மாருதி XL6 எம்பிவி காரை பற்றிய முழு தகவல் உள்ளே!

மாருதி XL6 எம்பிவி காரை பற்றிய முழு தகவல் உள்ளே!

மாருதி எக்ஸ்எல்6 எம்பிவி அறிமுகத்திற்கு முன்பு, புகைப்படங்கள் லீக் ஆனது

விரைவில் அறிமுகமாக உள்ள மாருதி எக்ஸ்எல்6 எம்பிவிகளுக்கான புதிய புகைப்படங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. இந்த புகைப்படங்கள், ஏற்கனவே இணைய தளத்தில் பரவிய ஸ்பை ஷாட்கள் போன்று இல்லாமல், அதிகாரப்பூர்வ புகைப்படங்களாகவே உள்ளன.

எர்டிகாவை அடிப்படையாக கொண்ட மாருதி எக்ஸ்எல்6 வகைகளில், ட்ரெப்சாய்டல் கிரில் சென்டரில் குரோம் பார் உடன் இருக்கும். இந்த கிரில்கள் மறுடிசைன் செய்யப்பட்ட ஹெட்லேம் கிளச்சர்கள் எல்இடிகளுடன் இருக்கும். டூயல்-டோன் முன்புற பம்பர்களில் கூடுதலாக புதிய மற்றும் வசதிகள் கொண்ட வட்டவடிவ பனிகால விளக்குகள் மற்றும் சில்வர் ஸ்கீட் பிளேட்களும் பொருத்தப்பட்டுள்ளன.

எக்ஸ்எல்6 வாகனத்தின் பக்கவாட்டில், பிளாக் பிளாஸ்டிக் கிளேடிங்களுடன் வீல் ஆர்க்களுடன் இருக்கும். இதில் கூடுதலாக பிளாக் கிளேடிங்களுடன் சில்வர் இன்சர்ட்களுடன் கூடிய டோர் சில்களும் உள்ளன. இந்த கார்கள், பிளாக்-அவுட் ‘பி’ மற்றும் ‘சி’ பில்லர்கள், ரூஃப் ரெயில், பிளாக் ORVM-களுடன் கூடிய இன்டகிரெட்டாட் திரும்பும் சிக்னல்கள் மற்றும் குரோம் டோர் ஹேண்டில்களுடன் இருக்கும். மேலும், இந்த கார்கள் பிளாக் அலாய் வீல்கள் மூலம் இயங்கும்.

எக்ஸ்எல்6 காரின் உட்புறத்தில், இரண்டாம் வரிசையில் தனியாக கேப்டன் சீட்கள் உள்ளன. இதுமட்டுமின்றி பிளாக் டாஷ்போர்டுகளுடன் ஃப்கஸ் வுட் டிரிம் மற்றும் சில்வர் இன்சர்ட்களும் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக டச் ஸ்க்ரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்களும் பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி எக்ஸ்எல்6 கார்கள், 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இஞ்சின்களுடன் மைல்ட் ஹைபிரிட் டெக்னாலஜி உடன் இயங்கும். இந்த டெக்னாலஜிகள் சியாஸ் மற்றும் எர்டிகா மாடல்களில் கிடைக்கிறது. இந்த இஞ்சின் 103 bhp மற்றும் 138 Nm டார்க் கொண்டதாக இருப்பதுடன், 5 ஸ்பீட் மெனுவல் அல்லது 4 ஸ்பீட் ஆட்டோமேடிக் டிரான்மிஷன் உடன் இணைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image Source: Gaadi Waadi

Source: https://www.autonews360.com/tamil/news/cars/maruti-suzuki-xl6-mpv-leaked-ahead-launch/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)