டுகாட்டி பனிகலே வி4 25 அனிவர்சாரியோ 916 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 54.9 லட்சம்

டுகாட்டி பனிகலே வி4 25 அனிவர்சாரியோ 916 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 54.9 லட்சம்

டுகாட்டி நிறுவனம் ஸ்பெஷல் லிமிடெட் எடிசனாக பனிகலே வி 4 25 அனிவர்சாரியோ 916 பைக் வகையில் 500 பைக்களை மட்டுமே தயாரித்து உலகளவில் விற்பனை செய்ய உள்ளது. லிமிடெட் எடிசன் பைக்கள் இந்தியவில் ஸ்பெஷல் ஆர்டர்களின் பெயரில் வரும் அக்டோபர் மாதம் முதல் 54.9 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை) விற்பனைக்கு வர உள்ளது.

ஸ்பெஷல் எடிசன் பைக்கள் டுகாட்டி 916 பைக்களின் 25-ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் இருக்கிறது. அதிக அழகு கொண்ட சூப்பர் பைக்கள் முழுமையாக வடிவமைக்கப்பட்டு மொத்தமாக 500 பைக்கள் மட்டுமே உலகளவில் விற்பனைக்கு வர உள்ளது.

இதில் ஐந்து பைக்கள், இரண்டு வாரங்களுக்கு முன்பு பிங்க்ஸ் பீக் இண்டர்நேஷனல் ஹில் கிளைம் டுகாட்டி பனிகலே ஸ்ட்ரீட் வி 4 ரேஸிங்கில் உயிரிழந்த கார்லின் டூனே நினைவுக்காக நிதி திரட்ட ஏலத்தில் விடப்பட உள்ளது.

டுகாட்டி 916 பைக்கள் மிகவும் சிறந்த மோட்டார் சைக்கிள்கள் போர்கோ பனிகலே தொழிற்சாலை மற்றும் மறுசீரமைப்பு டிசைன்களுடன் அதிக திறன்களுடன் இருக்கும். எங்கள் நிறுவனத்தின் பரம்பாரியத்தையும் 25-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைவதாக டுகாட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இவை அல்ட்ரா எக்ஸ்குளுச்சிவ் வெர்சன்களுடன் பனிகலே வி4 பைக்கள் எங்கள் திறனை உண்டாக்குவதாக இருக்கும்.

டுகாட்டி இந்தியா மேனேஜிங் டைரக்டர் செர்கி கனோவாஸ் தெரிவிக்கையில், டுகாட்டி பனிகலே வி 4 25 அனிவர்சாரியோ 916 பைக்கள் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த பைக்கள், பைக் ரைடை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, ஏற்ற வகையில் இருப்பதுடன் தனித்துவம் கொண்டதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

டுகாட்டி பனிகலே வி 4 25 அனிவர்சாரியோ 916 பைக்கள், ரேஸிங் வகைகளுக்காகவும், பனிகலே வி 4ஆர் குடும்பத்தில் இருந்து கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது, முன்புற பிரேம், டிசைன்களுடன் டுகாட்டி கோர்ஸ் ஸ்பெசிபிகேஷன்களுடன் இருக்கும்.

சிறப்பு எடிசன் பைக்கள் ஸ்பெஷல் லிவரிகளுடன் போர்ஜ்டு மேக்னிசியம் வீல்கள், டைட்டானியம் டைப்களுடன் அக்ரபோவிக் எக்ஸ்ஹாஸ்ட் மற்றும் டுகாட்டி திறன் கொண்ட உபகரணங்களுடன் நீண்ட பட்டியலை கொண்டிருக்கும். ஸ்பெஷல் எடிசன் அனிவர்சாரியோ 916 பைக்கள் 9-வது ரவுண்ட்களுடன் இந்த வார இறுதியில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லகுனா செகாவில் நடக்கும் உலக சூப்பர்பைக் சாம்பியன்ஷிப்பில் காட்சி படுத்தப்பட உள்ளது.

டுகாட்டி மோட்டார் ஹோல்டிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் – பிரான்செஸ்கோ மிலீசியா, டுகாட்டி மோட்டார் ஹோல்டிங், டுகாட்டி வட அமெரிக்காவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேசன் சின்னாக் மற்றும் கார்ல் ஃபோகார்டி ஆகியோர் பனிகலே வி4 25 அனிவர்சாரியோ 916 பைக்களை லகுனா செகாவில் வெளியிட்டனர். டுகாட்டி நிறுவனம், கடந்த 1990-ம் ஆண்டில் அறிமுகம் செய்த ஒரிஜினல் 916 நான்கு உலக சாம்பியன்ஷிப்களை வென்றது. கார்ல் ஃபோகார்டி மூன்று டைட்டில்களையும், டிராய் கோர்சர் முதல் நான்கு பைக்களில் ஒன்றாக தேர்வானது.

இதுகுறித்து பேசிய கார்ல் ஃபோகார்டி, இந்த அறிமுக விழா மிகவும் ஆச்சரியப்படும் வகையில் இருந்தது. டுகாட்டி பனிகலே வி 4 25 அனிவர்சாரியோ 916 பைக்கள், பெப்பிள் கடற்கரையில் ரைடு செய்யப்பட்டுள்ளது. டுகாட்டி 916 பைக்களை அறிமுகம் செய்வது அருமையாகவும், மறக்க முடியாத வகையிலும் இருந்தது. எனது கேரியரில் இது சிறந்ததாக இருந்ததுடன், உலக சூப்பர்பைக் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முக்கியமானதாகவும் இருக்கும் என்றார்.

இந்த மோட்டார் சைக்கிள்கள் வழக்கமான ஸ்டைல் மற்றும் திறன்களுடன் இருக்கும். இந்த பைக்களின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்ததில் பெருமை அடைகிறேன். இதுமட்டுமின்றி 25 ஆண்டு நிறைவு விழா கொண்டாடும் நேர்ரத்தில் புதிய பைக்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது மகிழ்ச்சி அடைய செய்கிறது என்றார்.

ஒரிஜினல் டுகாட்டி 916 பைக்கள் டுகாட்டி நிறுவனத்தால் 1994 முதல் 1998ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டது. இவை 916 cc, எரிபொருள் இன்ஜெக்டாட், 90 டிகிரி டுவின் இன்ஜின்களுடன் டிரை கிளட்ச்சும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின்கள் 114 bhp ஆற்றலில் 9,000 rpm-லும், 90 Nm பீக் டார்க்கில் 6,900 rpm-லும் இயங்கும். பாரம்பரிய மோட்டார் சைக்கிள் டிசைனர் மாசிமோ தம்புரினி தயாரித்த டுகாட்டி 916 அதிக அழகுடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)