Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

    Coronavirus Covid19 Awareness
     

             Stay aware of the latest information on the COVID-19 outbreak, available on the WHO website and through your national and local public health authority. Don't be mislead by any Social Media or unauthorized websites which may have harmful medical misinformation. Find more information in our Awareness Page

சாமுத்திரிகா லட்சணம் - ஆண்

    Sofi
    • 175 views
    • 5/5 (1 votes)
    By Sofi

    மூன்று வகை ஆண்கள்

    பொதுவாக ஆண்களை சாமுத்திரிகா லட்சணத்தின்படி, மூன்று வகைகளாகப் பிரித்திடுவர். ஓர் ஆண்இம்மூவகைகளில், எவ்வகையைச் சேர்ந்தவர் என்பதை அந்த ஆணின் பிறப்புறுப்பின் நீளத்தைக் கொண்டுதெரிந்துகொள்ளலாம். முந்தைய காலங்களில் மட்டுமல்லாது, இன்றும் கூட திருமணப் பொருத்தம் பார்த்து,மணமகளுக்கும் மணமகனையும், மணமகனுக்கு மணமகளையும் தேர்வு செய்யும் வழக்கம்நடைமுறையில் இருந்து வருகிறது. இவ்வாறு பொருத்தம் பார்க்கும் போது, பிற பொருத்தங்களுடன்,வகைப் பொருத்தமும் பார்க்கப்படுகிறது. இந்த வகை ஆணுக்கு இந்த வகை பெண்ணையே தெரிவு செய்துமணமுடிக்க வேண்டும் என்று உறுதிபடக் கூறுவர். இவ்வாறு வகைப்பொருத்தம் சரியாகஅமைந்திடுமானால், திருமணம் நடந்த பிறகு அத்தம்பதியரின் இல்வாழ்க்கையில் திருப்தியும், சுகமும்,ஆனந்தமும் இருந்திடும்.

     

    ஆண்களை மூன்று வகைகளாக பிரிக்கின்றனர். அவை:

    • முயல் சாதி வகை
    • காளைச் சாதி வகை
    • குதிரைச் சாதி வகை என்பனவாகும்.

     

    முயல் சாதி வகை:

    செவ்வரி படர்ந்த கண்களையும், அரிசி முனை போன்ற வெண்மையான பற்களையும் பெற்றிருக்கும் முயல்சாதி ஆண்களின் முகம், பௌர்ணமி முழு நிலவைப் போன்று இருக்கும். இவர்களுடைய உள்ளங்கைகள்தாமரை மலர் போன்று காணப்படும். இவர்கள் உண்மை விளம்பிகளாக இருப்பார்களே ஒழிய ஒருபோதும்தீயவற்றை எண்ணவோ, பேசவோ மாட்டார்கள். இவர்களுடைய கழுத்துப் பகுதி பருத்துக் காணப்படும்.

     

    இத்தகைய நல்லொழுக்கம் கொண்ட ஆண்களின் பிறப்புறுப்பின் நீளம் சுமார் நாலை அங்குலம் இருக்கும்.மேலும், தாமரை மலரை ஒத்திருக்கும் மணத்தை உடைய விந்தினைப் பெற்றிருப்பார்கள். இவர்கள்பெண்ணுடன் புணரும் காலம், வெகு குறுகிய காலமாகவே இருந்திடும். பெரும்பாலும், சிறிதளவே அதுவும்சூடாக உள்ள உணவையே உண்பார்கள்.

     

    காளைச் சாதி வகை:

    காளைச் சாதி என்பதற்கு ஏற்றபடி, இவ்வகை ஆண்களின் நெற்றிப் பகுதி அகன்று இருப்பதோடு, உயர்ந்ததலைப் பகுதியையும் உடையவர்களாக இருப்பார்கள். இதழ்கள் பருத்தும், காதுகள் தடித்தும், கழுத்துப் பகுதிபருமனாகவும், ஆமையின் முதுகு போன்று உயர்ந்து, வட்டமாய் உள்ள வயிற்றையும், தூலமானஉடம்பினையும், படர்ந்திருக்கும் பெருத்த தோள்களையும் பெற்றிருப்பர்.

