வெறும் ரூபாய் 349 செலுத்தி இனி ஹீரோ மோட்டார் சைக்கிள்களை உங்கள் வீட்டு வாசலிலேயே பெற்றுக்கொள்ளலாம். ஹோம் டெலிவரி செய்யும் திட்டத்தை துவங்கியுள்ளது ஹீரோ மோட்டர்கார்ப்

வெறும் ரூபாய் 349 செலுத்தி இனி ஹீரோ மோட்டார் சைக்கிள்களை உங்கள் வீட்டு வாசலிலேயே பெற்றுக்கொள்ளலாம். ஹோம் டெலிவரி செய்யும் திட்டத்தை துவங்கியுள்ளது ஹீரோ மோட்டர்கார்ப்

தங்கள் இணையதளமான HGPmart.com ஆன்லைன் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் ஆர்டர் செய்த டூவிலர்களை இன்று ஹோம்டெலிவரி செய்ய உள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வசதி மூலம் தற்போது நீங்கள் உங்கள் புதிய ஹீரோ ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள்களை உங்கள் வீட்டு வாசலிலேயே டெலிவரி பெற்று கொள்ளலாம். இதற்காக நீங்கள் குறைந்தபட்ச கட்டணமாக 349 ரூபாய் செலுத்த வேண்டும்.

இதுகுறித்து ஹீரோ நிறுவனம் தெரிவிக்கையில், இந்த ஹோம்டெலிவரி சேவைகள், மும்பை, பெங்களுரூ மற்றும் நொய்டா ஆகிய மூன்று நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் இதை 25 நகரங்களுக்கு விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் ஹோம்டெலிவரி திட்டத்தில் இதுவரை 4,000 புக்கிங் பெறப்பட்டுள்ளதாகவும் ஹீரோ நிறுவனம் கூறியுள்ளது.

இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த ஹீரோ மோட்டோகார்ப், விற்பனை, ஆப்டர்சேல்ஸ் & பார்ட்ஸ் பிசினஸ் விற்பனைத் தலைவர் சஞ்சய் பன், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் நாங்கள் தொடர்ச்சியாக பல்வேறு மேம்பாடுகளுக்காக முதலீடு செய்து வருகிறோம். புதிய முயற்சிகளுடன் கூடிய வர்த்தக மாதிரிகளை உருவாக்கி, அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கி வருகிறோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், டூவிலர் வகைகளில், எங்கள் புதிய முயற்சிகள் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். இன்றைய இளைஞர்கள், ஒவ்வொரு பொருளை வாங்கும் போதும் அந்த பொருட்களுக்கான மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் பெற விரும்புகின்றனர். இதற்காக எங்கள் நிறுவனம், சிறந்த திட்டத்தை உருவாக்கி, புதிய மார்க்கெட் சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. முதல் முயற்சியாக இ-காமர்ஸ் பிரிவில், புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளோம். இந்த சேவையில் மோட்டார்சைக்கிள் அல்லது ஸ்கூட்டர்களை நீங்கள் விரும்பும் முகவரியில், அது உங்கள் வீடாக இல்லாத நிலையிலும் ஹோம்டெலிவரி செய்ய உள்ளோம் என்றார்.

இந்த ஹோம் டெலிவரி சேவையில், நீங்கள் ஹீரோ நிறுவன இணையதளத்தில், நீங்கள் வாங்க விரும்பும் மாடலை தேர்வு செய்வதுடன், உங்களுக்கு அருகே உள்ள டீலர்ஷிப்பையும் தேர்வு செய்ய வாங்கி கொள்ளலாம். இதற்கான ஆவணங்களை உங்களிடம் இருந்து (உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ) பெற்று கொள்ள எங்கள் பிரதிநிதி உங்களை எந்த நேரத்தில் சந்திக்கலாம் என்பதையும் குறிப்பிடலாம். நீங்கள் வாங்கும் வாகனத்திற்கான பணம் செலுத்தப்பட்டு, வாகனம் பதிவு செய்யப்பட்டதும், நீங்கள் தேர்வு செய்த முகவரியில் வாகனம் டெலிவரி செய்யபபட்டு விடும்.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)