Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

தந்தை மகனுக்கு எழுதும் கடிதம் !!

தந்தை மகனுக்கு எழுதும் கடிதம் !!

என் அன்பு மகனே !

இங்கு நானும் என் மனைவியும் நலம் !

நீயும் உன் மனைவியும் நலமா !

நீ அலைந்து திரிந்து
கொண்டு வந்து சேர்த்தாயே
முதியோர் இல்லம்
உலக‌ தரம் மிக்கதாம்
நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள் !
இப்பொழுதுதான் உன்னை பெற்றதில்
பெருமைபடுகிறேன் !

அன்று உனக்கு உணவு ஊட்ட‌
நிலாவை காட்டினேன்
இன்றும் அதே நிலா அங்கயே !
நான் பெற்ற மகனே நீ
என் அருகில் இல்லையே
அந்த‌ நிலவும்
ஏளனாமாய் சிரிக்கிறது என்னை பார்த்து !

உன் காலகள் தடும்மாறும்போது
என் தோள்கள் தந்தேன்
இன்று என் காலகள் தடுமாறுகிறது
உன் தோள்கள் வேண்டாம்
ஒரு ஊன்று கோலை
மட்டுமாவது வாங்கிக் கொடு !!

இரத்ததை பாலாய் ஊட்டிய
உன் அன்னையோ
இன்று இரத்தமே இல்லாமல்
வெறும் ஓடாய் திரிகிறாள் !!

உனக்காக ஓடி ஆடிய
என் காலகளோ
இன்று நடக்க‌ கூட‌
முடியாமல் நடுங்கிக்கொண்டிருக்கிறது !

இறைவனிடம் மன்றாடி
வேண்டி கொள்கிறேன்
எனக்கு இன்னொரு
பிறவி இருந்தால் அதை உடனே நிறுத்திவிடு !
ஏழு ஜென்மத்தில் அடைய
வேண்டிய‌ இன்பத்தை
ஒரே ஜென்மத்தில் அடைந்துவிட்டேன்
உன்னை பெற்றதால் !

போதும் அப்பா !!
போதும் !!!

Meril Jeffery John.J

Meril Jeffery John.J

If This is God's Will then no man can Fight it

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)