இந்தியன் எஃப்.டி.ஆர் 1200 எஸ், 1200 எஸ் ரேஸ் ரிப்ளிகா பைக்கள் வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வெளியீடு

இந்தியன் எஃப்.டி.ஆர் 1200 எஸ், 1200 எஸ் ரேஸ் ரிப்ளிகா பைக்கள் வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வெளியீடு

இந்தியன் மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம், தனது இந்தியன் எஃப்.டி.ஆர் 1200 எஸ், 1200 எஸ் ரேஸ் ரிப்ளிகா மோட்டர் சைக்கிள்களை வரும் 19ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பைக்கள் அதிகாரப்பூர்வ அறிமுகம் செய்யப்பட்ட போதும், இதற்கான விலை கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தியன் எஃப்.டி.ஆர் 1200 எஸ் பைக்களின் விலை 14,99 லட்ச ரூபாயாகவும், 1200 எஸ் ரேஸ் ரிப்ளிகா பைக்களின் விலை 15.49 லட்ச ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டது (எக்ஸ் ஷோரூம் விலை இந்தியாவில்). இந்த விலையில் மாற்றம் இருக்குமா அல்லது அறிவிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இந்தியன் மோட்டார் சைக்களில் நிறுவனம், இந்த பைக்களுக்கான புக்கிங்கை கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலே தொடங்கி விட்டது. இந்த பைக்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்தியன் மோட்டார் சைக்கிள் இந்தியா டீலர்ஷிப்களில் 2 லட்சம் ரூபாய் டோக்கன் அட்வான்ஸ் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம்.

சாம்பியன்ஸ்ஷிப் வெற்றியை பெற்ற FTR 750 பிளாட்-டிராக் ரேஸ் பைக்களால் கவரப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள FTR சீரிஸ்களில், புதிய லிக்யூடு-கூல்டு 1,203 cc வி-டூவின் இன்ஜின்களுடன் 120 bhp மற்றும் 112.5 Nm பீக் டார்க் கொண்டதாக இருக்கும். இவை 6 ஸ்பீட் டிரான்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

எஃப்.டி.ஆர் 1200 எஸ் பைக்களில் பெரியவிளான பிரிமியம் வசதிகள் உள்ளன. அவை, போஸ்க் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்களுடன் கூடிய ஆறு-ஆக்சில் இன்சர்ட்டியல் சென்சார், ரைடிங் மோடு செலக்டர், அனைத்தையும் கட்டுப்படுத்தும் பிரகாசமான 4.3 இன்ச் கலர் டச் ஸ்க்ரீன் கன்சோல்களை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த இன்ஜின்கள் ஸ்காட் வகைகளால் கவரப்பட்டு உருவாக்கப்பட்டது. ஆனாலும், இதில் 80 சதவிகித புதிய உபகரணங்களுடன் உயர்ந்த அழுத்த விகித்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியன் எஃப்.டி.ஆர் 1200 பைக்கள் புதிய பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. ஸ்டிரீட்பைட்டர் ஸ்டைல் மாடல் அடிப்படையிலான எஃப்.டி.ஆர் 1200-கள் அடுத்த ஆண்டுக்கான மாடல் லைன் அப்களுடன் இருக்கும். இத்துடன் அட்வென்சர் டூரிங் மாடல் 2021-ல் அறிமுகமாகும். ஸ்டிரீட் பைட்டர்கள் எஃப்.டி.ஆர் 1200 ஸ்போர்ஸ் என அழைக்கப்படும் என்றும், அட்வென்சர் டூரிங் மாடல்கள் எஃப்.டி.ஆர் 1200 ரிலே என அழைக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)