     

    சாந்த குணத்தையும், அமைதியான போக்கினையும் கொண்டு வாழும் காளைச் சாதி ஆண்களின் கண்கள்செவ்வரி படர்ந்து இருப்பதோடு, சிவந்த கைகளையும் பெற்றிருப்பார்கள். இவர்கள் நடந்து வந்தால்மதயானை நடந்து வருவதுபோல் ஒருக்கும். சாந்தமும் பொறுமையும் இவர்கள் இயல்பு. எவ்வாறுகார்மேகம் பாராபட்சமின்றி மழையை உலகெங்கும் பொழிகிறதோ, அதே போன்று உயர்ந்தவர், தாழ்ந்தவர்என மனிதர்களை வித்தியாசப் படுத்தி நடந்து கொள்ளாமல், அனைவரையும் ஒன்றாகவே மதித்து நடப்பர்.பசியைப் பொறுத்திட இயலாத இவ்வகைச் சாதி ஆண்கல், பாம்பொன்று நெட்டுயிர்த்து உறங்குவது போன்றதன்மையை பெற்றிருப்பர்.

     

    கபம் மிகுதியாக உள்ள சிலேத்தும உடம்பினைடும். பருத்த விரல்களையும் உடையவர்களாகியஇத்தகியோரின் விந்தானது சுண்ணாம்பு போன்ற உவர் மணத்தைக் கொண்டிருக்கும். இவர்களின்பிறப்புறுப்பானது கிட்டத்தட்ட ஆறேமுக்கால் அங்குலம் இருக்கும்.

     

    குதிரைச் சாதி ஆண்கள்:

    குதிரைச் சாதி ஆண்களுக்கு, முகம், உதடுகள், காது, கழுத்துப் பகுதி ஆகியவை செழுமையாக அமையப்பெற்றிருக்கும். முதுகில் புரளுமளவிற்கு நீளமான தலைமுடியைப் பெற்றிருக்கும் இவ்வகை ஆண்களுக்கு,நீண்ட நீண்ட வெண்மையான பற்கள் இருக்கும். இவர்களுடைய விரல்கள், நகங்கள், மற்றும் கால்கள்பார்ப்பதற்கு விகாரமாய் நீண்டு கோணலாகக் காணப்படும்.

     

    குதிரைச் சாதி ஆண்கள், பெரும்பாலும், கபட நெஞ்சம் கொண்டவர்களாகவே இருந்திடுவர். வெகுநேரம்தூங்கும் இயல்பைக் கொண்ட இத்தகையோரின் கண்கள் உருண்டு, வட்ட வடிவுடன் காணப்படும்.மிகுதியான தாதுவை இவர்கள் பெற்றிருந்தாலும், இவர்களின் விந்து முடை நாற்றம் கொண்டதாகஇருக்கும். பிற சாதி ஆண்களை விட அதிகமான நீளத்தை அதாவது சுமார் ஒன்பது அங்குலம் அளவுள்ளபிறப்புறுப்பைக் கொண்டவர்களாக குதிரை சாதி ஆண்கள் இருப்பார்கள்.

    ஆண்களின் சாதிவகை

     

    பெண்களைப் போலவே ஆண்களிலும் நான்கு வகையுண்டு. அவை

     

    • முயல் சாதி (அ) உத்தம சாதி ஆண்,
    • மான் சாதி (அ) மத்திம சாதி ஆண்,
    • காளை சாதி (அ) அதம சாதி ஆண்,
    • குதிரை சாதி (அ) அதாகம சாதி ஆண் ஆகியவையாகும்.

     

    முயல் சாதி
    ஆண் அழகான உருண்டை முகமும், சிவந்த கண்களும், நடுத்தர உயரமும், மென்மையான உடல்வாகும்உள்ளவனாக இருப்பான். தெய்வ பக்தியும், மிகுந்த அன்பும், பெரியோரிடம் மரியாதையும்,நல்லொழுக்கமும் கொண்டவன். சூடான உணவை குறைவாக உண்பவன்.

     

    மான் சாதி
    அழகிய முகமும், புன்னகை தவழும் உதடுகளும், பரந்த மார்பும், கடின உடல் வாகும் கொண்டவன். தெய்வநம்பிக்கையுள்ளவன. பெரியோரை பெரிதும் மதிப்பவன், உண்மைக்குக் குரல் கொடுப்பவன், கண்டிப்பும்உறுதியும் உள்ளவன்.

