறைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து வெளியாகியுள்ளது. இந்த ஜிஎஸ்டி குறைப்பு கடந்த ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக இந்த சலுகைகளை அளித்துள்ளதுடன், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான விலையை குறைத்துள்ளது. ஒகினாவா லைன்-அப்கள் ரைடு மற்றும் பரடைஸ் ஸ்கூட்டர்களாக ஒருங்கிணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்கூட்டர்கள் லீட் ஆசிட் மற்றும் லித்தியம் இயான் பேட்டரி ஆப்சன்களுடன் கிடைக்கிறது.

விழாகாலத்தை முன்னிட்டு எங்கள் வாடிக்கையாளர்களை சுற்றுச்சூழலை பாதிக்காத மற்றும் குறைவான விலை கொண்ட எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தச் செய்வதே எங்கள் நோக்கமாகும். இதன் மூலம் நாட்டின் எலக்ட்ரிக் போக்குவரத்துக்கு மாற்றும் திட்டத்தில் இணைய செய்வோம். இதுமட்டுமின்றி ஒகினாவா ஸ்கூட்டர்களை வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் சலுகை கிடைக்கும் என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறோம் என்றும் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்த் சலுகைகளுடன் கூடுதலாக எங்கள் டீலர்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். விழாகால திட்டங்களுடன் ஜிஎஸ்டி விலை குறைப்பு போன்றவை இ-ஸ்கூட்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறோம் என்றும் ஷர்மா கூறியுள்ளார்.

ஒகினாவா நிறுவனத்தை தவிர மற்ற வாகன தயாரிப்பாளர்களும் விழா கால சலுகைகளை விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒன்பது மாதங்களாக ஆட்டோ தொழில்துறை மெதுவாக இயங்கி வருகிறது இதனால் எதிர்வரும் விழா காலத்தை எதிர்பார்த்து தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். இந்த நேரத்தில், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு டிமாண்ட் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் மாருதி சுசூகி நிறுவன தலைவர் ஆர்.சி.பர்கவா பேசுகையில், இந்தாண்டின் மூன்றாம் காலாண்டில் ஆட்டோ துறை ஏற்றம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் விழா காலம் ஆட்டோ துறையில் பெரியளவிலான உயர்வை உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)