ஆர்தர் 340, 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலை புதிய ஜிஎஸ்டி விலைக்கு பின் ரூ. 9000 வரை குறைகிறது

ஆர்தர் 340, 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலை புதிய ஜிஎஸ்டி விலைக்கு பின் ரூ. 9000 வரை குறைகிறது

பெங்களூரை அடிப்படையாக கொண்டு எலக்ட்ரிக் டூவிலர் தயாரிப்பு நிறுவனமான ஆர்தர் எனர்ஜி நிறுவனம், தங்கள் ஸ்கூட்டர்களுக்கான விலையை குறைத்துள்ளது. ஆர்தர் 340 மற்றும் 450 ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை 9,000 ரூபாய் குறைந்துள்ளது.

இந்த விலை குறைப்பு எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி ரேட் குறைப்பால் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த ஜிஎஸ்டி வரி 12 விழுகாடில் இருந்து 5 விழுக்காடாக, இந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆர்தர் 340 தற்போது 1.02 லட்ச ரூபாய் விலையிலும், ஆர்தர் 450 வகைகள் 1.13 லட்ச ரூபாயிலும் விற்பனை செய்யப்படுகிறது (அனைத்து விலைகளும் ஆன்-ரோடு விலை பெங்களூரில்). சென்னையில், ஆர்தர் 340 வகைகளின் விலை 1.10 லட்சமாகவும், ஆர்தர் 450 வகைகளின் விலை 1.22 லட்சம் ரூபாயில் கிடைக்கிறது (அனைத்து விலைகளும், ஆன்-ரோடு விலையாகும்).

புதிய ஜிஎஸ்டி ரேட்கள், கடந்த யூனியன் பட்ஜெட் அறிவிப்பின் போது, நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்தார். புதிய ரேட்கள் கடந்த மாத இறுதியில் அனுமதி அளிக்கப்பட்டது.

புதிய ஜிஎஸ்டி ரேட்கள், அரசின் முயற்சியான எலக்ட்ரிக் வாகனங்களை ஏற்று கொள்வதை வலியுறுத்தியுள்ளதை தொடர்ந்து அமலுக்கு வந்துள்ளது. குறைந்த ரேட்கள் FAME II மானியத்துடன் கூடிய எலக்ட்ரிக் வாகனங்களுக்கு, அதிகளவில் ஏற்று கொள்ளக்கூடியதுடன், பெரியளவிலான மார்க்கெட் மாற்றங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

ஜிஎஸ்டி ரேட்கள் குறைப்பு இந்தியாவில் மற்ற எலக்டிரிக் வாகன விற்பனையை பாதிக்கும். அதாவது ஒகினாவா ஸ்கூட்டர்கள், ரிவோல்ட் மோட்டார்ஸ் மற்றும் பல ஸ்கூட்டர்களின் விற்பனையை பாதிக்கும்.

ஆர்தர் எனர்ஜி நிறுவனம் தனது சொந்த மாநிலமான பெங்களூரில் கடந்த ஆண்டு முதல் இந்த ஸ்கூட்டர்களுக்கான விற்பனையை துவக்கியது. சென்னையில் இந்தாண்டின் துவக்கத்தில் தொடங்கியது.

இதுமட்டுமின்றி இந்த நிறுவனம், 30 நகரங்களில் அதாவது மும்பை, புனே, ஹைதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் வரும் 2023ம் ஆண்டிற்குள் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஆர்தர் 450 வகைகள் நிறுவனத்தின் சிறந்த வாகனமாகவும், ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் 75 km இயங்கும் வகையில் இருக்கும். மேலும் இந்த ஸ்கூட்டர்கள் டச் ஸ்கிரீன் டிஸ்பிளேகளுடன் கூடிய நேவிகேஷன், பார்க் அசிஸ்டென்ட் மற்றும் பல வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்த ஸ்கூட்டர்கள் 2.5 Nm பீக் டார்க்களை எலக்ட்ரிக் மோட்டார்களில் இருந்து பெற்று கொள்வதுடன், இந்த ஆற்றல் லித்தியம் இயன் பேட்டரியில் இருந்து பெற்று கொள்ளும்.

Source: https://www.autonews360.com/tamil/news/bikes/ather-announces-price-cut-on-electric-scooters-post-new-gst-rates/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)