     

    காளை சாதி
    மலர்ந்த முகம், அகன்ற நெற்றி, நீண்ட நாக்கு, சிவந்த பருத்த மேனி, சிறிய கால்கள் கொண்டவன். அதிகபசியால் நிறைய உண்பான். மனோதிடமும் தியாக உள்ளமும் உள்ளவன். பாவ புண்ணியங்களுக்குஅஞ்சாதவன். பிற பெண்களோடு அடிக்கடி உறவு கொள்வதில் மிகுந்த விருப்பமுள்ளவன்.

     

    குதிரை சாதி
    கறுத்த பருத்த உடல்வாகும், நீண்ட உதடுகளும், காதுகளும், நெடிய உருவமும் கொண்டவன். உஷ்ணமானதேகமும், தீராத காம வேட்கையும் உள்ளவன். பெரியோரை மதியாதவன், தெய்வ பக்தியில்லாதவன்.மிகுந்த கோபக்காரன். நிறைய உண்பவன். அழகோ அவலட்சணமோ எப்படிப் பட்ட பெண்ணையும் வயதுவித்தியாசமின்றி உறவு கொள்வான்.

    ஆண்கள் சரீரம்(உடலமைப்பு)

    1. தலை - ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம் உண்டு. பின் பகுதிபுடைத்திருப்பின் அறிவு உண்டு. தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரம்.

     

    2. நெற்றி - அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உண்டு. மிகச்சிறுத்திருப்பின் மூடனாவான். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம் உண்டாகும். நெற்றியில்ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடமாம்.

     

    3. கண் - ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான்.கோழி முட்டைக்கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும்.

     

    4. மூக்கு - உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள்பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர்ந்தோ, பெரியஅளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.

     

    5. வாய் - அழகான,சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக,பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப்பேசும். பிறர் செயலில் குற்றம் காணும்.

     

    6. உதடு - உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து,தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்கும்.

     

    7. கழுத்து - ஆண்களின் கழுத்து பருத்தும், மத்திம உயரம் உடையதாகவும் இருப்பின் அதிர்ஷடமாம். மிகஉயரமாகவோ, மிகக் குட்டையாகவோ, நரம்புகள் தெரியும்படியோ இருந்தால் வறுமையாம்.

     

    8. தோள் - தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு.சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த காரியம்முடியாது.

     

    9. நாக்கு - நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கருப்புப்புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடமாம். கருத்தும்,வெளுத்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரமாம்.

     

    10. பல் - மெல்லிய ஒடுக்கமான பற்களை உடையவர்கள் கல்விமான் ஆவர். கூரிய பற்கள் இருப்பின்கோபம் அதிகம் வரும். வரிசை தவறி, ஒன்றுக்கு மேல் ஒன்று இருப்பின் தரித்திரமாம்.

     

    11. காது - காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடமாம்.மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி.

     

    12. கைகள் - நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரைகை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்புதல் கூடாது.கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரமாம். கைகள் ஒன்றுக் கொன்றுவித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின் செல்வந்தன்ஆவான்.

     

    13.மணிக்கட்டு - மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக இருப்பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டுஉயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும், மடக்கும் போதுசப்தம் வந்தாலும் தரித்திரமாம்.

     

    14. விரல்கள் - கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம்உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரமாம். உள்ளங்கை அதிகப் பள்ளமாகஇருந்தால் அற்ப ஆயுளாம். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்குமூலைகளும் சமமான உயரத்தோடு தட்டையாக இருப்பின் அரசனாவான்.

     

    15. மார்பு - ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் முலைக்காம்புகள் எடுப்பாகவும் இருப்பின்அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின்அற்பாயுளாம். ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின்காம இச்சை அதிகம் இருக்கும்.

     

    16. வயிறு - பானை போன்ற உருண்டையான வயிறு இருப்பின் செல்வம் இருக்கும். வயிறு தொங்கினால்மந்த நிலை உண்டாகும். ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேரனாய் இருப்பர். வயிற்றில் மடிப்புகள்இல்லாதிருப்பதே உத்தமம்.

     

    17.முதுகு - சமமான முதுகைப் பெற்றவர்கள் எதிலும் வெற்றி பெறுவர். முதுகில் எலும்புகள் காணப்பட்டால்தரித்திரமாகும்.

     

    18. கால்கள் - கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின்தரித்திரமாம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால்நன்மைகள் பெருகும்.

     

    19. கால்பாதம் - கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறுவான். பாதங்கள் சனதப்பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள்கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்.

    Ratings

    5/5 (1 votes)
    5/5 (1 votes)