ஜிஎஸ்டி வரி குறைப்புக்குப் பிறகு ஒகினாவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை குறைந்தது!

ஜிஎஸ்டி வரி குறைப்புக்குப் பிறகு ஒகினாவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை குறைந்தது!

ஒகினாவா ஸ்கூட்டர்கள் நிறுவனம், தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான விலை குறைப்பை அறிவித்துள்ளது. இந்த நிறுவனம், லிட்-ஆசிட் ஸ்கூட்டர்களுக்கான விலையை 2,500 முதல் 4,700 ரூபாய் விலையிலும், லி-இயான் ஸ்கூட்டர் வகைகளின் விலை 3,400 முதல் 8.600 ரூபாய் வரையில் குறைக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி விலை 12 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, கவுன்சில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர் அல்லது சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கான ஜிஎஸ்டி ரேட்டை 18 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக குறைத்துள்ளது.

இந்த விலை குறைப்பு கடந்த ஒன்றாம் தேதி முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, அதேர் எனர்ஜி நிறுவனமும் தங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களான 450 மற்றும் 340 வகைகளின் விலையை 9,000 ரூபாய் வரை குறைந்துள்ளது. அம்பேரே வாகனங்கள் நிறுவனம், தங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான போஸ்ட் ஜிஎஸ்டி மாற்றத்திற்கு பின்னர் தற்போது 5,000 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.

ஒகினாவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் விலை குறைப்பு குறித்து கருத்து தெரிவித்த ஒகினாவா ஆட்டோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜீதேந்தர் சர்மா, யூனியன் பட்ஜெட் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததுடன், ஜிஎஸ்டி ரேட் குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஏழு சதவிகித ஜிஎஸ்டி குறைப்பால், ஏழு சதவிகித ஜிஎஸ்டி குறைப்புக்கு பின்னர் ஒகினாவா ஸ்கூட்டர்களின் விலை 2,500 முதல் 8,600 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இவை FAMA-II மானியத்துடன் ஒருங்கிணைந்த விலை கொண்டதாக இருக்கும். இதுமட்டுமின்றி அனைத்து வகை ஸ்கூட்டர்களும் நகர்ப்புற பயணிகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்றார்.

தற்போதைய விலை குறைப்பு, எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் IC இன்ஜின் வாகனங்களுக்கு இடையிலான விலை வேறுபாட்டை குறைக்கும். இதனால், அதிக மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வழி வகை செய்யும். ஜிஎஸ்டி விலை குறைப்பால் இந்தியாவில் எலக்ட்ரிக் டூவிலர்களின் எக்ஸ்ஷோரூம விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி இந்த வாகனங்களுக்கான டிமாண்டும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)