சொக்கன்குடி மணல் மாதா ஆலயத்தில் வழிபட்ட மீனவர் பேசும் சக்தி பெற்ற அதிசயம்

சொக்கன்குடி மணல் மாதா ஆலயத்தில் வழிபட்ட மீனவர் பேசும் சக்தி பெற்ற அதிசயம்

சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியில் அதிசய மணல் மாதா ஆலயம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

மிகவும் பிரசித்தி பெற்ற இந்த திருத்தலத்தில் வழிபட்ட வாய் பேச முடியாத மீனவர், பேசும் திறமை பெற்ற அதிசய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் சேவியர் (வயது 51). மீனவரான இவர் 8 மாதமாக வாய் பேச முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து அவர் சொக்கன்குடி அதிசய மணல் மாதா ஆலயத்திற்கு வந்து வழிபட்டுள்ளார். இந்நிலையில் அவர் திடீரென பேசும் சக்தியை பெற்றார்.

இதுகுறித்து சேவியர் கூறியதாவது:–

கடந்த 8 மாதத்திற்கு முன்பு வாய் பேச முடியாமல் ஆகிவிட்டேன். இதனால் என்னால் வேலைக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டேன். கடந்த வாரம் நான் அதிசய மணல் மாதா ஆலயத்திற்கு வந்து வழிபட்டேன். அங்குள்ள கொடிமரத்தின் கீழ் தூங்கினேன். அப்போது எனது கனவில் ஒரு பெண் தோன்றி, ஆலயத்திற்குள் மெழுகுவர்த்தி ஏந்தி வா... என கூறி மறைந்து விட்டார்.

மறுநாள் நான் மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஆலயத்திற்குள் சென்று வழிபட்டேன். அன்னையை நினைத்து சத்தமாக கத்தினேன். இதில் எனக்கு பேச்சு வந்துவிட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

Meril Jeffery John.J

Meril Jeffery John.J

If This is God's Will then no man can Fight it

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)