புதிய தலைமுறை ஹூண்டாய் கிராண்டு i10 நியோஸ் கார் சென்னை ஆலையில் இருந்து தயாரிப்புகளை துவங்கியது

புதிய தலைமுறை ஹூண்டாய் கிராண்டு i10 நியோஸ் கார் சென்னை ஆலையில் இருந்து தயாரிப்புகளை துவங்கியது

ஹூண்டாய் நிறுவனம் தனது கிராண்ட் i10 நியோஸ் கார்களை இந்தியாவில் வரும் 20ம் தேதி அறிமுகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த காரின் அறிமுகம் நெருங்கி வரும் வேளையில், இந்த கார்களை சென்னையில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்க உள்ளதாகவும், நிறுவனத்தின் முதல் கார் இந்த தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் என்றும் அதிகாரிப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் அதிக வசதிகள் இடம் பெறுவதுடன்,சிறந்த மதிப்பு கொண்டதாக இருக்கும் என்று ஹூண்டாய் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்-கள் முதல் முறையாக வெளியிட்டது. மேலும் இந்த கார் குறித்த புகைப்படங்களை வெளியிட்டது. மூன்றாவது தலைமுறை கிராண்ட் i10 (i10என்று சர்வதேச அளவில் அழைக்கப்படுகிறது) இந்தியாவுக்காக மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மாடல்கள் ஐரோப்பாவில் அறிமுகம் செய்வதற்கு முன்பு இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில், கிராண்ட் i10 நியோஸ்-கள் தற்போது உள்ள மாடல்களுடன் இணைந்தே வெளியாகும். இந்த கார்களுக்கான புக்கிங்கை, புதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்-கள் அறிமுகம் செய்வதற்கு முன்பு தொடங்க உள்ளது.

ஸ்டைல்களை பொருத்தவரை, இந்த கார்கள் முற்றிலும் புதிய சான்ட்ரோ போன்று இருக்கும். இதில் காச்கேடிங் கிரில் லுக்களை கொண்டிருக்கும். இதில் உள்ள கிரில்களில் டே டைம் ரன்னிங் லைட்கள், இந்த ஹாட்பேக்கிற்கு நல்ல லுக்கை கொடுக்கும். இந்த காரின் புரோப்பைல் காம்பேக்ட் லுக் உடன் ஃப்ளோட்டிங் ரூப்களுடன் சி பில்லர்களை கொண்டிருக்கும் இவை உயரமான நிலை கொண்ட மாடல்களை களைந்து விட உதவியாக இருக்கும். ஹூண்டாய் நிறுவனம் இந்த் காருக்கான பின்புற டிசைன்களை இன்னும் முழுமையாக வெளியிடவில்லை. ஆனாலும், சிறியளவிலான வார்ப் அரவுண்ட் டெயில் லைட்கள் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய மனிதர்களுக்கான கிராண்ட் i10 நியோஸ்கள் உயரமான ரூப்களுடன், பெரியளவிலான ஹெட்ரூம் பின்புறம் மற்றும் முன்புறத்திலும் இருக்கும். பக்கவாட்டு பகுதிகள் திறமையான லைன்களுடன், ஆர்ப்பாட்டமான தோற்றத்தில் கூடுதலாக ஸ்டைலான ORVM-களுடன் இருக்கும். இது திரும்பும் சிக்னல்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. உறுதியான அப்வேர்ட் ஸ்விங் சி பில்லர் மற்றும் அகலமான பம்பர்களுடன் காரின் தோற்றத்திற்கு ஆர்ப்பாட்டமான தோற்றதை கொடுக்கும். புதிய விண்டோ லைன்கள் உறுதியாகவும், கருப்பு நிறத்தில், குரோம் டோர் ஹேண்டில்கள் மற்றும் திமிங்கில துடுப்பு ஆண்டனா மற்றும் டூயல்-டோன் அலாய் வீல்களுடன் இருக்கிறது. இது கிராண்ட் i10 நியோஸ்-களுக்கு புதிய மார்க்கெட் லுக்கை கொடுக்கும்.

2020 ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்- கள் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்சன்களுடன் 10 வகைகளாக கிடைக்கிறது. ஏரா அடிப்படை வகைகளாக உள்ள ஏழு வகைகளை பெட்ரோல் வெர்சன்களாகவும், மேக்னா, ஸ்போர்டிஸ் மற்றும் அஸ்டா போன்றவற்றை டாப் ரேஞ்ச் வகையாகவும் வெளியிட்ட கார் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். டீசல் வெர்சன்களை பொருத்தவரை, மேக்னா, ஸ்போர்ட்டிஸ் மற்றும் அஸ்டா வகைகளை கிடைக்கிறது. ஸ்போர்டிஸ் பெட்ரோல் வகைகள் கூடுதலாக டூயல்-டோன் டிரிம்களாகவும் கிடைக்கிறது. ஹூண்டாய் நிறுவனம் டீசல் வகைகளை விட பெட்ரோல் வகைகளுக்கு அதிக டிமாண்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.

இன்ஜின் ஆப்சன்களாக ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்களில் தற்போது உள்ள மாடல்கள் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் CRDi டீசல் வகையாக இருந்து ஆற்றல் கொண்ட ஹாட்ச்பேக் போன்று இருக்கும். இதிலிருந்து இந்த காரின் பவர் அவுட்புட்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெளிவாக தெரிகிறது. ஆனாலும், இந்த இன்ஜின்கள் பிஎஸ்6 ரெடி இன்ஜின்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் கூடிய கிராண்ட் i10 நியோஸ்கள் 5 ஸ்பீட் மெனுவல், கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். இதில் ஆட்டோமேட்டட் மெனுவல் டிரான்மிஷன்களும் கிடைக்கும்.

இந்த யூனிட்கள் ஹூண்டாய் சான்ட்ரோ போன்று இருக்கும், ஆனாலும் மாறுபட்ட வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. கிராண்ட் i10 நியோஸ் பெட்ரோல் ஏஎம்டிகள் இரண்டு வகைகளில் அதாவது மேக்னா மற்றும் ஸ்போர்டிஸ் என்று பெயரில் கிடைக்கிறது. ஸ்போர்ட்டிஸ் வகையில் ஏஎம்டி ஆப்சன்களும் கிடைக்கிறது. ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்கள், பிரி ரெட், போலார் ஒயிட், டிபிஹூன் சில்வர், டைடன் கிரே, அக்வா டீல் அண்ட் ஆல்பா ப்ளூ ஆகிய ஆறு கலர்களில் கிடைக்கிறது.

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்களை சென்னையில் தயாரிக்கப்பட்டு வெளியிடுவது குறித்து குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எஸ் எஸ் கிம் தெரிவிக்கையில், எங்கள் நிறுவனம் 2.7 மில்லியன் ஹாப்பி கஸ்டமர்களை பெற்றுள்ளதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்தியாவில் i10 பிராண்ட்கள் (i10 மற்றும் கிராண்ட் i10) போன்றவை அதிகளவு வாடிக்கையாளர்களால் விரும்பப் படுகிறது. இந்நிலையில் உலக வரலாற்றில் முதல் முறையாக மூன்றாம் தலைமுறை கிராண்ட் i10 நியோஸ்கள் உள்ளுரியில் தயாரிக்கப்பட்டு வெளியாக உள்ளது எங்களுக்கும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கும் என்றார்.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)